News
காசியப்ப மன்னரின் கிரீடத்தை எடுக்கச் சென்றவர்கள் கைது
காசியப்ப மன்னரின் கிரீடம் சிகிரிய பகுதியில் புதையல் ஒன்றில் காணப்படுவதாகக் கூறப்பட்ட தகவலுக்கு அமைய, அந்த புதையலை எடுக்கச் சென்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக தம்புள்ள துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களின் மோட்டார் வாகனம், முச்சக்கர வண்டி, தொலைநோக்கி உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கல்கமுவ மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். துணைப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த…
உலகக் கோப்பை கால்பந்து போட்டி – கட்டார் உரிமை ரத்தா?
ஊழல் புகார்களினால் சர்வதேச கால்பந்து சம்மேளனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த சம்மேளனத்தில் முக்கிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உயர் அதிகாரியான டொமினிகோ ஸ்காலா ஸ்விட்சர்லாந்து பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பணம் கொடுத்து வாக்குகளை பெற்றதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்தால், கத்தர் மற்றும் ரஷ்யாவிற்கு அளித்த உரிமைகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கு ரஷ்யாவும், 2022…
வாலிபர் உடலில் இருந்து 420 சிறுநீரக கற்கள் அகற்றம்
சீனாவில் கிழக்கு ஷெஜியாங் மாகாணத்தில் டோங்யாங் நகரைச் சேர்ந்தவர் மிஸ்டர் கி (40). இவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். எனவே, டோங்யாங்கில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை சி.டி. ஸ்கேன் மூலம் டாக்டர் பரிசோதித்தார். அப்போது அவரது இடது புற சிறுநீரகம் முழுவதும் கற்கள் நிறைந்திருப்பதை அறிந்தார். எனவே அவற்றை ஆபரேசன் மூலம் அகற்ற திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆபரேசன் செய்து சிறுநீரகத்தில்…
கண்டி மற்றும் சுற்றுப்புற வாழ் மக்கள் அவதானம்!
கண்டி பிரதேசத்தில் தற்போது ஒருவித கண்நோய் தீவிரமாக பரவி வருவதாகவும் இந்நோய் அதிகமாக பாடசாலை மாணவர்களிடமே காணப்படுவதாகவும் கடுகண்ணாவ வைத்தியசாலை அதிகாரி திஸாநாய க்க தெரிவித்தார். இதே தகவலை கண்டி பிரதான வைத்தியசாலை உட்பட சுற்றுப்புற வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளும் தனியார் துறை வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக கண்சிவந்த நிலையில் கண்நோயினால் பீடி க்கப்பட்டவர்கள் சிகிச்சைபெற்றுக்கொள்ள வருவதாகவும் இவர்களில் அதிகமாக பாடசாலை மாணவர் மாணவிகளே காணப்படு கின்றனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்….
புதுக்குடியிருப்பு ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் றிஷாத் விஜயம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா யுத்தத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிறுப்பு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் டெஸ்கோ ஆடை உற்பத்தி நிலையத்தினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் ,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று பார்வையிட்டுள்ளார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் ஆடை உற்பத்தி நிறுவகங்கள் காணப்படுவதாலும்,இதன் மூலம் இப்ப்பிரதேசத்தில் மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்,யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் இதனது உற்பத்தியினை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் றிசாத் முகாமைத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்….
சுகைப் எம். காசீமின் நூல் வெளியீடு; பசீர் சேகுதாவுத் ஆற்றிய முழு உரை
அஸ்ரப் ஏ சமத் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் (பா.உ) அண்மையில் கொழும்பில நடைபெற்ற சுகைப் எம். காசீமின் நூல் வெளியீட்டின்போது பசீர் சேகுதாவுத் ஆற்றிய முழு உரை ஹிட்லரின் பாணியில் முஸ்லிம்களைப் பற்றிய சுத்தப் பொய்கள் இனவாதிகளினால் அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நம்புகின்றவர்களின் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கடந்த ஜனவரி 8ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் என்பது…
1 இலட்சம் ருபாவே செலவழித்து முதன் முதலில் பாராளுமன்றம் சென்றேன் – மைத்திரி
அஸ்ரப் ஏ சமத் விசேட அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சரவை பத்திரமே இருக்கும். அது 20வது தேர்தல் அரசியலமைப்பு சம்பந்தப்பட்டவையாகும். இன்று எனது தலைமையில் எவ்வாறேனும் அப் பத்திரத்திரத்தை அனுமதிப்பதாகும். அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் இந்த நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதியான 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து அத் சீர்சிருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை தமது கையை உயர்த்தி அனுமதித்தல் வேண்டும். என இன்று கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் நடைபெற்ற ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி கொழும்பு சம்மேளத்தில்…
காரைதீவில் சிறுவர் ஊடக மாநாடு
எம்.எம்.ஜபீர் சர்வேதேச சிறுவர் தொழிலுக்கெதிராக தினத்தினை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட மூவீன சிறுவர்கள் கலந்து கொள்ளும் சிறுவர் ஊடக மாநாடு எதிர்வரும் புதன்கிழமை (10) 2.00 மணிக்கு காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ‘தற்காலத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மூவின சிறுவர்களும் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு அறியப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெறவுள்ளது. அம்பாரை மாவட்ட மனித அபிவிருத்தி தாபனத்தின் இணைப்பாளர் சீ.சிறிகாந் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் ஒய்வு பெற்ற…
“பொதுபல சேனா சூழ்ச்சி மிக்கதென மஹிந்த ராஜபக்ச, தற்போது புரிந்து கொண்டுள்ளார்”
பொதுபல சேனா அமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கியது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சித்தமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பு இந்நாட்டு முஸ்ஸிம் மக்களை அழுத்தத்திகுற்படுத்தினார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காமைக்கு காரணம் பொதுபல சேனா எனவும், வட மாகாணத்தினுள் கோத்தபாய ராஜபக்ச…
தவளைகளின் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் – சோபித தேரர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் தவளைகளின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒர் சந்தைப் பண்டமாக மாறியுள்ளதாகவும் எந்த நேரத்திலும் அதனை விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவளைகள் ஒரு பக்கத்திலிருந்து மற்றைய பக்கத்திற்கு தாவுவதனைப் போன்றே பாராளுமன்ற உறுப்பினர்களும் தாவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மிருகங்களுடன் பணியாற்றுவதற்கு வனவிலங்கு…
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் – றிஷாத் பதியுதீன்
ரஸீன் ரஸ்மின் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிகளை பிடித்து அங்கு அரபு நாட்டு முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிப்பதாகவும் ஒருசில அரசியல்வாதிகள் கூறி முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் கிராமத்தில் முஸ்லிம் மக்களை சந்தித்த…
நீதிமன்றம் தாக்குதல்; 34 பேருக்கு இன்று பிணை
வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி பல்வேறு போராட்டங்கள் யாழ்.நகரில் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய நாள் முழு கதவடைப்புக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நீதிமன்றத்தில் 9 ஆவது சந்தேக நபரான சுவிஸ்…
