News
இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் பத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் : ரவி கருணாநாயக
எதிர்வரும் 29ஆம் திகதி பத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு நாட்டு மக்கள் வாழ்க்கை சுமையிலிருந்து விடுபடுவதற்கு வழி திறந்து விடப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கான சலுகைகள் வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக மேலும் தகவல் தருகையில்,எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. இதில் எரி பொருட்களின்…
ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!: ஒபாமா
ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் தற்போது நடைபெற்று வரும் ஈரானின் அணுச்செறிவூட்டலை மட்டுப் படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளைப் பாதித்து யுத்தத்துக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூனுடன் இணைந்து உரையாற்றும் போதே…
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெறாது: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு
சுதந்திர தினத்துக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்தப்பட்டது. 2007,2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் வளாகத்திலும் 2010ஆம் ஆண்டு கண்டியிலும் 2011ஆம் ஆண்டு மொனராகலையிலும் 2012ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும் 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலும் 2014ஆம் ஆண்டு குளியாப்பிட்டியவிலும் நடத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு மாத்தறையில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தமை…
பேலியகொடையில் இரண்டு கொள்கலன்களில் மஹிந்தவின் பொருட்கள் சிக்கின!
பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பேலியகொடை- நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்ப்பட்ட கொள்கலன்களில் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன. அந்த கொள்கலன்களுடன் சென்ற அதிகாரிகளிடம் இதுதொடர்பில் விசாரணை நடத்திய போது, அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார்…
மாற்றத்தை நோக்கி நகரும் அக்கரைப்பற்றின் அரசியலை மு.கா மேலும் வலுப்படுத்துமா..??
அரசியலில் எதிரிகள் அல்லது தன்னுடய போட்டியாளர்கள் உள்ளிருந்தை உருவாகின்றார்கள் என்பதற்கு எமது தற்போதய ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன மிகப்பெரும் முன்னுதாரணமாகும். தன்னோடு தேர்தல் களத்தில் போட்டியிட யாருமே இல்லை அதற்கான எதிர் வேட்பாளரை தானே இறக்கவா என்று முன்னாள் ஜனாதிபதி கேட்டபோது அவரினுள் இருந்து கிளம்பிய மெல்லிய சத்தம் பெரும் கிரிடத்தை சாய்த்தது போல் அக்கரைப்பற்றில் ஒரு சுளல் சூறாவெளி உருவாகி மையவேரினை நோக்கி நகர்வதை எம்மால் அவதானிக்கமுடிகிறது. அக்கரைப்பற்றில் ஒருதாசாப்பத்தற்கிகு மேலாக அரசியல் மகுடம்…
யார் இந்த கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!
யார் இந்த கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!கிரிஸ் பூதம் இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் புதுசு புதுசா பலது முளைத்தது அது மட்டுமன்றி அது முழு இலங்கையையும் கலக்கியது . உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம நபர்கள் பெண்களுக்கு தொல்லை செய்ததுடன் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களிலும் ஈடுபட்டனர் . அத்துடன் நின்று விடாது கூரிய ஆயுதங்களினால் பெண்களின் அங்கங்களை வெட்டி விட்டும் தப்பி சென்றனர் பெண்களை பாலியல் வல்லுறவும் புரிந்தனர் நாடே கொதித்து…
கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி ஆங்கில பிரிவை வீழத்துவதற்கு சதி
இ. அம்மார் கடந்த ஒரு தசாப்ததிற்கும் மேலாக கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் திறன்படசெயற்பட்டு வந்த ஆங்கில மொழி மூலப் பிரிவை குரோதம், காழ்புணர்ச்சி, பிரதேச வெறியுணர்வைக் கொண்ட ஒரு சில ஆசிரியரின் சூழ்ச்சினால் தற்போது சீர்குழைக்கப்பட்டு பெற்றோரை குழப்ப நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இப்பாடசாலையின் வளர்ச்சியில் பொற்காலம் என வர்ணிக்கப்படுகின்ற அதிபர் திலகம் பஷPர் அவர்களால் இந்த ஆங்கில மொழி மூலக் கல்வி தோற்றி விக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை ஆங்கில மொழிப்…
நாடு திரும்பும் தேர்தல்கள் ஆணையாளரின் சகோதரர் சுனந்த
வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களை நாடு திரும்மாறு இலங்கையில் புதிய அதிபராக மைத்ரி பால சிறீசேனா அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இலங்கை புதிய அரசின் அழைப்பை ஏற்று ஜெனிவாவில் இருந்து நாடு திரும்ப உள்ளதாக ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது, கடந்த கால ஆட்சியின் போது ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அடக்கு முறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அரசை வலியுறுத்துவது நமது கடமை, அதிபர் மைத்ரி பால சீறிசேனாவின் அரசு…
சவூதி அரேபியாவில் விரைவில் ஆன் லைன் மூலம் குடும்பத்தினருக்கு விசிட் விசா!
சவூதியில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்களது குடும்பத்தை விசிட் விசாவில் அழைத்துக் கொள்ள விசிட் விசா ஆன் லைன் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதி விரைவில் அமல் படுத்தப் படும். சரியான முறையில் விபரங்கள் இகாமாவில் உள்ள படியும், பாஸ்போர்ட்டில் உள்ள படியும் பூர்த்தி செய்யப் படவேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொது பல சேனா வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
பொது பல சேனா அமைப்பு கடந்த காலங்கள் போன்று வரம்பு மீறிச் செயற்பட்டால் தராதரம் பாராது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொது பல சேனா பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன என்று இணையத்தளம் ஒன்று அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்ச பொது பல சேனாவின் கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க நேரிட்டு தோல்வியைத் தழுவினார் என முன்னாள்…
எனக்கு வொசிம் தாஜூதீனுடன் எவ்வித சம்மந்தமும் இல்லை –சோசிதவின் காதலி
ஊடகங்களில் யோசித்தவின் முன்னாள் காதலியான யசாராவிற்கும் வொசிம் தாஜூதீனுக்குமிடையிலான சம்மந்தம் பற்றி யசாரா கருத்து தெரிவிக்கையில் வொசிம் தாஜூதீனுடன் எனக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை என இவர் தெரிவித்துள்ளார். வொசீம் தாஜூடீனின் திடீர் மரணம் தொடர்பில் தன்னுடன் சம்மந்தப்படுத்தி கதை கட்டுவதாக குறிப்பிட்டார். ‘ஏன் ஊடங்கள் அப்பாவியான என்னை ஓய்வெடுக்க விடுவதில்லை? ஒருபோதும் என் வாழ்வில் சந்திக்காத நபரை பற்றி என்னுடன் தொடர்படுத்துவது நியாயமா’ என கேள்வியெழுப்பினார். தன்னுடைய பெயரை ஆதாரமற்ற வகையில் செய்தித் தளங்களில் குறிப்பிட்டுகின்றன…
மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு (photos)
A.S.M.இர்ஷாத் கிரான்ட்பாஸ் அவ்வல் ஸாவிய்யா அல் மத்தரசத்துல் யூசுபிய்யாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மத்ரசாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களை வழங்கினார். ஆ பவுண்டேசனின் ஏற்பாட்டில் இவ் இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சருக்காக விசேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில்…
