Headlines

கம்பனி வரலாற்றில் புதிய கம்பனிகளின் பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைப்பு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

ஊடகப்பிரிவு இலங்கையின் கம்பனி வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் புதிய கம்பனிகளுக்கான பதிவுக்கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 73% ஆல் குறைக்கப்பட்டிருக்கின்றதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கம்பனிப்பதிவு புதிய கட்டணங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் உரையாற்றிய போது கூறியதாவது, இந்தக் கட்டணக்குறைப்பு இலங்கையின் புதிய தொழிற்துறை வளர்ச்சிக்கான முயற்சியாகும். 2016 ஆம் ஆண்டு நமது நாட்டில் 8289 புதிய கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்டன….

Read More

நெருக்கத்தில் கூடி வெளியில் ஓட முடியாமல் குளியலறையில் ஒளிந்த லத்தீப், மொஹைதீன் மற்றும் செல்லத்துரை ஆகியோரே பரிதாபமாக உயிரிழந்தனர்

கொழும்பு, மருதானையில் உணவகமொன்று நேற்று தீப்பிடித்துக் கொண்டதில் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் தீக்காயங்களுக்குள்ளானார். நேற்று நண்பகல் 12.45 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடம் முற்றாக எரிந்து சாம்பராகியதோடு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முற்றாக எரிந்து சேதமடைந்து காணப்பட்டன. இச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரும் இந்த உணவகத்தில் பணியாற்றுபவர்களாவர். சமையல்காரராகப் பணியாற்றிய செல்லத் துரை என்பவரும் உணவகச் சிப்பந்திகளான லத்தீப், மொஹைதீன் ஆகிய மூவருமே உயிரிழந்தவர்களென அடையாளம்…

Read More

ரணில் – சந்திரிக்காவுடன் முக்கிய பேச்சுவார்த்தை

தற்போது எழுந்துள்ள அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த செவ்வாய்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மிகவும் காத்திரமானதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் கருத்துரைத்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர்ääஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் அது 19வது திருத்தம் தொடர்பில் யோசனையை முன்வைத்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது…

Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அன்மையில் கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் இஜாஸ் அவர்களின் தலைமையில் நேகமயில் வழங்கி வைக்கப்பட்டது.     இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

தலாவ கல்வடுவாவ மகா வித்தியாலய இல்லவிளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்…

தலாவ கல்வடுவாவ மகா வித்தியாலய இல்லவிளையாட்டு போட்டி இறுதிநாள் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.. வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கிண்ணங்களை சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்..எதிர்கால எமது பிரதேச இளைய தலைமுறையினர் நல்ல விளையாட்டு வீரர்களாக வரவேண்டும். இந்த பிரதேசத்தில் விளையாட்டு துறையை ஊக்குவிக்க வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்…. பாடசாலை அதிபர்…

Read More

Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen!

Statement of Former Minister Rishad Bathiudeen on the Arrest of his Brother Riyaj Bathiudeen… My Brother Mr. Riyaj Bathiudeen was arrested by the Criminal Investigation Department while he was at his house in Puttalam on 14.04.2020 stating that he had connection with a suicide bomber with respect to Easter Sunday Attacks. Until now none of…

Read More

குடிநீர் வேண்டி ஆர்ப்பாட்டம்

சுத்தமான குடிநீர் வேண்டும் என கோரி ரொசல்ல கிராம பகுதி மக்கள் இன்று வட்டவளை ரொசல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பல வருட காலமாக குடிநீர் சுத்தமாக கிடைப்பதில்லை எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பிரச்சினை தீராத பட்சத்தில் இம்மக்கள் இப் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

Read More

என்.எம் நசீர் தலைமையில் பொல்கஹவெல சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு இடம்பெற்றது..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் என்.எம்.நஸீர் (MA) அவர்களின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் ஏற்பாட்டில்  பொல்கஹவெல பிரதேச செயலகத்தில் மினி கவமன்ட் ஆரம்பிக்க சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு ஒரலியத்தையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொல்கஹவெல யுவதிகளுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர், சனச அபிவிருத்தி வங்கியின்…

Read More

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இனங்காணப்பட்டவர்களுக்கான பல்வேறு உதவிகளாக பல சமூக உதவிகள் தென்ஆபிரிக்காவில் இயங்கும் அல் இமாட் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு கிண்ணியா அல் அதான் பாடசாலையில் இன்று (10) ஞாயிற்றுக் கிழமை அல் ஹிக்மா பவுண்டேசனின் தலைவர் அஷ்ஷெய்க் மொஹமட் அப்பாஸ் இபாதுள்ளா தலைமையில் இடம் பெற்றது. தென் ஆபிரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் அல் இமாட் அமைப்பின் நிதி…

Read More

மக்கள் காங்கிரஸின் மாவத்தகம மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல், மாவத்தகம பிரதேசத்துக்கான மக்கள் சந்திப்பு நேற்று மாலை (30) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதோச நிறுவனத்தின் பிரதித்தலைவருமான எம்.என்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில், குளியாப்பிட்டிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி.இர்பான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், புத்திஜீவிகள் என…

Read More

ISIS இயக்கத்தில் சேரும் வெளிநாட்டுப் போராளிகள் தொகை அதிகரிப்பு!:அமெரிக்கா

சிரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய தேசம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் போராடி வரும் ISIS இயக்கத்தில் இணைவதற்காக வெளிநாடுகளில் இருந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை அபாய மட்டத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்கத் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க தேசிய தீவிரவாத எதிர்ப்பு நிலையத்தின் இயக்குனர் நிக்கொலஸ் ரஸ்முஸ்ஸென் கருத்துத் தெரிவிக்கையில், ISIS இயக்கத்தில் இதுவரை 90 இற்கும் அதிகமான நாடுகளில் இருந்து 20 000 இற்கும் அதிகமான போராளிகள்…

Read More

மஹிந்த உகண்டாவுக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாத இறுதியில் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டாவின் பிரதியமைச் சர் ஒருவரின் அழைப்பினை ஏற்றே மஹிந்தராஜபக்ஷ அந்நாட்டுக்கு பயணிக்கவுள் ளார். அவருடன் காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த மற்றும் உதித்த லொக்கு பண்டார ஆகியோரும் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் டுபாய் வழியாகவே உகண்டாவின் கம்பாலா நகருக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More