News
(முழு வீடியோ இணைப்பு) வேள்ளை வேன், லசந்த, பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பில் பசில், கோட்டாவுக்கு எதிராக மேர்வின் முறைப்பாடு
சென்ற அரசில் நடைபெற்ற ஊழல், மற்றும் குற்றங்கள் தொடர்பில் இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா முறைப்பாடு செய்தது அறிந்ததே, முறைப்பாடு செய்துவுட்டு வெளியில் வந்த மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நான் யாரையும் பழிவாங்க இதனை செய்யவில்லை குற்றங்களை வெளிப்படுத்தவே இவ்வாறு முறையிட்டேன். வேள்ளை வேன், லசந்த, பாரத லக்ஸ்மன் கொலை தொடர்பில் கோத்தாபய, ஊழல் தொடர்பில் பசில் ராஜபக்ஸ போன்றோருக்கு தொடர்பு உள்ளதெனவும் தெரிவித்தார். அவரின் முழுமையான பேட்டி…
கடந்த அரசாங்கத்தின் சகல அபிவிருத்தித் திட்டங்களும் இடைநடுவில் கைவிடப்பட மாட்டாது!– ரவூப் ஹக்கீம்
கடந்த அரசாங்கத்தின் சகல அபிவிருத்தித் திட்டங்களும் இடைநடுவில் கைவிடப்பட மாட்டாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அமைச்சுக்களின் கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் மக்களின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் கைவிடப்பட மாட்டாது. எனினும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் உரிய முறையில் வழங்கப்படும்….
மத்தல விமான நிலையத்துக்கு மூடுவிழா?
மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடமையைப் பொறுப்பேற்றார் அமைச்சர் ஹக்கீம்
அஸ்ரப் ஏ சமத் நகர அபிவிருத்தி மற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கடமையைப் பொறுப்பேற்றார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
லேக் ஹவுஸ் தலைவராக கவின் ரத்னாயக்க
அஸ்ரப் ஏ சமத் லேக் ஹவுஸ் தலைவராக கவின் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜ.தே.கட்சியின பாரளுமன்ற உறுப்பிணர் சாகல ரத்னாயக்கவின் ; சகோதரர் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக பேராசிரியர் தம்மிக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஜ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில் ருபாவாஹினியின் தலைவராகக் கடமையாற்றியவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணம், மற்றும் ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தலைவர்கள் நியமனம் சிகல உருமையக் கட்சி சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊடக அமைச்சா் கயான் ஜயதிலக்க தனது அமைச்சில் கடமைகளை பாரமேற்றார்
அஸ்ரப் ஏ சமத் புதிய ஊடக அமைச்சா் கயான் ஜயதிலக்க தனது அமைச்சில் கடமைகளை நேற்று பாரமேற்ற போது எடுக்கப்பட்ட படம்.
வெளிவிவகார அமைச்சர் இந்தியா செல்கிறார்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று இரவு இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி நாளைய தினம் அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்திக்கவுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின்னர் இந்திய மற்றும் இலங்கைக்கு இடையில் முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும்.இதேவேளை நாளை மறுதினம் அமைச்சர் மங்கள சமரவீர இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் றிஷாத் பதியுதீன் பாகுபாடின்றி சேவை செய்துவருகின்றார் -நானாட்டான் பிரதேச சபை தலைவர்
இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கில் முதன் முதலாக அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து இந்த தேர்தலில் ஒரே நோக்கத்திற்கான ஜனாதிபதி ஒருவரை வெற்றிக் கொள்ள பணியாற்ற கிடைத்தமை குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் இந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக போட்டியிட்ட போதும் அந்த உணர்வுகளை கடந்து எமது சகோதரர் ஓருவர் களமிறங்கிய உணர்வே மேலீட்டுக்காணப்பட்டதாகவும் கூறினார். நடை பெற்று முடிந்த ஜனாதிபதித்…
மஹிந்தவின் புதையல் அம்பலம்!
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதயில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் இருந்த பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அலரி மாளிகைக்குள் புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டமையும் தெரியவந்துள்ளது. புதிய அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று தனது கடமைகளை அலரி மாளிகையில் ஆரம்பித்தார். அதன்பின்னர் மாலையில் தனது கட்சி அமைச்சர்கள்.பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அதற்கு ஊடவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கலந்துரையாடலின் முடிவில் அலரி மாளிகையைச்…
கிழக்கு முதலமைச்சர் மக்கள் விருப்பப்படியே – றிஷாத் பதியுதீன்
ஏ.எச்.எம்.பூமுதீன் -நியாயமான தீர்வுக்கு தமிழ் தலைமைகளை அழைக்கிறேன். -100 நாட்களுக்குள் கைத்தொழில் புரட்சி – அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கு மக்கள் எந்த முதலமைச்சரை விரும்புகின்றார்களோ அவருக்கு நாம் ஆதரவளிப்போம். யார் முதலமைச்சர் என்பதை கட்சித் தலைவர்கள் கூடி 20 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். தமிழ் தேசிய நாளிதழ்களின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடும் போதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியாலாளர்களுக்கும் அமைச்சருக்குமான சந்திப்பு…
றிஷாத் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.. (படங்கள் இணைப்பு)
ஏ.எஸ்.எம்.ஜாவித் புதிய அரசாங்கத்தின் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக றிஷாத் பதியுதீன் இன்று (16) பிற்பகல் தனது அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார். கொள்ளுப் பிட்டியில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் அவர் பொறுப்பேற்றபோது பிரதி அமைச்சர் பிரேமதாஸ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவை இன்று கூடுகிறது
புதிய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது. அமைச்சரவை அமைக்கப்பட்டதன் பின்னர் கூடும் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
