Headlines

இதுதான் இஸ்லாம்! முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் !

முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் ! ஹைதராபாதில், நேற்றுமுன்தினம் (02-04-2015), கீழே கண்டெடுத்த 25 சவரன் நகை, உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை, ஒரு முஸ்லிம் பெண்மணி காவல்துறையில் ஒப்படைத்துள்ளார். மேற்படி பெண், ஆசிப் நகரிலிருந்து ‘ஹகீம் பேட்டை’க்கு சென்றுக் கொண்டிருக்கையில், அனாதையாக கீழே கிடந்த ஒரு பையை திறந்து பார்த்தபோது, அதில் தங்க நகைகள், 2 செல்போன்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததைக் கண்டார்….

Read More

நாட்டில் அனைவருக்கும் மத சுதந்திரமுண்டு -ஜனாதிபதி

இந்த நாட்டில் அனைவருக்கும் மத சுதந்திரமுண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமை (04) தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்;தவ போதகர்கள் ஒன்றியத்தின் பாஸ்கா பண்டிகை வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் அவர்கள் சார்ந்த மத உரிமை மத சுதந்திரமுண்டு. அவர்கள் தமது மதத்தை பின் பற்றுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு. ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு மதக்கோட்பாடும் முக்கியமாகும்….

Read More

துபாயில் 140 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பொருளாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த வருடாந்த முதலீட்டாளர்களுக்கான கூட்டமும்,மற்றும் கண்காட்சியும் அண்மையில் துபாயில் அமைந்துள்ள சர்வதேச கூட்ட அரங்கில் இடம் பெற்றது. ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பிரதி ஜனாதிபதியும், பிரதமருமான ஷேய்க் முஹம்மத் பின் ராசிட் அல் மக்தும் தலைமையில் இடம் பெற்ற இந்த அமர்வில் 140 நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் இதில் கலந்து கொண்டனர். இலங்கை சார்பில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் இதில் கலந்து…

Read More

அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் பிரதியமைச்சர் அமீர் அலி

அப்துல்லாஹ் அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்கும்போதுதான் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்ய முடியுமென்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார். கல்குடா தொகுதியின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் ‘திவிநெகும திட்டத்தினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தி’ என்ற தலைப்பிலான மாநாட்டில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இம் மாநாட்டில்  தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்க அதிகாரிகளில் ஒரு…

Read More

எனது நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்றும் எனது அரண்மனை வாசல் திறந்தே இருக்கும் சவுதி மன்னர் சல்மான் உருக்கம்!

சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் மன்னர் தனது ரியாத் அரண்மனையில் நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களையும் முக்கிய கபீலாக்களின் தலைவர்களையும் சந்தித்தார. அந்த சந்திப்பின் போது அவர் நிகழ்த்திய உரை ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதர்கு உரிய வரைவிலக்கணமாக அமைந்ததுஅந்த உரையில் இடம் பெற்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த சில விசயங்களை மட்டும் உங்களுக்கு தருகிறேன் சவுதி அரேபிய ஒரு இஸ்லாமிய நாடு உலக முஸ்லிம்கள் அனைவர்களும் புனிதமாக கருதும் மக்காவையும் மதினாவையும்…

Read More

அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கு 04 சதிகாரர்கள் சேர்ந்து சதி எனும் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் – YLS ஹமீட்

அஸ்ரப் ஏ சமத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத்பதியுத்தீன் எதிராக லஞ்ச ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்டிருக்கின்ற இரண்டு வெவ்வேறான முறைப்பாடு தொடர்பாகவும் அவசரமாக விசாரித்து குறித்த ஆணைக்குழு உண்மையை உடனடி வெளிக்கொணர வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் தலைமையிலான அக்கட்சியின் அதியுயர்பீடம் தீர்மானித்திருப்பதாக அதன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று ஜனாதிபதி தலைமையில் பிரதமரிண் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுக் குழுவில் பிரஸ்தாபித்துள்ளதோடு…

Read More

களுவாஞசிக்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 179 பயனாளிகளுக்கு 100000 ரூபா வீட்டுக்கடன் வழங்கும் வைபவம்

அஸ்ரப் ஏ சமத் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் சமுா்த்தி அமைச்சின் ஒத்துழைப்போடு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாட்டின் எல்லா தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக 50000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் களுவாஞசிக்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 179 பயனாளிகளுக்கு 100000 ரூபா வீட்டுக்கடன் வழங்கும் வைபவம் 02.04.2015 அன்று களுவாஞசிக்குடி இராசமாணிக்கம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபை தலைவர் திரு.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற…

Read More

இன, மதவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு 02 வருட சிறை -ராஜித சேனாரத்ன

இன, மதவாதக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. அமைச்சரவையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு அமைவாக, இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அது தண்டனை சட்டக்கோவையின் பிரகாரம் குற்றமாகக் கருதப்படும். அவ்வாறு கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என…

Read More

ஜப்பான் வான்வெளியில் வேற்று கிரகவாசிகள் நடமாட்டம்?: பாராளுமன்றத்தில் விவாதம்

ஜப்பானில் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. அப்போது அன்டோனியோ இனோகி என்ற எம்.பி. குறுக்கிட்டு நமது நாட்டின் வான் எல்லையில் வேற்று கிரக வாசிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவது அச்சமாக உள்ளது. பச்சை நிற வேற்று கிரக வாசிகள் ஒருவிதமான வாகனத்தில் பறந்து வந்தது உண்மையா? என கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து எம்.பி.க்கள் பலரும் அது குறித்து கேட்டனர். அதற்கு ராணுவ மந்திரி ஜெனரல் நகட்டானி பதில் அளித்தார். ஏதோ ஒருவிதமான ஒரு பொருள் நமது நாட்டு…

Read More

ரணில் விக்ரமசிங்க அம்பாறை விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுய்யதாக சம்மாந்துறைத் தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தெரிவித்தார். இதன் போது பிரதேசங்களினதும், தொகுதிகளினதும், மாவட்ட ரீதியான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாறை…

Read More

மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர்!

யேமனில் இடம்பெறும் மோதலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மூவர் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தோனேஷிய படகினால் குறித்த இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கையர்கள் ஐவரை பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதத்தில் உருவாகிறது அரபு லீக்கின் புதிய இராணுவம்

அரபு நாடுகள் இடையே ஒருங்கிணைந்த ஒரு இராணுவம் உருவாக்க பட வேண்டும் என்பது அப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவாகும் முஸ்லிம்களின் இந்த கோரிக்கை நியாயமானது என்பதை அண்மையில் சவுதி மன்னர் சல்மான் தமது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததோடு அரபு லீக்கின் பொறுப்பில் உள்ளவர்கள் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார் இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு எகிப்தின் ஷரம்சேக் நகரில் நடைபெற்ற அரபுலீக்கின் 26 வது உச்சி மாநாட்டில் அரபு நாடுகளிடையே ஒருங்கிணைந்த…

Read More