Headlines

ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே! – ஜனாதிபதி மஹிந்த





அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சிகள் மாத்திரமன்றி பொதுமக்களும் என்னுடன் இணைந்தே உள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், பொது வேட்பாளர் நானே தவிர வேறு யாரும் அல்ல.

இந்த தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் தனி வேட்பாளர்களே ஆவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொல்காவெவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *