News
மாணவர்களை 16 ஆம் திகதிக்கு முன்னர் இணைத்துக் கொள்ளவும் ; கல்வி அமைச்சு
பிரபல பாடசாலைகளுக்கு தரம் ஐந்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன் முடித்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு குறித்த பாடசாலைகளின் மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. மேலும் 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பிரபல பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படாத மாணவர்களின் மேன் முறையீட்டுக்காக 16 ஆம் திகதிக்குப் பின்னர் இரண்டு வாரங்கள் அளவில் வழங்குவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலைகள் கிடைக்காமை, வேறு பாடசாலைகளை பெற்றுக் கொள்ளல், விண்ணப்பிக்காத பாடசாலைகளை பெற்றுக் கொள்ளல்,…
யாழ் முஸ்லீம் பகுதி கடைகளில் இன்னும் பழைய விலையில் சிற்றுண்டி மற்றும் பால் விற்பனை
பா.சிகான் யாழ். நகரப்பகுதியில் உள்ள உணவகங்களில் விற்கப்பட்ட சில உணவு வகைகளுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளதால் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்பகுதியில் உள்ள உணவகங்களும் விலைகளை உடனடியாக குறைக்குமாறு யாழ். வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெய்சேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். நகரப்பகுதியில் உள்ள உணவக உரிமையாளர்களுடன் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது உணவக உரிமையாளர்கள் விலை குறைப்பினை மேற்கொள்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், முன்னர் 15 ரூபாவிற்கு விற்பனை செய்த தேனீர் 10 ரூபாவிற்கும்இ பால் தேனீர் 30…
சதாமை தூக்கிலிட்ட கயிறு ஏலத்தில்
ஈராக் முன்னாள் மாவீரன் சதாம் ஹுஸைனை தூக்கலிடபயன்படுத்திய தூக்கு கயிறு 70 லட்சம்வரை ஏலம் விடப்பட உள்ளது. ஈராக் முன்னாள் அதிபரும் ராணுவ மாவீரன்யுமான சதாம் உசேன் மீது கடந்த 1982-ம் ஆண்டு முதல் ஆட்சி காலத்தில் பலரை இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. தலைமறைவாக இருந்த சதாம் உசேன், அமெரிக்க, பிரிட்டன் கூட்டு படைகளால் கடந்த 2003-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் நடந்த விசாரணையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாக்தாத்…
பள்ளிவாயலினுள் நின்ற இராணுவ வீரர் துப்பாக்கிச் சூட்டில் பலி
காத்தான்குடி, 5ஆம் குறிச்சி பகுதியில் இன்று மாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5ஆம் குறிச்சி பகுதியில் உள்ள பள்ளிவாயல் ஒன்றில் நடைபெற்ற வைபவமொன்றில் கடமையிலிருந்தபோதே மேற்படி இராணுவ வீரர் துப்பாக்கிச் சூட்க்கு இலக்காகி பலியாகியுள்ளார். சம்பவத்தில், கோவில்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றிய மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.எம்.கருணாரத்ன என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சக இராணுவ வீரர்கள் இறங்கிச் சென்றதன் பின்னர் இவர்…
அண்ணாவுக்கு டொபி, தம்பிக்கு குளிர்பானம்: துஷ்பிரயோகம் செய்த 67 வயது முதியவர்
சிறுவன் ஒருவருக்கு குளிர்பானம் கொடுத்து 67 வயதுடைய முதியவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்டுபத்திய சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, புதிய காத்தான்குடி 2ஆம் குறிச்சி பகுதியில் 10வயது சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5மணியளவில்; தனது வீட்டுக்கு அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது அருகிலுள்ள தேனீர் கடையொன்றின் 67 வயதுடைய உரிமையாளர் குறித்த சிறுவனையும் அவரது சகோதரனையும் அழைத்துள்ளார். பின்னர் சிறுவனின் சகோதரனுக்கு…
‘கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையை கொலை செய்து, அந்த காணியை கைபற்றினார்’
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அரச அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்திய கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள சர்வதேச பௌத்த மத்திய நிலையம் மற்றும் தக்ஷிணாராமய விகாரைக்கு நடுவில் அமைந்துள்ள காணியை (படலிவத்தை) ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பினர் நேற்று 05-02-2015 பார்வையிட்டனர். அந்த காணியின் உரிமையாளர்களும் இவர்களுடன் சென்றிருந்தனர். அதில் ஒரு காணியில் ரஷ்யர்கள் சிலர் நிர்மாணிப்பு பணியொன்றில் ஈடுபட்டிருந்தனர். இந்த காணி தனது தந்தைக்கு சொந்தமானது என தந்தையை கொலை செய்து விட்டு, கோத்தபாய…
பொருட்களை விலை குறைத்து தரவில்லையா..? இங்கே முறையிடலாம்..!
இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 0716027912 – 0788714726 – 0777205137 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பில் முறையிடுமாறு அவ்விரு சங்கங்களும் கோரியுள்ளன. தங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை உறுதி செய்துகொண்டு நுகர்வோர் அதிகார…
மரதன் ஓட்டப்போட்டியில் பங்குப்பற்றிய, 15 வயது பாடசாலை மாணவன் மரணம்
அம்பலந்தோட்டை பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற விளையாட்டு போட்டியொன்றில் பங்குப்பற்றிய பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். பாடசாலை சந்தர்ப்பத்தில் திடீர் சுகயீனமுற்ற நிலையில், இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார். 15 வயதான மாணவன் ஒவருனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தலாய் லாமா சக்தி வாய்ந்த உதாரணம்!:வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒபாமா!
இன்று வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற வருடாந்த தேசிய காலை உணவு பிரார்த்தனைக் கூட்டத்தில் சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தலாய் லாமாவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் இக்கூட்டத்தைத் தலைமை தாங்கிய ஒபாமா உரையாற்றுகையில் உலகில் நண்மையை விளைவிக்கக் கூடிய மதத்தின் சக்தி குறித்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இன்று உலகில் பிரிவினை மற்றும் தீவிரவாதிகள் மதத்தின் பாதையைத் திசை திருப்பி வன்முறையை விதைப்பதற்கே பயன் படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்….
விரைவில் அரச அதிபர்களுக்கு இடமாற்றம்
நாட்டின் அனைத்து மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான அங்கீகாரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கிடைத்துள்ளது என்று,அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் சகல மாவட்டங்களினதும் அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த இடமாற்றம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிடவில்லை.
இஸ்லாமிய தேசம் மீதான விமானத் தாக்குதலை, நிறுத்திய ஐக்கிய அரபு இராச்சியம்
இஸ்லாமிய தேசம் (ஐ. எஸ்.) குழுவுக்கு எதிரான அமெரிக்கா தலைமை கூட் டணியின் பிரதான அரபு உறுப்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் சிரியாவில் வான் தாக்குதல்களை நிறுத்தி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட் டுள்ளனர். ஜோர்தான் விமானப்படை விமானி ஐ.எஸ். இடம் சிக்கியதை அடுத்து விமானிகளின் பாதுகாப்பைக் கருத் தில் கொண்டு ஐக்கிய அரபு இராச்சியம் சிரியாவில் ஐ. எஸ். இலக்கு மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோர்தான்…
கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமிக்கு நீதிமன்ற அனுமதி
தனது மூத்த சகோதரியின் கணவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கருத்தறிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு குழந்தைப் பிரசவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 11 வயது கருத்தறித்துள்ள நிலையில், அதனைக் கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்தக் குழந்தையைப் பிரசவிக்க அனுமதிக்க வேண்டும் என நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் விசேட மருத்துவ அதிகாரி கே.எம்.மகசேன ஹட்டன் நீதிமன்ற நீதவானிடம் அனுமதி கோரியிருந்தார். இதிலுள்ள உளவியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கினார். சிறுமியின் மூத்த…
