Headlines

ஜனாதிபதி மகிந்தவுக்கு தமிழ் படிப்பித்த டக்ளஸ்




கிளிநொச்சிக்கு இன்று வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழில் உரையாற்றினார். வழமையாகவே தமிழ் பகுதிக்கு வரும்போது அவர் இவ்வாறு தமிழில் உரையாற்றுவது ஜனாதிபதி மஹிந்த வழக்கம். அதே பாணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்றும்  தமிழில் உரையாற்றியபோது பல்வேறு அர்த்தப்பிழைகளோடு சொற்கள் வெளிப்பட்டன.

இதனைக்கேட்டு பொதுமக்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். இதனால் ஜனாதிபதி நிலை தர்ம சங்கடமாகிப்போனது. உடனே மஹிந்தவின் மானம் காக்க புறப்பட்டார் அமைச்சர் டக்ளஸ்.  அவர் சரியான சொற்களை மந்திரம் ஓதுவதுபோல ஜனாதிபதியின் காதில் குசுகுசுக்க அதை அப்படியே ஒப்புவித்தார் ஜனாதிபதி. பின்னர் “நான் இன்னமும் தமிழில் பாலர் வகுப்புத்தான். விரைவில் நன்றாக தமிழில் தேர்ச்சி பெற்று விட்டு உங்கள் முன் விளாசித்தள்ள போகிறேன் பாருங்கள்” என்று சவாலாகக்கூறி கூறி உரையை நிறைவுசெய்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. (U)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *