Headlines

நபி மருத்துவம் – ஜவ்வரிசி!

இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக “ஜவ்” என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள். பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி…

Read More

ராஜித சேனாரட்னவின் வீட்டில் கொள்ளை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. பேருவளை ஹெட்டிமுல்லவில் அமைந்துள்ள வீட்டில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாவிற்கு அதிகமான பொருட்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன. சில கோவைகள், ஐ-பாட், மடிக்கணனி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அநேகமான நேரங்களில் இந்த வீட்டில் எவரும் இருப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய பிள்ளையை அறுத்துப் பலியிடவும் தயங்க மாட்டார், பொய் சொல்வதிலும் சத்தியம் பண்ணுவதிலும் அவரை மிஞ்ச யாருமே கிடையாது – அமைச்சர் அமீர் அலி

கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கச் சொன்னால் காத்தான்குடி சமூகம் வாக்களிக்காது என்பதனால் ஹிஸ்புல்லாஹ்வை மறைமுகமாக பஷீல் ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளார் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாம் யாரை ஆதரிக்க வேண்டும் எனும் கருப்பொருளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா கிளை ஏற்பாடு செய்த நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு ஓட்டமாவடி மன்னூ ஸல்வா வளாகத்தில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர்…

Read More

அவன்கார்ட் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு

அவன்கார்ட் நிறுவனத்தின் கணக்காய்வாளரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (25) உத்தரவிட்டுள்ளார். காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணைகளை மார்ச் முதலாம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

Read More

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது….

கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று   இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு  இணைத்தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட தலைமையின் கீழ் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது. கிண்ணியா தளவைத்தியசாலையில் தற்போது நிலவி வரும் ஆளனிப் பற்றாக்குறை தொடர்பாகவும் கடந்த காலங்களில் டெங்கு நோயினால் 23 உயிர்கள் பழியாக்கப்பட்டன  இவ்வாறான விடயங்கள் இனிமேலும் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும் ஆளணி பற்றாக்…

Read More

மஹிந்தவுக்கு மனிதாபிமானமென்றால் என்னவென்றே தெரியாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது. எமது அரசியல் பயணத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வாதிகார ஆட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்ட போதும் மக்கள் அதன் நீண்டகால பயணத்திற்கு அனுமதியினை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட நல்லாட்சியின் பிரதிபலனையே இன்று மூவின மக்களும் பயன்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்hடர். பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை…

Read More

பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும்  இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மன்னார் உதயபுரம் பகுதியில் பொதுமக்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை, பேசாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்ததை தொடர்ந்து  இன்று ஆர்ப்பாட்டம்…

Read More

வெளிநாட்டிலிருந்து வரும், இறைச்சிகளுக்கு வரிச் சலுகை

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி வகைகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல இறைச்சி வகைகளுக்கான வரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் மிருக வதை மிருகக்கொலைகளை வரையறுக்கும் நோக்கில் இந்த வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. சர்வதேச வர்த்தக விவகார அமைச்சின் பரிந்துரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் வாரங்களில் இந்த வரிச் சலுகை பற்றி அறிவிக்கப்பட உள்ளது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, செம்மறியாட்டு இறைச்சி மற்றும் வாத்து இறைச்சி…

Read More

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

Read More

தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கு நீர் இறைக்கும் பம்பி வழங்கிவைப்பு

வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண  சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும்  தேசமானிய   றிப்கான் பதியுதீன் அவர்களின்  வாழ்வாதார கொடுப்பனவாக  வவுனியா மாவட்ட தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கான வாட்டர் பம்ப் மற்றும் விவசாயத்திற்கு தேவையான சில பொருட்களையும் வழங்கி வைத்தார் வவுனியா மாவட்ட இணைப்பாளரான பாரி அவர்களின்  தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது மேலும் நிகழ்வில் உரையாற்றிய…

Read More

எபோலா வைரஸ் பரவலை தடுக்குமுகமாக 100 மில்லியன் டொலர் செலவில் நிதியம்!

மேற்கு ஆபிரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் எதிர்வரும் காலத்தில் எபோலா நோய் பரவலைத் தடுக்கும் முகமாக  100 மில்லியன் டொலர்கள் செலவில் அவரச நிதியம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக  உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அவசர நிதியம் இனிவரும் காலங்களில் உடனடியாக எபோலா நோயை எதிர்த்து சமாளிப்பதற்கு உதவும் என  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் தெரிவித்துள்ளார்.உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்த கூட்டமொன்று நேற்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…

Read More

கடத்தப்பட்ட எகிப்து விமானம் சைப்பிரஸில் தரையிறங்கியது

எகிப்தின் அலெக்ஸான்டிரியாவிலிருந்து புறப்பட்டு கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டு, சைப்ரஸின் லர்னாகா விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி விமானத்தில் 80க்கு மேற்பட்டோர் உள்ளதாகவும், அதில் ஒருவர் ஆயுதங்களுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More