Headlines

ஆட்சி மாற்றத்தில் பெரும் பங்களிப்பு செய்த முஸ்லிம்கள் – றிஷாத் பதியுத்தீன்

இக்பால் அலி வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதவாறு இந் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்ததொரு வரலாற்று புகழ் மிக்க தேர்தலொன்றையே நாம் சந்தித்தோம். இன்று நாட்டில் நிம்மதி சந்தோசம் நிலவுகின்றது. அரசியல் மற்றும் கொள்கைரீதியில் பல்வேறு கருத்து வேற்றுமைகளை கொண்ட சக்திகள் ஒன்று சேர்ந்து இவ்வரசாங்கத்தை அமைத்துள்ளோம். மேலும் குறுகிய எதிர்காலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களை இலங்கை சந்திக்கவுள்ளது. குறிப்பாக தேர்தல் முறை மாற்றங்கள் பற்றி அரசின் மேல்மட்ட அவதானம் பதிவாகியுள்ளது. இதில்…

Read More

காலநிலை மாற்றத்தை விட பாரிய அச்சுறுத்தல் உலகிற்கில்லை!:ஒபாமா

நமது வருங்காலத் தலைமுறைகளைப் பாதிக்கக் கூடிய விதத்தில் தற்போது உலகில் நிலவி வரும் அச்சுறுத்தல்களில் காலநிலை மாற்றத்தை விடப் பாரிய அச்சுறுத்தல் வேறு எதுவுமில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அதிபர் ஒபாமா நிகழ்த்திய ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையின் போது, நமது உலகைத் தற்போது மிகவும் அச்சுறுத்துவது, தீவிரவாதமோ, ISIS போராளிகளோ அல்லது அணுவாயுத உற்பத்தியோ அல்ல!. ‘எமது வருங்காலத் தலைமுறைகளுக்கு மிக அச்சுறுத்தலாக விளங்குவது காலநிலை மாற்றமே!’ என்றுள்ளார். ஒபாமாவின்…

Read More

பஸ் கட்டணங்களையும் குறைக்க நடவடிக்கை

தனியார் பயணிகள் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். கட்டணங்கள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அட்டவணைகளின் அடிப்படையில் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் தனியார் பயணிகள் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பாரிய நிதி மோசடி

அமைச்சர் தலதா அத்துகோரள இந்த விசேட குழுவை நியமித்துள்ளார். இக்குழுவில் 6 சட்டத்தரணிகளும் கணக்காளர் ஒருவரும், கணனி தொழில்நுட்ப நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த அரசு காலத்தில் பணியகத்தின் நடவடிக்கைச் செலவாக 150 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனத்தில் பதவிகள், வழங்கியமை பிரசார நடவடிக்கைகளுக்கான செலவினம் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இக்குழுவின் விசாரணை அறிக்கைகளை 10 நாட்களில் அமைச்சரிடம் கையளிக்க வேண்டும் எனவும்…

Read More

இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்படவில்லை!- கோத்தபாய மறுப்பு

இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்  கோத்தபாய மறுப்பு தெரிவித்துள்ளார். இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக தேர்தல் ஒன்றின் முடிவுகள் வந்து கொண்டிருக்கையில் இராணுவ நகர்வு ஒன்றுக்கு முயற்சிக்கப்படவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் முன்னரே முன்னாள் ஜனாதிபதி அலரிமாளிகையை விட்டு வெளியேறி விட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இராணுவப் புரட்சி விடயத்தில் அலரிமாளிகையில் இரகசிய பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக கூறப்படுவது அடிப்படையற்ற கருத்து என்றும் கோத்தபாய…

Read More

வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சரானார் அமீர் அலி

வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சரானார் அமீர் அலி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நேற்று  புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Read More

ஜனாதிபதி மைத்திரி வழங்கிய பரிசு

இலங்கையில் இன்று (22-01-2015) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய விலைகளின் பட்டியல்படி: 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 117 ரூபா, 95 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 128 ரூபா, டீசல் ஒரு லீற்றர் 95 ரூபா, விசேட டீசல் 110 ரூபா, மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 65 ரூபாவாகும். புதிய தேசிய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைய எரிபொருள் விலைக்குறைப்புக்கள்…

