News
மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும்:அர்விந்த் கெஜ்ரிவால்
மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு வந்துள்ள நன்கொடைகள் குறித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சிபிஐ உள்ளிட்ட எந்தவிதமான விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார் அவர். அதோடு பாஜக தோல்வி பயத்தால்…
மஹிந்தவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய கனேடிய அமைச்சர் பதவி விலகல்
எதிர்வரும் ஒக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கனேடிய கொன்சவேட்டிவ் அரசாங்கத்தில் இருந்து அவர் விலகியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சியுடன் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரொயட்டர் தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடர்பான கொள்கையில் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பருடன் ஏற்பட்ட முறுகலே இந்த பதவி விலகலுக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வர்த்தகங்கள் மீது தடைகளை விதிக்குமாறு பெய்ர்ட் வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5 பேருக்கு”மன்னர் பைஸல் விருது” – ஜாகிர் நாயக் இஸ்லாமிய பணிகளுக்காக விருது
சவுதி அரேபிய அரசு ‘மன்னர் ஃபைஸல்’ விருதுக்கு ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்துள்ளது. 1. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான் -இஸ்லாமிய படிப்புக்காக 2. ஜெஃப்ரி ஐவன் கார்ட(வாஷிங்டன்) -மருத்துவ துறையில் சிறந்து விளங்கியமைக்காக… 3. மைக்கேல் க்ராட்ஸல் – அறிவியல் துறையில் சிறந்து பணியாற்றியதற்காக… 4. உமர் வான்ஸ் யாகி – அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக 5. டாக்டர் ஜாகிர் நாயக் – இஸ்லாமிய பணிகளுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டதற்காக… ஒரு கோல்டு மெடல்….
உலகில் அதிக கோடீசுவரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்!
வழக்கம் போல உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து விவரத்தை ஹுரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியாவில் கோடிசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது பல வருடமாக 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவை இந்த முறை 4ம் இடத்துக்கு பின் தள்ளி முதல் முறையாக டைப் 3 இடத்துக்கு வந்து உள்ளது.ஆனாலும் உலகத்தில் இருக்கும் பாதி கோடிசுவரர்கள் அமெரிக்கா,சீனா வில் உள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்திய கோடீசுவரர்கள்…
எமக்கு பாடம் கற்பிக்க முஸ்லிம்கள் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தனர் -டளஸ்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 75 வீதமான பௌத்த சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இதனை தவிர 10 வீதமான முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாகவும் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்காவிட்டாலும் இந்த வாக்குகள் மூலம் பெற்றி பெறவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எம்மை பழிவாங்கும்…
முஸ்லிம்கள் தமது மதக் கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியும் – சந்திரிக்கா பண்டாரநாயக்க
அஸ்ரப் ஏ சமத் முன்னாள் கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்முதின் மகன் டாக்டர் தாரீக் மஹ்முதினை தலைவராக் கொண்ட சூறாக் கவுன்சிலின் ஆதரவுடன் 67வது சுதந்திர தினத்தினை முஸ்லீம்கள் கொண்டாடும் ;முகமாக சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க – கடந்த 2 வருடத்திற்குள் அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் முஸ்லீம்களது பள்ளிக்குள் உடைத்துக் கொண்டு பாய்ந்தார்கள். பல்வேறு அவர்களது கலை கலாச்சார அம்சங்களில்…
மகிந்த ராஜபக்சவுக்கு நல்லதொரு அடியை அமீர் அலி அடித்தார் -ரஜித்த சேனாரத்தின
அஸ்ரப் ஏ சமத் முன்னாள் கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்முதின் மகன் டாக்டர் தாரீக் மஹ்முதினை தலைவராக் கொண்ட சூறாக் கவுன்சிலின் ஆதரவுடன் 67வது சுதந்திர தினத்தினை முஸ்லீம்கள் கொண்டாடும் ;முகமாக சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் ரஜித்த சேனாரத்தின உரையாற்றும்போது– முஸ்லீம்கள் இந்த நாட்டுக்கு வரும்போது ஒரு போதும் பெண்களை கொண்டு வரவில்லை அவர்களது முதலாவது கப்பல் எனது தொகுதியான பேருவளையில் தான் வந்து இறங்கியது. அவர்கள் முதலில்…
இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் -றிஷாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில்.வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன ரிீதியான ஒற்றுமைக்கு எமது மக்கள் காத்திரமான பங்களிப்பை இந்த நாட்டில் செய்துவந்துள்ளார்கள் என்றும் கூறினார். புத்தளம் பாலாவி இல்மியா அரபிக் கல்லுாரியின் 3 வது அல்-ஹாபிழ் டிப்ளோமா பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா வைபவம் இன்று 2015-02-04 ஹூசைனியா…
ஐக்கியத்தை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்
நல்லிணக்கத்தினூடாக தேசிய ஐக்கியத்தை அதன் எல்லா அம்சங்களிலும் அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இளைஞர் பரம்பரைக்கு புதிய திறன் அபிவிருத்தி புதிய அறிவு தொழில் நுட்பத்துக்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்து அதனூடாக தேசமெங்கும் சுதந்திர உணர்வுக்கு உரமூட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் 67 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டில்…
ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்படும்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை குறைத்து பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரத்தை வழங்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் 67வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வடக்கு – தெற்கு மக்களின் மனங்களை ஒன்றுபடுத்தி வாழக்கூடிய தருணம் ஏற்படும் என நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். வரலாற்று தவறுகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்தும் தீவிரவாதிகளிடம்…
வீதியை புனருத்தாரனம் செய்து தருமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம்
எம்.எச்.எம்.அன்வர் புதிய காத்தான்குடி பாம் வீதியை புனருத்தாரனம் செய்யுமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று நடாத்தினர். மிக நீண்ட காலமாக புனருத்தாரனம் செய்யப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி தரும் இவ்வீதிக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதற்கு தடையாக மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் இருப்பதாகவும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதிமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளா தெரிவித்ததாக ஆர்ப்பாட்டத்தின்போது மக்கள் தெரிவித்தனர். இதற்கான உண்மை நிலைப்பாட்டினை அறிவதற்காகவும் அதை மக்களிடம் தெளிவுபடுத்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட…
டுபாய் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீ ஏற்படவில்லை – பொலிஸார் மறுப்பு
உலகின் உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபா கோபுரத்தில் தீப்பிடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கோபுரம், உலகின் உயர்ந்த கட்டிடமாக விளங்கி வருகிறது. துபாயில் சுற்றுலா தளங்களில் புர்ஜ் கலீபா கோபுரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்டிடத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு, அதன் உயரம், அழகை பார்த்து பிரமித்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று புர்ஜ் கலீபா கட்டிடம் தீப்பிடித்து புகை வருவது போன்ற…
