Headlines

வங்கக்கடலில் காற்றழுத்தம்! இலங்கைக்கு வெள்ள ஆபத்து

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று,  இலங்கை மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும். இந்த காற்றழுத்தம் காரணமாக இலங்கை முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின்…

Read More

நீதிவான் திலன பண்டாரவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

நீதிவான் திலன பண்டாரவிடம் சுயாதீன நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு அண்மையில் சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின்பேரிலேயே அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழு திலன பண்டாரவுக்கு விளக்கம்கோரிய கடிதத்தை நேற்று  (1) அனுப்பியுள்ளது. மொன்டிரோ ஜீப்பில் சரணாலயத்துக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாருடன் சென்ற நீதிவான், அங்குள்ள அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் முறையிடப்பட்டுள்ளது.

Read More

100 கோடி வழங்க கோரி சுவாமிக்கு எதிராக வழக்கு

பா. ஜ.க.வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியிடம்  100 கோடி ரூபா நஸ்டஈடு கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீனவர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நான்தான் ஆலோசனை கூறினேன்.. அதன்படியே அவரும் செய்து வருவதாக தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அண்மையில் சுவாமி பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இலங்கை கடற்படை சேதப்படுத்தி, கைப்பற்றிய 102 தமிழக மீனவர்களின் படகுகளுக்கு…

Read More

ரோகிங்யோ அகதிகள் மீது இனவாதிகள் அட்டுழியம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  சாகலவிடம் ரிஷாட் முறையீடு

கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இந்த அவலைகளின்  பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் சாகல ரட்நாயக்கவை இன்று (26.09.2017) காலை அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கல்கிசையில் இடம்பெற்ற…

Read More

முடக்கப்பட்ட பிரதேசத்திற்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை; கிண்ணியா நகரசபை உறுப்பினர்  எம்.எம்.மஹ்தி!

கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராம  மக்களுக்கு அரச கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் காங்கிரஸின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நேற்று (17) கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது, “கடந்த 8 நாட்களாக முடக்கப்பட்டிருக்கும் இப்பிரதேசத்தில், 857 குடும்பங்களை சேர்ந்த 3187 பேர்  பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அன்றாடம் தொழில் செய்வதன்…

Read More

உயர்நீதிமன்ற விளக்கத்தை ஏற்கத் தயாரில்லை – ஜே.வி.பி.

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட முடியுமென உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சட்ட வியாக்கியானத்தை ஏற்க முடியாதென திட்டவட்டமாக நேற்று அறிவித்தது ஜே.வி.பி. அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மஹிந்த முன்னெடுக் கும் நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி. நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் ஓரங்கமாக எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியை தமது கட்சி நடத்தும் என்றும் ஜே.வி.பியின் பொதுச் செய லாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். பத்தரமுல்லை…

Read More

ஞானசாரரின் நாடகம் தோல்வியில் முடிந்துள்ளது – ஆசாத் சாலி

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க வர வேண்டுமென ஞானசாரர் தேரர் ஆசைப்பட்டது மஹிந்த ராஜபக்ஸவின் விருப்பத்திற்கு அமையவே என ஆசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில், பொது வேட்பாளராக ரணில் நிறுத்தப்பட்டால் எதிர்க்கட்சி தோல்வியடையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நம்பினார். எனவே தோல்வியடையும் வேட்பாளரை பொது வேட்பாளராக நிறுத்த ஞானசாரர் முயன்றார். ஆகவேதான் ரணிலுக்கு ஆதரவாக ஞானசாரர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். இருந்தபோதும் நாம் சகல திட்டங்களையும் முறியடித்து…

Read More

කලකාරුවන් සහ මාධ්‍යවේදීන් සාමවිනිසුරු තනතුරෙන්  ලබයි 

– -නිලුපුලී –  ශ්‍රී ලාංකීය කලාව පෝෂණය කිරීමෙහි ලා ඇප කැප වූ සිනමාවේදීන්, ටෙලිනාට්‍යවේදීන්, නළු නිළියන්, ගායක ගායිකාවන් කාර්මික ශිල්පීන් ඇතුළු කලාකරුවන් හා ලාංකීය සමාජ සන්ධ්වනියේ ඉහලම ස්ථරයේ සිටින  ජනමාධ්‍යවේදීන් ඇතුළු කලාකරුවන්ගේ හා මාධ්‍යවේදින්ගේ සේවය අගයමින් සමාජයේ ගෞරවනීය තනතුරක් වන  සාමවිසුරු පදවි ඔවුන්ට  පිරිනැමීමට රජය  තිරණය කර තිබේ. ජුනි 13 වෙනිදා අධිකරණ අමාත්‍ය ආචාර්ය විජයදාස…

Read More

கைக்குண்டு வெடித்ததில் மூவர் பலி ; ஒருவர் காயம்

தலங்கம பிரதேசத்தில் கைக்குண்டு வெடித்ததில் சம்பவ இடத்தில் மூவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Read More

பொலிசாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்! ஆணைக்குழுவுக்குத் திண்டாட்டம்

பொலிசாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் குவியும் நிலையில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. தேசிய அரசாங்கம் முன்வைத்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டு, தற்போது செயற்படத் தொடங்கியுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்ட போதிலும், அதன் அலுவல்களை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் நிறைவு பெறாத நிலையில்…

Read More

வெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகீஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

Read More

வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சரானார் அமீர் அலி

வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சரானார் அமீர் அலி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நேற்று  புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Read More