Headlines

விமானமொன்றேனும் சொந்தமில்லாத விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்: பிரதமர்




விமானம் ஒன்றேனும் சொந்தமில்லாத ஒரே விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எங்கள் விமான சேவை நிறுவனங்களிடம் பஸ், லொறி உள்ளிட்ட ஏனைய வாகனங்களே உண்டு.

ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டுக்கு பெரும் சுமையாகவே காணப்படுகின்றது.

விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை நடத்தியது.

குறித்த விசாரணை அறிக்கை அலரி மாளிகையில் வைத்து நேற்று பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *