News
பொலிஸார் இடைநிறுத்தம்; நீதவான் அதிரடி
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் தற்காலிகமாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பரிசோதகர் சிசேர என்பவரே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் யாழ். நகரப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்….
சாய்ந்தமருதில் ஆடை கைத்தொழில் பயிற்சி நிலையம் திறப்பு
எஸ்.அஸ்ரப்கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடின் அயராத முயற்சியினால் கொண்டுவரப்பட்ட ஆடை கைத்தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழா இன்று (04) திங்கட்கிழமை அம்பாரை மாவட்டத்தின் சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கலந்து கொண்டு இந்நிலையத்தினை திறந்து வைத்தார். கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவினரின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது அமைப்பாளர்…
மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி வபாத்
ஏ.எஸ்.எம்.ஜாவித் மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் (04) மாலை நீரில் மூழ்கி பலியானதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற தபாலகர் ஏ.ஜி.எம். நௌபர் என்பவரின் புதல்வர்களான முஹமட் சிபான் (28), முஹமட் முபாஸ் (19) ஆகியோராவர். மாரணமான இரு கோதரர்களின் ஒரு சகோதரர் திருமனமாகி ஒரு வாரமான நிலையில் மேற்படிக் குடும்பத்தினர் சிலாவத்துறைப் பகுதிக்கு பொழுது போக்கிற்காகச் சென்ற சமயமே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இன்று (04) மாலை சுமார்…
இறக்காமத்தில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும், பயன் பெரும் குடும்பங்களை விழிப்பூட்டும் கூட்டமும்..
அப்துல் அஸீஸ் இறக்காமம் பிரதேசத்துக்குட்பட்ட வறிய குடும்பம்களை சேர்ந்த யுவதிகலுக்காக தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும், இவ்விடயம் தொடர்பாக பயன் பெரும் குடும்பங்களை விழிப்பூட்டும் கூட்டமும் இறக்காமம் பிரதான வீதியில் நேற்று மாலை (03 ) இடம்பெற்றது. இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையம்களின் ஊடக இறக்காமம் பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பம்களை சேர்ந்த யுவதிகள் கட்டம் கட்டமாக தொடர்சியாக பயன்பெறவுள்ளனர். இறக்காமம் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் எ.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
தயா குருப் கம்பனியின் வெசாக் வெளிச்ச தோரணம்
அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாண எதிா்கட்சித் உறுப்பினரும் ஜ.தே.கட்சி அமைப்பாளருமான தயா கமகே மற்றும் அவரது பாரியார்பிரதியைமைச்சருமான திருமதி கமகே அவா்களது தயா குருப் கம்பணியினால் வெசாக் வெளிச்ச தோரணம் மற்றும் வெசாக் நிக்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் ஆரம்பித்து வைத்தனா். இவ் நிகழ்வு தெஹிவளை – நுகோ கொடையில்உள்ள பெப்லியானவில் தயா கம்பணியில் நடைபெற்றது.
தாராபுரத்தில் நீரில்மூழ்கி வபாதானகளுக்கு அமைச்சர் றிஷாதின் அனுதாபச் செய்தி
தாராபுரத்தில் ஊரில் ஏற்பட்ட மிகத்துக்கமான செய்தி கேள்வியுற்ற உடன் தனது சகல நிகழ்ச்சி நிரல்களையும் ரத்துச்செய்துவிட்டு திரும்பினேன். உண்மையில் எதிர்பாராதது இறைவன் வாக்கழித்த சுவர்க்கத்தை பெறும் கூட்டத்தில் இருவரும் உள்ளார்கள் அத்துடன் அவர்களது சுவனத்துக்காக பிராத்திப்பதுடன், துயரத்தில் வாழும் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுகின்றனர்….
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம்…
கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60வது யுவதிகலுக்கான தையல் பயிற்சி நிலையம்கள்..
அப்துல் அஸீஸ் கல்முனை பிரதேசத்துக்குட்பட்ட கல்முனைக்குடி மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய இடம்களில் தையல் பயிற்சி நிலையமகளை திறந்து வைக்கும் நிகழ்வுகள் நேற்று (03ஆம் திகதி ) இடம்பெற்றது. இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையம்களின் ஊடக கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60வது யுவதிகள் பயன்பெறவுள்ளனர். புடைவை மற்றும் ஆடைகள்நிறுவனத்தின்அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான…
பிள்ளையானின் துவேசப் பேச்சு; பிரச்சினைகளை ஏற்படுத்தி விடாதீர்கள் – அமீர் அலி
– அனா – அன்மைக்காலமாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்னைப் பற்றியும் எனது பெயருக்கு களங்கம் வரக்கூடிய வகையிலுமே கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார் இது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கனவு கான்பதற்கு அல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடலாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (02.05.2015)…
அட்டாளைச்சேனையில் தையல் பயிற்சி நிலையம் திறப்பு
கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் வழிகாட்டல்களின் கீழ் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவணத்தினூடாக அம்பாரை மாவட்டமெங்கும் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டடு வருகிறது. அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு (2015.05.02) சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு தலைவரும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளருமான எம்.ஏ.சீ நஜீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர்…
ஒலுவில் பாலமுனை பிரதேசங்களில் தையல் நிலையம் திறப்பு
றியாஸ் ஆதம் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவணத்தினூடாக அம்பாரை மாவட்டமெங்கும் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டடு வருகிறது. பாலமுனை பிரதேசத்திற்கான தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு (2015.05.02) சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாலமுனை அமைப்பாளர் எம்.எம் றிஸ்வான் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் பிரதம அதிதியாகவும்…
பலவசதிகள் இருந்தும் சமுகத்தின் நன்மை கருதியே மகிந்தவை விட்டு வெளியேறினோம் -றிஷாத் பதியுதீன்
A.S.M.இர்ஷாத் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நான் மக்கள் பணி செய்வதற்காக கேட்ட உதவிகளையெல்லாம் தந்தபோதும் சமூகத்தின் நன்மை கருதியே மஹிந்த ராஜபக்ஷவின் அரசிலிருந்து தமது கட்சி வெளியேறியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஐம்பெரும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாத் தனது உரையில் மேலும் கூறியதாவது: மஹிந்த அரசிலிருந்து வெளியேறுவதற்கு தாங்கள் எடுத்த…
