News
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் யாழ் வருகை
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்க்கு வருகைதந்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொண்டதுடன் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடினர். இக்குழுவினர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் மதியம் சந்தித்து முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.
முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலிடம் அரசியலமைப்பு சூழ்ச்சிகள் இல்லை: அனுர குமார
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ள 19ஆம் அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் பிரதமருக்கான அதிகாரம் அதிகரிப்பது எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்திலே என அவர் மேலும் கூறியுள்ளார். அதுவரை இவ் அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே கிடைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அதனை பறித்துக் கொள்ள முடியாதெனவும் அவ்வாறு கூறுவது முற்றிலும் பொய்யான ஒரு விடயமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சாதனை படைத்த சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரி மாணவர்கள்
மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார் நேற்று வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபெற்றினடிப்படையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியில் ஆறு மாணவர்கள் 9பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியில் ஜே.எம்.எம்.ஷிகான் நஜீலா சிம்றா எம். எம். எவ். றசான் எ.சி.ஷமாஅப்றின் எம்.ஆர்.ஹன்சா எம்.எம்.எவ்.ஷிறாபா ஆகிய 06 மாணவர்கள் 9ஏ சித்திபெற்றுள்ளதாக அதிபர் எச்.எம்.பாறூக் தெரிவித்துள்ளார். 9ஏ சித்தி பெற்று சம்மாந்துறைக்கு பெருமை சேர்த்த குறித்த ஆறு மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன….
கணவன், மனைவி இருவருக்கும் முதியோர் கொடுப்பனவு
-வி.தபேந்திரன் – சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை கணவன், மனைவி இருவரும் பெறுவதற்கான புதிய சுற்றுநிரூபத்தை அமைச்சின் செயலாளர் டீ.கே.றேணுகா ஹேரத் மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 70 வயதை கடந்த முதியவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், சமூக சேவை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் கணவன், மனைவி இருவரும் 70 வயதைக் கடந்திருந்தாலும் ஒருவருக்கு மட்டும்…
முன்னாள் விமானப்படைத்தளபதியிடம் விசாரணை
முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு, இன்று புதன்கிழமை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டு, மிக் விமானங்கள் நான்கு, மற்றும் விமானங்கள் சிலவற்றை திருத்தும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கலில் 14 மில்லியன் அமெரிக்கடொலருக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை
– செல்வநாயகம் கபிலன் – யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. நிஷாந்தன் திலக்கி (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு காணாமற்போயுள்ளார். செவ்வாய்க்கிழமை (31) மதியம் மலசல கூடத்துக்குச் சென்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.
தாதியர் பயிற்சிப் பெற்ற 2738 பேருக்கு நிரந்தர நியமனங்கள்
தாதியர் பயிற்சிப் பெற்ற 2738 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (31) அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க- சுகாதார மற்றும் சுதேசதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன- சுகாதார சேவை ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி- சுகாதார அமைச்சின் செயலாளர் டி.எம்.ஆர்.பி. திஸாநாயக்க உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நைஜீரிய தேர்தலில் முன்னாள் போராளி குழுத்தலைவர் வெற்றி
நைஜீரியாவில் நேற்று (31) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதற்தடவையாக எதிர்கட்சித் தலைவர் முகம்மட் புஹாரி சரித்திர புகழ் பெற்ற வெற்றியை ஈட்டியுள்ளார். 72 வயதான முகம்மட் புஹாரி முன்னாள் போராளிக்குழு தலைவர் ஆவார் அவர் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார் என்று அங்கிருந்து வரும் உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு மோசடிகள் இடம்பெற்றபோதிலும் இவ்வெற்றி பாராட்டத்தக்கது என கருத்து தெரிவித்துள்ளனர் கண்காணிப்பாளர்கள். இவ்வெற்றியை பொதுமக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என பிபிஸி…
டெங்கு அதிகரிப்பை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படை ஒத்துழைப்பு
நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேல்மாகாண பாதுகாப்புத் தலைமையவினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய கொழும்பு- மாத்தறை- இரத்தினபுரி- கேகாலை- குருணாகலை- மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படையினர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் யு.ஏ.பீ மெதவலவின் கண்காணிப்பில் மார்ச் 26 முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு கடலோரங்களில் சிறிதளவில் மழை பெய்யலாம்!
நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (01) மாலை அல்லது இரவு வேளையில் இடி , மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருகோணமலை பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடலோரப்பகுதிகளில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம். கிழக்கு கரையோரமாக மணிக்கு 20 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.
மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்குமா?: ஆதாரம் இல்லை என தகவல்
மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாத நோயை தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் மீன்எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பால் அவை மேற்கண்ட நோய்களில் இருந்து காக்கும் என நம்பப்படுகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் மீன் எண்ணெயால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இருந்தும் மீன்எண்ணெய்…
