News
லஞ்ச ஊழல் ஆணையாளருக்கு எதிராகவும் முறைப்பாடு!
மைத்ரி அரசின் கீழ் புத்துயிர் பெற்று வரும் லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் திருமதி தில்ருக்ஷிக்கு எதிராகவே லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றே இவ்வாறு முறையிட்டுள்ளதோடு கடந்த காலத்தில் அரச திணைக்களங்களில் பணியாற்றும் போது நிதிக் கையாடலில் ஈடுபட்டதாகவே அவருக்கு எதிரான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் குருணாகலையை சேர்ந்த முகம்மத் ரிசா வபாத்
கட்டாரில் தொழில் புரிந்து வந்த 39 வயதுடைய குருணாகலையை சேர்ந்த Mohamed Riza கடந்த ஏப்ரல் 01 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக கட்டாரில் காலமானார். அன்னாரின்ஜனாஸா இன்று (02.04.2015) இஷா தொழுகையைத்தொடர்ந்து அபூ ஹமூர்மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். – SEYED ARIF HASSAN ZAHIR MOULANA DOHA QATAR
திருகுர்ஆனை பார்க்க முடியாத அளவிர்கு பார்வை குன்றிய நிலையிலும் லென்ஸை பயன் படுத்தி திருகுர்ஆன் ஓதும் சவூதி முதியவர்!
முதுமை வந்து விட்டது உடல் தளர்ந்து விட்டது பார்வை குன்றி விட்டது ஆயினும் திருமறை குர்ஆனின் எழுத்துகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை அதன் ஒசைகளை எமது நாவுகளில் எழுப்பாமல் இருக்கமுடியவில்லை என்பதை உறுதி செய்யும் விதத்தில் திருகுர்ஆனை பார்த்து ஓதும் அளவிர்கு பார்வை இல்லாமல் இருந்தும் லென்ஸை பயன்படுத்தி திருகுர்ஆனை ஓதும் முதியவரை தான் படத்தில் பார்க்கிறீர்கள் இடம் மக்கா மாநகரம்
இவர் யார் என்று தெரிகிறதா ?
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி, இரு புனித பள்ளியின் சேவகர், உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் அவர்கள் சர்வ சாதாரணமாக உணவு அருந்துவதை காணும்போது உடல்கள் சிலிர்க்கிறது.
இது தான் இஸ்லாம்! சவூதி அரேபியா துப்புரவு தொழிலாளர்களுடன் காபாவின் இமாம் சுதைசி
முஸ்லிம்களின் முதல் புனித தளம் காபத்துல்லாஹ்வின் மூத்த இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைசி, முஸ்லிம்களின் இரண்டாவது புனித தளம் மதீனா மஸ்ஜித் அல்நபவிற்க்கு கடந்த வாரம் வந்தபோது, மஸ்ஜிதில் துப்புரவு செய்து வரும் தொழிலாளர்களுடன் ஒரு போட்டோ.
துபாய் நகரில் இன்று திடீரென வீசிய புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்பு
சாலைகளில் நடந்து சென்றவர்கள் புழுதியிலிருந்து தப்பிக்க முகத்தை துணியால் மறைத்த படி சென்றனர். புழுதி காற்று வீசுவது சில நாட்கள் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகவே இந்த புழுதி மணல் காற்று வீசுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நண்பர்கள் கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள். கடந்த மூன்று நாட்களாக பனி மூட்டம் கடுமையா இருந்தது. காலநிலையும் அருமையா இருந்தது. இன்று காலையிலேர்ந்து பனிக்கு பதிலா புழுதிப்புயல் வீசுது! 100மீ தூரத்துக்கும் மேல எதையும் தெளிவா பார்க்க…
போர் செய்வதர்கு வானில் பறக்கும் முன்பு அல்லாஹ்வை வணங்கும் விமானிகள்!
மௌலவி செய்யது அலி ஃபைஜி ஏமனை ஆக்ரமித்த ஷியா பயங்கரவாதிகளுக்கு எதிராக வான் வெளி தாக்குதலை நடத்த புறப்படும் விமானிகள் விமானத்தை இயக்கும் முன் விமான தளத்திலேயே படைத்தவனுக்கு முன் மணடியிட்டு தொழுகையில் ஈடுபடும் இனிய காட்சியை தான் படம் நமது கண்களுக்கு விருந்தாக்கின்றது
ஆகாயத்தில் பெட்ரோல் பங்க்: இனி பறக்கும்போதே விமானத்தில் எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம் – விஞ்ஞானிகளின் அற்புதம்
நீண்ட தூரம் செல்லும் விமானங்கள், ஒரு சில விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காகவே நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த குறையை போக்க புதிய ஆய்வில் மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகள் குருய்சர் எனேபிள்ட் விமான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதன்படி ஒரு விமானத்தில் எரிபொருள் மட்டும் நிரப்பப்பட்டிருக்கும். அதில் நிரப்பட்ட எரிபொருள் மூலம், 5 விமானங்கள் வரை வானில் பறக்கும் போதே பெட்ரோலை நிரப்பிக்கொள்ளமுடியும். தொழில்நுட்ப ரீதியாக இம்முறை சாத்தியமானது என சிமுலேஷன் நிரூபித்துள்ளதாக கூறிய…
இனவாத சக்திகளின் செயற்பாடுகள் நாட்டில் தலை தூக்க ஆரம்பித்துள்ளன
இனவாத சக்திகளின் செயற்பாடுகள் மீண்டும் நாட்டுக்குள் கொழுந்து விட ஆரம்பித்துள்ளன. இனவாதத்திற்கும் இனவாதிகளுக்கும் இடமளித்தால் பாரிய பிளவுகளுக்கே வழிவகுக்கும். இப்படியானதொரு தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் தொடர்பி லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி உட்பட அரசியல் அந்தஸ்தை இழந்து நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தத் துடிக்கும் சக்திகளுக்கு இனி ஒரு போதும் இடமளிக்க கூடாது. அவ்வாறு…
ஹெல்மட்டுக்கு தடை என்றால் பர்தாவையும் உடனடியாக தடை செய்யுங்கள்: சிங்கள ராவய
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதற்கு தடை என்றால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடையையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என சிங்கள ராவய தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிங்கள ராவய இதனை குறிப்பிட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவ்வமைப்பு, நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கே முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்களுக்கு பொலிஸார் தடை…
அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண
காரணமின்றி கைதுசெய்து வைத் திருக்கும் அரசியல் கைதிகளை உடன டியாக விடுதலைசெய்ய வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மைத்திரி ஆட்சி இருக்கும்வரை நீடிக்க அனுமதிக்க முடியும்.” இவ்வாறு தெரி வித்தார் நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரம பாகு கருணாரட்ன. கொழும்பில் நேற்று நடைபெற்ற அதி காரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் அமைப்பின் ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத் துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “”காரணமின்றி கைதுசெய்து…
கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை
மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த தடை அமுலுக்கு வரவுள்ளது. இதற்கான சுற்றுநிருபங்கள் வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதேநேரம், இதனை மீறும் தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களுக்கெதிராக…
