Headlines

அவன்காட் கப்பலில், ஜனாதிபதி ஆணைக்குழு

பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அவன்காட் கப்பலை சோதித்து வருகின்றனர். இன்று (28) பி.ப 1.30 மணியளவில் காலி துறைமுகத்திற்கு வந்த ஆணைக்குழு உறுப்பினர்கள், பொலிஸாரின் கண்காணிப்பில் இருக்கும் அவன்காட் கப்பலுக்குள் சென்றனர்.

Read More

“ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும் ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம், தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதுடன் அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மற்றும் மின் வணிகம் ஊடாக மேலும் வலுப்படுத்தவுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை நெலும்பொக்குண அரங்கத்தில் இடம்பெற்ற ஆடைத் தொழிற்துறையின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில்…

Read More

கல்பிட்டி பிரதேச மக்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பௌசானின் வேண்டுகோளுக்கினங்க வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கல்பிட்டி பிரதேச சுயதொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில், சுயதொழில் உபகரணங்கள் வழங்கும்  நிகழ்வு நேற்று (3) கல்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் நவவி, மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி நகர அமைப்பாளர் முஸம்மில் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டதுடன், சுயதொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான…

Read More

மோடியை சந்திக்கப் போகும் பொதுபல சேனா

13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாக அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம். ஆனால், இந்தியாவினால் பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தி எதிர்க்கின்றோம். இதனால் இலங்கைக்கும் மக்களுக்கும் எதுவிதமான நன்மையும் கிடைக்கவில்லை. இன்று நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது வேட்பாளர் யார் என்பது குறித்தே இன்னும் முடிவு…

Read More

விரைவில் 1000 புதிய கிராமஅலுவலர்கள்

நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம அலுவலர்களை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.    நாடளாவிய ரீதியில் மேலும் சுமார் ஆயிரத்து 600 வெற்றிடங்கள் தற்போது நிலவுகின்றன. அவற்றை நிரப்பும் வகையில் 1000 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.      ஏற்கனவே நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் நியமனம் பெற்றவர்களுக்கு அடுத்ததாக அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களிலிருந்து நேர்முகப்…

Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (08) மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு திருகோணமலை வரையான கடலோரங்களில் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுகிறது. மேலும் வடமேற்கு கடலோரப்பகுதிகள் அதிகளவில் கொந்தளிப்புடன் காணப்படலாம் எனவும் வடக்கு  கடலோரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு கரையோரமாக மணிக்கு 10-30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் இக்காற்றின் வேகம் சுமார் 50 கிலோ மீற்றர்…

Read More

டிஜிட்டல் தளதரவு  ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!

‘இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும்   தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக  பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனம் முன்வந்துள்ளது. டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் இலங்கையின் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் மற்றும் அவர்களின் நிறுவனங்களையும் ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வருவதற்கான முதல் கட்ட முயற்சியினை இந்த  சிங்கப்பூரின்  பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து…

Read More

பேட்டரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்

அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது. விமானங்கள் தற்போது பெட்ரோலில் இயங்குகின்றன. அதே நேரத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு அது குறிப்பிட்ட தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் பேட்டரியில் பறக்கும் விமானத்தை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. அதற்கு ‘மோஸ்வெல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பேட்டரியுடன் இணைக்கப்பட்ட 14 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை விமானத்தின் ‘புரோபெல்லர்’கள் இயங்க…

Read More

பள்ளிவாசலுக்குள் ஷியாக்கள் வெறியாட்டம் – 70 முஸ்லிம்கள் வபாத்

ஈராக்கில் ஷியா-சன்னி பிரிவு மக்களுக்கிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பகை நீடித்து வருகிறது. சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவ்வகையில், ஒடுக்கப்படும் பிரிவினர் தகுந்த நேரம் பார்த்து ஆதிக்கவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி நிலைகுலையச் செய்கின்றனர். இத்தகைய வன்முறை தாக்குதல்களில் இருதரப்பிலும் இது வரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, ஐ.எஸ்.போராளிகளும் ஈராக்கில் சமீபகாலமாக ஏராளமான வன்முறை…

Read More

வாக்கெண்ணும் நடவடிக்கையில் முறைகேடுகள் எதுவும் இடம்பெறவில்லை : தேர்தல்கள் ஆணையாளர்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையில், எந்தவித முறைகேடுகளும் இடம்பெறவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். விருப்பு வாக்குகள் எண்ணும்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அண்மைய நாட்களாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமுள்ளன. இது குறித்து ஊடகமொன்றிற்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை சீர்குலைக்கும் நோக்கில் இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். விருப்பு வாக்குகள் எண்ணும்போது வேட்பாளர்களின் முகவர்கள்…

Read More

இலங்கைக்கான துருக்கி தூதுவரை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் துன்கா ஒஸ்யுஹாதர் தலைமையிலான வர்த்தக குழுவை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (19) கூட்டுறவு மொத்த விற்பனை அலுவலகத்தில் சந்தித்த போது எடுத்த படம்.

Read More

கொழும்பை அண்மித்த புறநகர் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தத் தடை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளின், இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகர், பொரலஸ்கமுவ, கொஹ_வளை, தெஹிவளை, மஹரகம, பேலியகொடை, வெலிக்கடை, மிரிஹான, கிரிபத்கொடை, தலங்கம மற்றும் வத்தளை ஆகிய நகரங்களில் விதிக்கு முரணான வகையில் வாகனத்தை செலுத்துதல், அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்தல் மற்றும் முச்சந்திகளில் வாகனங்களை முந்திச் செல்லுதல் என்பன இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து…

Read More