News
இன்று பாராளுமன்றம் கூடுகிறது; ரணில் விசேட உரை!
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின் பாராளுமன்றம் முதன் முதலாக இன்று செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்போது, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், பாராளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையை ரணில் விக்ரமசிங்க இன்று உறுதிப்படுத்துவார். சபை முதல்வராக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்றுப் பதவியேற்றுக் கொண்டதுடன், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக கயந்த…
இரு மாகாண ஆளுநர்கள் ராஜினாமா
வட மத்திய மாகாண ,தென் மாகாண ஆளுநர்கள் இன்று ராஜினாமா செய்துள்ளார்கள். தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவும் வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே ஆகியோரே இன்று இராஜினாமா செய்துள்ளனர். இவ்விருவரும் தங்களுடைய இராஜினாமா கடிதங்களை தொலைநகல் மூலமாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் துரிதமடையும்: மோடி
இலங்கையின் அமைதி, நல்லிணக்க நடவடிக்கைகளை, அந்நாட்டில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு துரிதப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, உலகம் முழுவதும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்காக இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா மற்றும் அந்நாட்டு பிரதமர் விக்கிரமசிங்கேவுக்கு அவர் பாராட்டுகளை…
2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி
பொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆனால் குறைந்த நேரத்தில் அதுவும் 2 நிமிடங்களிலேயே முழுவதும் சார்ஜ் ஆகக்கூடிய பேட்டரி ஒன்றை இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. ‘ஸ்டோர் டாட்’ எனப்படும் அந்த நிறுவனம் வடிவமைத்து உள்ள இந்த பேட்டரியானது, சாதாரண பேட்டரியை விட சற்று வித்தியாசமானது. இதன் உள்வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளதால், அதிவிரைவில் சார்ஜ் ஏற்ற முடியும். 2 நிமிடத்தில் முழுவதும் சார்ஜ் ஆகும் இந்த பேட்டரி மூலம், 5 மணி…
சீர்குலைந்த சட்டத்தை மீண்டும் மேம்படுத்த நடவடிக்கை – ரணில்
கடந்த 5 வருடங்களாக சீர்குலைந்திருந்த இலங்கையின் சட்டத்தை மீண்டும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஆசிய நாடுகளின்;, சட்டமா அதிபர்களின் மாநாட்டை இன்று, ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.எமது நீதித்துறை 200 வருடங்களுக்கு மேல்ப்பட்டது. உயர் நீதிமன்ற முறைமை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து, எமது நீதித்துறை குறித்த நாம் பெருமைப்படலாம் ஆனால், துரதிஸ்ட வசமாக கடந்த 5 வருட காலப்பகுதியினுள் அதன் அடித்தளத்திற்கு சவால் மற்றும் முற்றாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக நீதித்துறை…
அ.இ.ம.காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் கிழக்கு முதலமைச்சர் சம்பந்தமாக விடுக்கும் ஊடக அறிக்கை
அஸ்ரப் ஏ. சமத் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு வழங்கப்படல் வேண்டுமென்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. கிழக்கு மாகாணம் மூவின மக்களையும் சம அளவாக காணப்படும் ஒரு மாகாணமாகும். அந்த வகையில் கிழக்குக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக கொள்கையளவில், நிராகரிக்க முடியாது. ஆனால் இன்று நாடு இருக்கின்ற சூழ்நிலையில் குறிப்பாக கடந்த 2 வருடங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் எழுப்பப்பட்ட இனவாத கோசம் மறுபுறத்தில் இன்றைய ஜனாதிபதி மைத்திரியின்…
மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா
மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். நாளை தினம் தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ம் ஆண்டு பதவியேற்ற டிகிரி கொப்கேகடுவவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பருடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
100 நாள் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொத்மலையில் பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜங்க கல்வி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் டயகம கிழக்கு தோட்டத்தை கடந்து செல்லும் ஆற்றுக்கு மேலாக உள்ள பாலம் கடந்த காலங்களில் உடைந்திருந்தது. இந்நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக 90 இலட்சம் ரூபாய் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது : அனுரகுமார திஸாநாயக்க
முன்னைய ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியான முறைப்பாடுகளை தற்போதைய புதிய அரசாங்கம் மூலம் வெளிப்படுத்தும் நடவடிக்கை தொடர்கின்றது. முன்னைய ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள் பலரின் ஊழல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. ஊழலுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷவிற்கும் எதிரான பாரிய…
பிரதமர் ரணிலின் அதிரடி (முழு விபரம் இணைப்பு)
பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முன்வந்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத் திட்டத்தின் முக்கிய அங்கமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இத்திட்டம் அமுலாகும். கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் பதில்…
மஹிந்தவை பொதுத் தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சி : சம்பிக்க ரணவக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை. அம் முயற்சியை தகர்த்து தவிடுபொடியாக்குவோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பஷில், கோத்தபாய என ராஜபக்ஷவினர் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்பட்ட வீரர்கள் என்ற மாயைக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டி அவர்களை சிறிய மனிதர்களாக்கியுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சர் சம்பிக…
தமிழக அரசுடனும் நட்புறவை வலுப்படுத்துவது அவசியம் : லக்ஷ்மன் கிரியெல்ல
இந்தியாவுடனான நட்புறவை கடந்த அரசாங்கம் முறித்துக் கொண்ட நிலையில் புதிய அரசு நட்புறவை புதுப்பித்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கப்படுவதற்குரியதாகும் எனத் தெரிவித்த பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எமது எதிர்கால பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானதாகுமென்றும் தெரிவித்தார். தமிழக அரசாங்கத்துடனும் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில், அயல் நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை பேணுவது என்பது எமது வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவமானதாகும்.ஆனால் கடந்த…
