News
19ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்!
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (30) முதல் அமுலுக்கு வருவதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை, இதிலுள்ள நான்கு சரத்துக்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின் அமைக்கப்படும் புதிய பாராளுமன்றத்திலே அமுலுக்கு வர இருப்பதாகவும் அவர் கூறினார். நீதிச்சேவை ஆணைக்குழு தொடர்பான 4 சரத்துகளே இவ்வாறு அடுத்த பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் செயற்படுத்தப்பட இருக்கிறது. நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாலே குறித்த சரத்துகள் அமுலாவது தாமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்…
காணாமல் போனவர்கள் வெலிக்கடை சிறையில் இருப்பதாக முறைப்பாடு
கடந்த காலங்களில் காணாமல் போனதாகக் கூறப்படும் தமது பிள்ளைகள், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது ஒழுங்குகள், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று புதன்கிழமை (28) முறையிட்டனர். அமைச்சர் அமரதுங்கவை நேற்று சந்தித்த, காணாமல் போனவர்களின் உறவினர், வெலிக்கடை சிறைச்சாலையில் தங்களது பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது குறித்த உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். சிறைச்சாலையில் அண்மையில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வின்…
மின்சார வேலியில் சிக்கி 16 வயது சிறுவன் பலி
ஆர்.கோகுலன் மின்சார வேலியில் சிக்குண்டு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் வெலிமடை தம்பவின்ன பகுதியில் நேற்று வியாழக்கிமை(29) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த ரவிந்து டி சில்வா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை, தம்பவின்ன பகுதியில் சட்டவிரோதமாக மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே இச்சிறுவன் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
உதயசிறி விடுதலையானார்
ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு…
சுயநலத்தை நோக்காக கொண்டே சு.க.வினர் 19 ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தனர்
தமது சுயநலனை கருத்திற் கொண்டே சுதந்திர கட்சியில் மஹிந்தவுக்கு ஆதரவான சிலர் ஜனாதிபதியின் பேச்சுக்கு இணங்கி 19 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற ஆதரவு வழங்கியுள்ளனர் என நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப் பின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை 19 ஆவது திருத்தம் அமுலுக்கு வரவேண்டும் என்ற கொள்கையுடன்…
அவசரமாக உதவி செய்வோம்..!
அவசரமாக உதவி செய்வோம்..! பணம் மூலம் உதவி செய்ய முடிய விட்டாலும் செய்வதன் மூலம் உதவி செய்யும் கரங்களுக்கு செய்தியை எடுத்துச் செல்வோம். Please help Dear Friend I need your SUPPORT now please ,My son ZAIN who is now 6 years old has to do a urgent RADIATION TREATMENT for a brain tumor, the doctors predicted this last week And my…
கொழும்பு மாநகரில் நாளை 17 மேதினக் கூட்டங்கள்
கொழும்பு மாநகரில் நாளை 17 கட்சிகள் மேதினக் கூட்டங்களையும் மேதின ஊர்வலங்களையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையிட்டு கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலதிக பாதுகாப்புக் கடமையில் 5050 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்தார். 2800 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காகவும், 2250 பொலிஸார் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 பொலிஸாரும், போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு என 1200 போக்குவரத்து பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேதினத்தன்று அத்தியாவசிய…
மே தின கூட்டத்திற்கு செல்வது குறித்து இன்னும் முடிவில்லை
மே தின கூட்டங்களில் பங்கேற்பது குறித்து இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தொழிற்சங்க சம்மேளன மே தின கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது : குறைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பல்வேறு நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசியலமைப்பு பேரவைக்கு ஏழு மக்கள் பிரதிநிதிகளும் மூன்று சிவில் பிரதிநிதிகளும் அங்கத்துவம் வகிப்பதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்…
தொழிற்சாலையை விட்டு தப்பி சென்ற அதிகாரிகள் : 450 ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
(K.Kapila) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த 450 ஊழியர்களே இவ்வாறு தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தொழிற்சாலையை மூடிவிட்டு தப்பி சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகளின் பெயரை மாற்ற தந்தைக்கு உத்தரவு
புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோர் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை சூட்டி மகிழ்வர். ஆனால் சீனாவில் ஒரு குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயரை மாற்றுமாறு, அதன் தந்தைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு சில சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பெயர் வைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது வழக்கு தொடரப்படும். அங்கு வசித்து வரும் லியூ என்பவர் தனக்கு புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு பெய்…
கிரேக்க நாட்டில் கலகக்காரர்களிடம் இருந்து மந்திரியை காத்த மனைவி
கிரேக்க நாட்டில் யானிஸ் வாரவ் பக்கிஸ், நிதி மந்திரி பதவி வகித்து வருகிறார். அவர் தனது மனைவி டேனி மற்றும் நண்பர்களுடன் அங்கு எக்சார்சியா மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். அவர்கள் அனைவரும் இரவு விருந்தினை சாப்பிட்டு முடித்தனர். அப்போது அங்கு அதிரடியாக புகுந்த இடதுசாரி கிளர்ச்சியாளர்கள் கண்ணாடி பொருட்களை வீசி அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நிதி மந்திரி யானிஸ், காயம் அடைந்து விடாதபடிக்கு மனைவி டேனி,…
