Headlines

கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடத்தும் தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டி

தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கான வசன மற்றும் கவிதையடிப்படையிலான கட்டுரை போட்டியொன்றை நடத்த கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீல நீரில் உருவாகும் பொருளாதாரத்திற்கு சமுத்திர சூழலை பாதுகாப்பது அவசியம் என்ற தொனிப்பொருளில் இக்கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த கடல் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் இந்த கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது. கடல் எமது வளம்- கடல் பொருளாதாரத்திற்கான அடித்தளம்- சமுத்திரத்தைப் பாதுகாப்பது…

Read More

500 கோடி ரூபாய் செலவில் பஸ் கொள்வனவு

இலங்கைப் போக்குவரத்து சபைக்காக இந்திய நிறுவனம் ஒன்றிலிருந்து 500 பஸ்கள் கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டின் ஊடாக குறித்த பஸ்களை சிறிது சிறிதாக கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் எனினும் அது இதுவரை சாத்தியப்படாததால் அமைச்சர் குறித்த பஸ்களை ஒரே சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களது ஈ.பீ.எப் மற்றும்…

Read More

திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் ஒருவரையே ஹிருணிகா திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தககது.vk

Read More

செல்லப்பிராணி நாய்களை பதிவு செய்யாவிட்டால் 10ஆயிரம் ரூபா தண்டம்

கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்ப்படவுள்ளது. அதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யத் தவறின் 10ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வினவியபோது, கட்டாக்காலி நாய்களின்…

Read More

அஸ்கிரிய மகாநாயக்கர் காலமானார்!

அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரக்கித தேரர் காலமானார். தேரர், சிங்கப்பூரில் தங்கியிருந்த வேளையிலேயே காலமானதாக அஸ்கிரிய பீடத்தின் தியவதன நிலமே தெரிவித்துள்ளார். சுகவீனம் காரணமாக சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முதலீட்டாளர்களை தேடுகிறது அரசு

கடந்தகால யுத்த நடவடிக்கையால் சிதைந்துபோன பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை  மீள புனரமைத்து  ஆரம்பிப்பதற்கும், ககட்டகக பென்சில் கரி அகழும் சுரங்கப் பணிக்கும் முதலீட்டாளர்களை அரசு தேடுகின்றது. ‘பரந்தன் இரசாயன கூட்டுதாபனம்’ என்ற பெயரில் முன்பு வடமாகாணத்தில் இயங்கி வந்த இரசாயனத் தொழிற்சாலையின் சேதமடைந்த கட்டடங்கள் இந்த வருட முடிவுக்கு முதல் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட வேண்டுமெனவும், தொழிற்சாலை உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்க 525 மில்லியன் ரூபா தொகை அவசியப்படும் எனவும் அரசு தெரிவிக்கின்றது. தொழிற்சாலை நிர்மாணப்பணி பூர்த்தியாகியதும்…

Read More

“சிரமங்களின் மத்தியிலேயே மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கினோம்” – முசலி, அளக்கட்டில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

முசலிப் பிரதேசத்தில் புதிய மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கிய வேளை, எமது முயற்சிகளுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அவற்றையெல்லாம் தாண்டி, புதிய கிராமங்களை உருவாக்கி, மக்களை மீண்டும் குடியேற்ற முடிந்ததென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீன், நேற்று (05) மன்னார், முசலி, அளக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றினார். அவர் மேலும்…

Read More

இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் 05 ஆம் திகதி (நாளை மறு தினம்) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 09 ஆவது அமர்வில் பங்குகொள்ளும் பொருட்டே எதிர்வரும் 05 ஆம் திகதி வருகைதரவுள்ள இவர் 06 ஆம் திகதி வரையான இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார். இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள…

Read More

ஸாகிர் நாயக்கும் சதிகளும் (Poem)

-Mohamed Nizous – தூய இஸ்லாத்தை துணிவோடு சொல்லுகின்ற நாயக்கை எதிர்ப்பவர்கள் நான்கு வகை மனிதர்கள் தீயாக இயங்குகிறார் திருட்டுத் தனம் புரிகின்றார் சாயங்கள் வெளுக்கும் நாள் சதியெல்லாம் வெளியில் வரும். மார்க்கம் வளர்கிறது மனிதரின் பேச்சினாலே மூர்க்கம் கொண்டெழுந்த மோடி போன்ற மாற்றார்கள் தீர்க்க முனைகின்றார் தீனின் வளர்ச்சியினை யார்க்கும் முடியுமோ இறைவழியை அழிப்பதற்கு. கலிமாவைச் சொன்ன பின்னும் காரிருளில் இருப்பவர்கள் மலிவான விலைகளுக்கு மார்க்கத்தை விற்பவர்கள் இழிவான செயல்களினை இம்மனிதர் எதிர்ப்பதினால் பழிவாங்க முனைகின்றார்…

Read More

ஐந்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் கண்ட கொழும்பு வேறு : ரவுப் ஹகீம்

தென்கிழக்காசியாவின் மிகப் பிரதான நகர மையமாக கொழும்பு அமையப்போகின்றது எனக் குறிப்பிட்ட, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நகரமயமாக்களைப் பொறுத்தவரை வெளிப்படைத் தன்மை பேணப்படுவதோடு, தொழில்சார் திறமைகளுக்கேற்ப உரிய இடமளிப்பதற்கும், தனியார் துறை பங்களிப்புகளுக்கு வாய்ப்பளிப்பதற்கும் தனது அமைச்சு நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார். கட்டடக் கலைஞர் நிறுவனத்தின் செயலமர்வின் 2015ஆம் ஆண்டுக்கான அங்குரார்பண நிகழ்வு கொழும்பு, பண்டநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் செவ்வாய்கிழமை (17)…

Read More

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புதிய மருந்து கண்டுபிடிப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று பேராசிரியர் உபுல் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

விமானிகளுக்கு ஏற்படும் மர்ம நோய்: திரைப்படம் எடுத்து அம்பலப்படுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி

இங்கிலாந்தை சேர்ந்த ட்ரிஸ்டன் லோரைன் என்ற விமானி, பிரபல விமான சேவை நிறுவனமான ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ நிறுவனத்தில் 19 ஆண்டுகள் விமானியாக பணியாற்றிய அனுபவசாலி. ஆனால், 2006-ல் அந்நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காரணம் 19 ஆண்டுக்கால பணியின் பலனாக அவருக்கு கிடைத்த வியாதி. நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதான 7 ஆண்டுகளில் பிஏஈ 146 ரக ஜெட் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தின் இன்ஜினை ஒவ்வொரு முறை இயக்கும் போதும் கரும் எண்ணெய் புகை வெளியாகும். ஆனால் அது…

Read More