Read More

அரசியல் யாப்பு மாற்றங்களில் சிவில் சமூக அமைப்புகள் அவதானம் செலுத்தி முன் மொழிவுகளை தயார் படுத்துங்கள் – அமைச்சர் றிஷாத்

இக்பால் அலி “வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதவாறு இந் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்ததொரு வரலாற்று புகழ் மிக்க தேர்தலொன்றையே நாம் சந்தித்தோம். இன்று நாட்டில் நிம்மதி சந்தோசம் நிலவுகின்றது, அரசியல், மற்றும் கொள்கைரீதியில் பல் வேறு கருத்து வேற்றுமைகளை கொண்ட சக்திகள் ஒன்று சேர்ந்து இவ்வரசாங்கத்தை அமைத்துள்ளோம். மேலும் குறுகிய எதிர்காலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களை இலங்கை சந்திக்கவுள்ளது, குறிப்பாக தேர்தல் முறை மாற்றங்கள் பற்றி அரசின் மேல்மட்ட அவதானம் பதிவாகியுள்ளது….

Read More

அமைச்சர் கே. வேலாயுதம் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

அஸ்ரப் ஏ சமத் பெருந்தோட்ட நிறுவணங்களின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் செத்சிரிபாயவில் உள்ள 8ஆம் மாடியில் உள்ள பெருந்தோட்ட அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றக் கொண்டார். இந் நிகழ்வில் இவ் அமைச்சுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட செயலளார் விஜயலக்சுமி மற்றும் கல்வி பிரதியமைசச்ர் ராதக் கிருஸணனும் கலந்து கொண்டார்.

Read More

தீவிரவாதப் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்கும் தீர்ப்புக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு!

உலகத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்க சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் நீதிக்கான உயர் நீதிமன்றம் டிசம்பரில் தீர்மானம் மேற்கொண்டது. ஆனால் ஐரோப்பிய யூனியன் இதற்குச் சம்மதிக்காது ஹமாஸ் போராளிகளைத் தொடர்ந்து தீவிரவாதப் பட்டியலில் நீட்டிக்குமாறு சமீபத்தில் மனு தொடுத்ததை அடுத்து ஐரோப்பிய யூனியனை திங்கட்கிழமை கடுமையாகச் சாடியுள்ளது ஹமாஸ் அமைப்பு. காஸாவில் இருந்து ஹமாஸ் இன் பேச்சாளர் சமி அபு ஷுஹ்ரி பத்திரிகைகளுக்கான மின்னஞ்சல் வழியிலான அறிவிப்பில், இவ்விவகாரம் தொடர்பாகத் தகவல் அளித்தார்….

Read More

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு நாடாளுமன்றில் உரிய ஆசனமொன்று ஒதுக்கப்படாதக காரணத்தினால் திரும்பிச் சென்றார்

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு நாடாளுமன்றில் உரிய ஆசனமொன்று ஒதுக்கப்படாத காரணத்தினால் அமர்வுகளில் பங்கேற்காது நேற்று திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வுகள் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமான போது ஆளும், எதிர்க்கட்சியினருக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு, ஆளும் கட்சிப் பகுதியில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் திஸ்ஸ அத்தநாயக்க அமர்வுகளில் பங்கேற்காது அவையை விட்டு வெளியேறிச் சென்று…

Read More

நாடாளுமன்றத்தில் திஸ்ஸவுக்கு ஆசனம் இல்லை!

நாடாளுமன்றத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆசனம் இல்லை! அவருக்கான ஆசனம் சபை முதல்வரின் பட்டியல்படியே ஒதுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார். எனினும், அத்தநாயக்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து அத்தநாயக்க அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் சபாநாயகரிடம் இது முறையில் முறையிட்டுள்ளார்.. சபாநாயகரும் மீண்டும் நாடாளுமன்ற செயலாளருக்கே அதனை பாரப்படுத்தினார். இந்தநிலையில் ஆசன பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னரே அவர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றார்.

Read More