Headlines

ஜனாதிபதி மகிந்தவுக்கு தமிழ் படிப்பித்த டக்ளஸ்

கிளிநொச்சிக்கு இன்று வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழில் உரையாற்றினார். வழமையாகவே தமிழ் பகுதிக்கு வரும்போது அவர் இவ்வாறு தமிழில் உரையாற்றுவது ஜனாதிபதி மஹிந்த வழக்கம். அதே பாணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்றும்  தமிழில் உரையாற்றியபோது பல்வேறு அர்த்தப்பிழைகளோடு சொற்கள் வெளிப்பட்டன. இதனைக்கேட்டு பொதுமக்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். இதனால் ஜனாதிபதி நிலை தர்ம சங்கடமாகிப்போனது. உடனே மஹிந்தவின் மானம் காக்க புறப்பட்டார் அமைச்சர் டக்ளஸ்.  அவர் சரியான சொற்களை மந்திரம் ஓதுவதுபோல ஜனாதிபதியின் காதில்…

Read More

ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி உறுதி – ரவுப் ஹக்கீம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றி உறுதியாகிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தமக்கு நெருக்கமானவர்களிடம் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ரயில் பாதையில் தலையை வைத்துக்கொள்ளத் தயாரில்லை. கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கு ஆதரளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும்,…

Read More

இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தல் இதுவாகவே இருக்க வேண்டும் – சோபித தேரர்

இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தல் இதுவாகவே இருக்க வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்து்ளளார். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் போட்டி நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் கசிந்துள்ளன. இந்தநிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணான வகையில் இடம்பெறும் ஆட்சியினை…

Read More

ஆட்சியாளர்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

ஆட்சியாளர்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குற்றம் சுமத்தியுள்ளார். இது மிகவும் தீர்மானம் மிக்கதோர் சந்தர்ப்பமாகும், இந்த வேளையில் பொறுப்புணர்ச்சியின்றி செயற்பட முடியாது. இனங்களுக்கு இடையில் பல்வேறு வழிகளில் முரண்பாடுகளையும் பிரிவினையையும் இந்தளவுக்கு வேறு எந்தவொரு அரசாங்கமும் ஏற்படுத்தவில்லை. அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசாங்கமொன்று தேவைப்படுகின்றது. அனைத்து இனங்களும் ஒன்றிணைய வேண்டுமென்ற கொள்கையை ஐக்கிய…

Read More

25 ஆண்டுக்குப் பின், யாழ்தேவி இன்று பயணிக்கிறாள், மஹிந்தவும் செல்கிறார் (நேர விபரம் இணைப்பு) Su

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகின்றன. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன் முதல் அங்கமாக பளையில் இருந்து யாழ்தேவி இன்று 13-01-2014 யாழ்ப் பாணத்துக்கு பயணம் செய்கிறது. பளையிலிருந்து யாழ்ப்பாணம்வரை ரயிலில் பயணிக்கும் ஜனாதிபதி, கொடிகாமம் மற்றும் நாவற்குழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களையும் திறந்துவைக்கிறார். அதனைத் தொடர்ந்து ரயிலில் பயணிக்கும் அவர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தைச் சென்றடைந்து புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன்…

Read More

குருநாகல் – கொகரல்ல வாகன விபத்தில் சலீம், ரசீமா வபாத்

குருநாகல் கொகரல்ல பிரதேசத்தில் 11.10.2014 இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் குருநாகலையைச் சேர்ந்த கமால்தீன் மொஹமட் சலீம் (62), பாத்திமா ரசீமா (52) ஆகியோரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர். இச்சம்பவம்11.10.2014 காலை 11.35 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பின்நோக்கிச் செலுத்தப்பட்ட டிப்பர் வண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித் துள்ளனர்.

Read More

ISIS ஈராக் தலைநகர் வரை முன்னேற்றம்..!

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போராளிகள் சிரியாவின் துருக்கி எல்லைப்புற நகரான கொபானியை மட்டுமன்றி ஈராக் தலைநகர் பக்தாதின் வாயிலில் இருக்கும் அன்பார் மாகாணத்தையும் முழுமையாக கைப்பற்றும் தறுவாயில் உள்ளனர்.   மாகாணத்தை காக்க அமெரிக்க தரைவழி படைகளை அனுப்பும்படி ஈராக் நிர்வாகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. பக்தாதிற்கு மேற்காக இருக்கும் “அன்பாரின் நிலைமை மிக மோசமாக உள்ளது” என்று அன்பார் மாகாண கௌன்ஸில் தலைவர் சபாஹ் அல் கர்ஹ{த் எச்சரித்துள்ளது.   ஐ.எஸ். போராளிகள் அன்பார் மாகாணத்தின்…

Read More

என்னிடம் செல்போன் எதுவுமில்லை, உண்மையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்…!

2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்ளும் இன்னொருவரான மலாலா பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரில் 1997-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி பிறந்தார். இவருடைய தந்தை ஜியாவுதீன்- தாயார் தோர் பேகை. இவருக்கு 2 தம்பிகளும் உண்டு. தற்போது இங்கிலாந்தின்…

Read More

‘ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ்’ பாலர் பாடசாலை விளையாட்டு விழா

பழுலுல்லாஹ் பர்ஹான் ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை மற்றும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை ஆகியவற்றின் 2014 வருடாந்த பாலர் விளையாட்டு விழா (12-10-2014 )ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இவ் பாலர் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார். இதன் போது விளையாட்டுப்…

Read More

கட்சிதாவும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள்

அமைச்சர் நவீன் திசாநாயக்க விரைவில் ஆளுங்கட்சியிலிருந்து தாவி எதிர்கட்சி வரிசையில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஐ.தே.க.யின் முன்னாள் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான காமினி திசாநாயக்கவின் மூத்த மகனும் ஐ.தே.க.யின் தலைமைத்துவக்குழு தலைவர் கரு ஜயசூரிவின் மகள் லங்கா ஜயசூரியவை திருமணம் செய்து ஐ.தே.க. குடும்பத்தை சார்ந்தவர். 2000ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக நாடாளுமன்ற அங்கத்துவம் பெற்றுள்ள இவர், 2007ம் ஆண்டு தொடக்கம் ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார். எனினும், அடிக்கடி ஜனாதிபதி மற்றும் ஆளுந்தரப்பினருடன்…

Read More

கணனியால் தாமதமான விமான சேவைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் குடியகல்வு மற்றும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள கணினிகளில், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக விமான சேவைகள் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே! – ஜனாதிபதி மஹிந்த

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சிகள் மாத்திரமன்றி பொதுமக்களும் என்னுடன் இணைந்தே உள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், பொது வேட்பாளர் நானே தவிர வேறு யாரும் அல்ல. இந்த தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் தனி வேட்பாளர்களே ஆவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொல்காவெவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read More