Headlines

திருகோணமலை நகரசபை வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை நகர சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இன்று மாலை (17) இடம்பெற்றது. மூவின மக்களின் ஒத்துழைப்புடன், ஜமாலியா பிரதேசத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர் தெரிவு மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.            

Read More

கண்டி மாவட்டத்தில் நீர்விநியோக சபைக்கு வரும் மக்கள் அசெளகரியம். பலர் ஏமாற்றத்துடன்..

-ஜே.எம்.ஹபீஸ்- நீர்வினியோக வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக கண்டி மாவட்டத்தில் தமது அன்றாடத் தேவைகளக்காக நீர்வினியோக சபைக்கு சமூகமளித்த பொது மக்கள் பலர் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.(27.3.2015) கெடம்பே, கட்டுகாஸ்தோட்டை பஹல கொண்டதெனிய, மற்றும் பொல்கொல்ல ஆகிய இடங்களில் அமைந்துள்ள நீர்வினியோக வடிகால் அமைப்பு சபையியன் பிராந்தியக் காரியாலயங்களில் ஊழியாகள் பணியில் ஈடபடாத காரணத்தால் பொது மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் சிலர் வெளியே காத்து நிற்பதையும் படத்தில் காணலாம். இது தொடாபாக…

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை  கொழும்பு கம்பெல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது . அனைத்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஐhதிக சேவக ஊழியர்கள் சங்கம் மகா நாடு தொடர்பாக தெரிவிக்கையில் 30ற்கும் மேற்பட்ட தொழிற்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மகா நாட்டில கலந்து கொள்ள உள்ள விருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு…

Read More

கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்-அமைச்சர் றிசாத் பதியுதீன்

இப்னு ஜமால்தீன் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்படும் அடக்குறைகளுக்கும் பேரீனவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும் தீர்ப்பானது சாட்டையாக அமைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  நேற்று முன்தினம் கிராண்ட்பாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவவாறு தெரிவித்தார். இப் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்பாறுக்…

Read More

படைகளிலிருந்து தப்பியவர்களுக்கு பொதுமன்னிப்பு

பாதுகாப்பு படைகளில் இருந்து தப்பிச்சென்ற, முறையான விடுமுறை எடுக்காமல் வீடுகளுக்குச் சென்று சேவைக்கு திரும்பாத வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக முப்படைகளும் அறிவித்துள்ளன. பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து முப்படைகளின் உயரதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

Read More

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்! பிற்பகல் 2 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை!

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவார். அத்துடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார். ஜனாதிபதியுடன் பொது எதிரணியின் கட்சித்தலைவர்களும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, பிற்பகல் 2 மணிக்கு தலதா மளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்படுவார். அங்கு, பண்டாரநாயக்கவின் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி…

Read More

சஜீத் பிரேமதாசாவின் பிரதியமைச்சராக கிடைத்தமை எனக்கு கிடைத்த பாக்கியம் – அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 18வது மாநாடு நேற்று கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு நாடுபூராவும் உள்ள 2000 சமுர்த்தி,திவிநகும, சமுர்ததி வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு சமுர்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பிரதியமைச்சர் எம்.எம். எஸ் அமீர் அலியும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது இந்த சங்கத்திற்காக தனது சொந்த நிதியில் ஒர் இலட்சம் ருபாவை அமைச்சர் சஜித் அன்பளிப்புச் செய்தார். இங்கு உரையாற்றிய…

Read More

சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்

5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கம்பகாவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையுடன்…

Read More

முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு 9.8 மில்லியன் ரூபா நிதி! அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை (25) இடம்பெற்ற போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிதியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினூடாக வாழ்வாதார முயற்சிகளுக்காக பகிர்ந்தளிக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேபோன்று வவுனியா, மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளை நிவர்த்திப்பதற்காக, அவர்களை…

Read More

மட்­டக்­க­ளப்பில் இப்­ப­டியும் நடக்­கின்­றது!

மட்­டக்­க­ளப்பு – வந்­தா­று­மூலை பகு­தியில் அமைந்­துள்ள தங்­களின் கடை­க­ளுக்கு காப்­பு­றுதிப் பணத்­தினை பெறு­வ­தற்­காக திரு­டர்கள் கடை­களை உடைத்து கொள்­ளை­யிட்ட மாதிரி கடை உரி­மை­யா­ளர்­களே தங்­களின் கடை­களை உடைத்து கொள்­ளை­யிட்ட சம்­பவம் இடம்பெற்றுள்ளமை தெரி­ய வந்­த­தை­ய­டுத்து கடை உரி­மை­யா­ளர்கள் பொலி­ஸா­ரிடம் வகை­யாக மாட்டிக் கொண்­டுள்­ளனர். இதனால் ஏறாவூர் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வந்­தா­று­மூலை பிர­தான வீதி­யி­லுள்ள இரண்டு கடைகள் உடைக்­கப்­பட்டு கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வங்கள் முற்­றிலும் பொய்­யா­னது என்றும் ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். வந்­தா­று­மூ­லையில் உள்ள இரண்டு கடை­களே இவ்­வாறு…

Read More

நஷ்டத்தில் பொறுப்பேற்ற நிறுவனங்கள் இலாபத்தில் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் றிஷாட்

நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, சீனி, மற்றும் லக்சல மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம் (STC) நிறுவனங்கள் இலாபத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (1) வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச  நிறுவனத்தில்  இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அரிசியின் விலை அதிகரித்தது இதனால் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய வாழ்க்கை செலவுக்கான அமைச்சரவை உப குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கிணங்க   நாடு முழுவதிலுமுள்ள…

Read More

காலத்தை தேடி மக்கள் பயணமாகின்றனர் : டில்வின் சில்வா

கடந்த காலத்தில் எமது பயணம் சேகுவாராவின்  வழியில் பயணித்தது இன்று மாற்றத்தினை தேடிய பயணமாக எமது பயணம், மக்களின் பயணம் காலத்தை தேடி பயணமாகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  டில்வின் சில்வா தெரிவித்தார்.. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் சோசலிச சங்கத்தின் எற்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு நேற்று யாழ். மாவட்ட றிம்பர் மண்டபத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய விமல் ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது….

Read More