News
கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடத்தும் தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டி
தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கான வசன மற்றும் கவிதையடிப்படையிலான கட்டுரை போட்டியொன்றை நடத்த கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீல நீரில் உருவாகும் பொருளாதாரத்திற்கு சமுத்திர சூழலை பாதுகாப்பது அவசியம் என்ற தொனிப்பொருளில் இக்கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த கடல் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் இந்த கட்டுரைப் போட்டி நடத்தப்படவுள்ளது. கடல் எமது வளம்- கடல் பொருளாதாரத்திற்கான அடித்தளம்- சமுத்திரத்தைப் பாதுகாப்பது…
இலங்கை ராணுவத்தை விட்டு சட்ட விரோதமாக விலகியவர்களுக்கு ஒரு நல்ல செய்தி
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள படை வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தை விட்டு விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் இன்று தொடக்கம் எதிர்வரும் 16ம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் படை வீரர்கள் தங்களது படைப் பிரிவு அலுவலகத்திற்குச் சென்று சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது பொருளாதாரத் தடை: ஒபாமா
அமெரிக்க இலக்குகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்துபவர்கள் மீதும், அந்தத் தாக்குதல்களால் பலன் அடைபவர்களையும், தண்டிக்க உள்ள பொருளாதாரத் தடைகளை பிரயோகிப்பதை, அந்நாட்டின் அதிபர் ஒபாமா அங்கீகரித்துள்ளார். அதிகரித்துவரும் இத்தகைய சைபர் தாக்குதல்களை, தேசிய அவசர நிலையாக விவரித்துள்ளார். அமெரிக்கவை எதிர்நோக்கியிருக்கும் மிக மோசமான பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு சவால்களுள், இந்த சைபர் தாக்குதல்களும் அடங்கும் என அவர் கூறினார். வங்கி அமைப்புகள் போன்று மிகவும் நுட்பமான கணினி வலையமைப்பு கொண்ட அமைப்புகளின் மீது சைபர்…
குழந்தைகளின் கூச்சல் ஒலி மாசாகாது என்று ஜப்பானில் புதிய விதிமுறை
ஜப்பானிய தலைநகர் டோக்கியோ நகரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி சிறுவர்கள் விளையாடும் போது போடும் கூச்சல் சத்தம் , ஒலி மாசாக கருத்திற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் 45 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழுப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கை இது வரை அமுலில் இருந்த்து. இதனால் பாலர் பள்ளிகளில் சத்தக் கட்டுப்பாடு சாதனங்கள் நிறுவப்பட்டன. வெளியிடங்களில் சிறுவர்கள் விளையாடுவது கூட சில நேரங்களில் தடை செய்யப்பட்டது. புதிய விதிமுறையின் காரணமாக டோக்யோவில் சிறார் நல நிலையங்கள் பல…
45 ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் நுழைவு வாயில்
துர்க்மெனிஸ்தானின் அகால் மாகாணத்தில் தர்வாஷ் கிராமத்தில் பூமியின் மேற்பரப்பில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பெரிய துளை ஒன்று கண்டு பிடிக்கபட்டது. இந்த துளையை 1971 ஆம் ஆண்டு ரஷ்ய ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டு பிடித்தார். அந்த துளை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தீ ஜூவாலை வெளிப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்த் துளை 70 மீட்டர் அகலம் உள்ளது.இதன் ஆழம் 20 மீட்டர் ஆகும்.இந்த துளையில் இருந்து உயர ரக எரிவாயு…
கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி மாணவர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்துக: அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி உத்தரவு
அட்டாளைச்சேனை, கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி மாணவர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாடிக் கட்டிடத்தில் பாதுகாப்பு முறைமையினை மேற்கொள்ளுமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் நேற்று கல்லூரி நிருவாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். இக்கல்லூரியின் 03ஆம் வருட மாணவனாகிய ஜே.றவூஸ்டீன் வயது (16) கடந்த பெப்பரவரி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை 03ஆவது மாடியிலிருந்து விழுந்து மரணமடைந்தார். இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையையடுத்து இக்கல்லூரியின் மாடிக்கட்டிடத்தின் வெளிப்பகுதி அங்கிருந்த மாணவர்களின் பாதுகாப்புக்கு உகந்தவையாக அமையாதிருந்தமை பற்றி…
விமானமொன்றேனும் சொந்தமில்லாத விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்: பிரதமர்
விமானம் ஒன்றேனும் சொந்தமில்லாத ஒரே விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் விமான சேவை நிறுவனங்களிடம் பஸ், லொறி உள்ளிட்ட ஏனைய வாகனங்களே உண்டு. ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டுக்கு பெரும் சுமையாகவே காணப்படுகின்றது. விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை…
உங்கள் உறவுகளும் யேமனில் சிக்கியுள்ளனரா? உடன் அழைக்கவும்!
யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை0112323015 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. யேமனில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்கள் மூடப்பட்டு நாட்டில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு முக தலைக்கவச தடை இன்று முதல் அமுலில்
முழு முகத்தையும் மறைத்து தலைக்கவசம் அணிய மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. எச்சரிக்கை சந்தர்ப்பமாகவே இத்தடை செயற்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய தமிழ் யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!
சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது கிறுக்கியிருந்தார். இந்தக் குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய அகழ்வாராச்சி பொருட்களை பாதுகாக்கும்…
பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசே உருவாக வேண்டும்
இலங்கை போர்ச் சூழலில் இருந்து விடுபட்டும் பொருளாதார நிலையில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. ஒன்றுபட்ட நாட்டினுள் சமூக, பொருளாதார அபிவிருத்தியினை வென்றெடுக்க வேண்டு மாயின் அனைத்து கட்சிகளினதும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலின் பின்னரும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்த தேசிய அரசாங்கத்தினையே கட்டியெழுப்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய அரசே ஒரேவழி எனவும் பிரதமர் தெரிவித்தார்.சக்தியினால் வலுப்பெறும் இலங்கை எனும் தொனிப்பொருளில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சினால்…
50 கிலோ சீமெந்து மூடை 870 ரூபா! வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு இலட்சினையின் கீழும் விற்பனை செய்யப்படும் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 870 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த நிர்ணய விலைக்கு சீமெந்து விற்பனை செய்யாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
