Headlines

நோன்பு மாத­த்தில், தேர்­தலை நடாத்­த­வேண்­டாம் – ஜனாதிபதி உத்தரவு

– A.R.A. பரீல் – தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்­கப்­படக் கூடா­தெ­னவும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முஸ்­லிம்­களின் புனித மாத­மான ரம­ழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கே ஜனா­தி­பதி இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார். எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றான நோன்பு நோற்கும் ரமழான் மாத­மா­கையால் அம்­மா­தத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்­தலை எதிர்­வரும் ஆகஸ்ட்…

Read More

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டார்

19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கிங்கினார் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் இன்று (15) காலை அனுமதி வழங்கியுள்ளார். சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று (15) காலை 9.10 அளவில் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி அளித்து கையொப்பமிட்டதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அடங்கலாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று முதல் அமுலுக்கு…

Read More

நாசகார சக்திகளுக்கு எதிராக நாம் துணிந்து பேசினோம்

பாரம்பரியமாக இருந்த எமது காணிகளை அபகரித்து கொண்டு அதனை மக்களுக்கு கொடுக்காமல் இருந்த போது அதனை பெற்றுக்கொடுக்க முடியாத அரசியல் தலைமைகள் இந்த மாவட்டத்திலும் இருந்ததை பார்க்கின்றேன் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் திருமலையில் உள்ள கருமலையூற்று பள்ளிவாசலினை பாதுகாப்பு தரப்பு ஆக்கிரமித்து வைத்திருந்த போது அதனை கூட மீட்டுக் கொடுக்க முடியாத பாராளுமன்ற பிரதி நிதித்துவம் இந்த மாவட்டத்தில் இருந்ததாகவும் கூறினார். திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய…

Read More

சுங்க சட்டத் தயாரிப்பு: பொது மக்களும் யோசனைகளை முன்வைக்கலாம்

150 வருடங்கள் பழமையான சுங்க கட்டளைச் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவது தொடர்பிலான யோசனைகளை முன்வைக்க பொது மக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத் தயாரிப்புக்காக செயற்குழு, தொழிநுட்பக் குழு மற்றும் சட்டமூலக் குழுக்கள்  நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் தங்களின் யோசனை முன்வைக்க  ஜூலை மாதம் 11ஆம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்கு முன்னர் தங்களின் யோசனையை நிதி அமைச்சிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது…

Read More

“நெருப்பாற்றைக் கடக்கவும் நெருஞ்சி முள்ளில் நடக்கவும் பழக்கப்பட்டுவிட்டோம்” புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட்!

பாதிக்கப்பட்ட சமூகத்திலிருந்து எழுந்த கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விளங்குவதனாலேயே பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற மக்களை தேடிச் சென்று, அக்கட்சி உதவி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேசத்திற்கான மத்திய குழுவைத் தெரிவு செய்யும் நிகழ்வு, நேற்று மாலை (07) மதுரங்குளியில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, கல்பிட்டி பிரதேச…

Read More

27 ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 27 ஆம் திகதி  மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் நேற்று (14) மாலை தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விவசாய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலிலேயே அவர் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதுடன், அபிவிருத்தி விடயங்கள், மக்களது பிரச்சினைகள் தொடர்பான கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

Read More

அமைச்சர் றிஷாத் அங்கம் வகிக்கும் வடக்கு மீள் குடியேற்ற செயலணி

பாராளுமன்றத்தில் கடந்த 10.08.2016 அன்று கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசும் போது ரிஷாட் பதியுதீன் அங்கம் வகிக்கும் வட மாகாண மீள் குடியேற்ற செயலணி மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என அவர் கேட்ட கேள்வி ஆச்சரியத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் கொண்டதாக உள்ளது. 1990 ஆம் ஆண்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட 90,000 வடபுல முஸ்லீம் அகதிகள் ஒருபுறம் இருக்க 2009 இல் இடம் பெயர்ந்த…

Read More

நேட்டோ வீரர்களின் பயிற்சிக்குப் பதிலடியாக ரஷ்ய வடக்குக் கடற்படை முழு எச்சரிக்கையில்!

சமீபத்தில் அமெரிக்காவும் நேட்டோ அமைப்பைச் சேர்ந்த பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய எல்லையில்  தொடர் இராணுவப் பயிற்சியை ஆரம்பித்ததை அடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தனது வடக்கு கடற்படை எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறும் ஆர்டிக் வலயத்தில் பயிற்சியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார். இப்பயிற்சியானது வழக்கமான பயிற்சியே என்றும் இதற்கும் சர்வதேசத்தின் சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ரஷ்யத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஸ்புட்னிக் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷ்யக் கப்பற்…

Read More

சிறுவனை பணையக் கைதியாக வைத்து கொள்ளை!

17 வயது சிறுவனை பணையக் கைதிதாக வைத்து வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இனந்தெரியாத ஆயுத குழுவொன்று கொள்ளையடித்த சம்பவம் நேற்றிரவு வீரஹென மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆயுத குழுவினர்,  தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதோடு வீட்டில் இருந்த 17 வயது சிறுவனையும் கடத்திச் சென்று கொச்சிக்கடை பகுதியில் விடுவித்துள்ளர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத அதேவேளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இலங்கையை வந்தடைந்தார் சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதியும் அவர் பாரியாரும் சற்று முன்னர் இலங்கை விமானநிலையத்தை வந்தடைந்தனர். இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்துள்ள சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் பாரியாரும் சீன முதற் பெண்மணி பெங் லியோன் ஆகியோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ வரவேற்க்கவுள்ளதாக ஜானாதிபதியின் ஊடக பேச்சாளர் மோகன் சமரனயகே தெரிவித்தார்.

Read More