News
சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் : யாழில் பதற்றம்
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்ற தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம், மல்லாகத்தில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்லெறிந்தமையால் குறித்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் இல்லங்களில் இரவு நேரத்தை கழித்து வருவது வழமையாகும். அந்த வகையில் மல்லாகம் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிய வேளையில் நள்ளிரவு…
20 ஆம் திருத்தத்தின் புதுகணக்கை ஏற்க முடியாது : மனோ கணேசன்
பிரதமரினால் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 20ஆம் திருத்த யோசனையில் உள்ளடங்கியுள்ள தொகுதிகள் 125 + மாவட்ட விகிதாசாரம் 75+ தேசிய விகிதாசாரம் 25 என்ற புதிய கணக்கை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்காது என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, எங்கள் கூட்டணியின் கடும் எதிர்ப்பை நமது பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்து கூறியுள்ளார் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…
வயது முதிர்ந்த ஆலிம்களின் விபரம் திரட்டல்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம் அனைவரையும் கபூல் செய்து கொள்வானாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக் குழு சமய, சமூகப் பணிகளில் தங்களை அர்ப்பணித்து 63 வயதைத் தாண்டியுள்ள ஆலிம்களை கௌரவிக்கத் தீர்மானித்துள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் விபரங்களைத் திரட்டி வருகின்றது. இது தொடர்பில் ஜம்இய்யா தனது மாவட்ட, பிரதேசக் கிளைகளுக்கு அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து மேற்படி உலமாக்களின் விபரங்கள் வந்துள்ள போதிலும் இன்னும் பலருடைய விபரங்கள் வர…
1875 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட இலங்கை முத்திரைகள், புத்தகங்களாக வெளியாகிறது
1875ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை வௌியிடப்பட்ட முத்திரைகள் பெயர்பட்டியலை தொகுத்து- மூன்று பகுதிகளாக வௌியிட தபால் திணைக்களத்தின் முத்திரை வௌியீட்டு காரியாலயம் நடவடிக்ைக மேற்கொண்டுள்ளது. அதற்கமைய குறித்த காலப்பகுதியில் வௌியிடப்பட்ட அனைத்து முத்திரைகளின் புகைப்படங்களும் அவற்றுக்கான தொழில்நுட்ப தகவல்களும் இத்தொகுப்பில் வௌியிடப்படவுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச முத்திரை சேகரிப்பாளர்களுக்கு இலங்கையில் வௌியிடப்பட்ட முத்திரைகள் தொடர்பான தௌிவான தகவல்களை பெற்றுக்ெகாள்ளும் நோக்கிலும் பாடசாலை நூலகங்களுக்கு பயனளிக்கும் நோக்கிலும் இந்த முத்திரை தகவல் அடங்கிய குறித்த தொகுப்புகள் …
“மக்கள் உரிமையே எமது கட்சியின் குறிக்கோள்” அமைச்சர் றிஷாத் (வீடியோ இணைப்பு)
நேர்காணல் – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மைச்சர் றிஷாத் அவருடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், கிழக்கு மாகாணத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்வது சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்களின் காணொளி. வீடியோ :- நன்றி நவமணி
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவ சவூதி மன்னர் – மலைசிய பிரதமர் கூட்டு
சையது அலி பைஜி மலைசியா நாட்டின் பிரதமர் சவுதி மன்னர் சல்மானின் அழைப்பின் பெயரில் இரு தினங்களுக்கு முன்பு சவுதி வந்தார் சவுதியுடன் சிறந்த நட்புறவில் இருக்கும் நாடன மலைசியாவுடன் பல ஒப்பந்தங்களை சவுதி அதிகாரிகள் இறுதி செய்தனர். சவூதி மன்னர் சல்மானோடு மலைசியாவின் பிரதமர் நஜீப் நடத்திய பேச்சு வார்த்தையின்போது ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரச்சனைகளை எதிர் கொள்வதில் மலைசியாவும் சவூதி அரேபியாவும் ஒருங்கிணைந்து செயலாற்றும் என்று சவுதி மன்னர் சல்மானும்…
லண்டனில் முஸ்லிம் தாய் மீது சராமாரி தாக்கு!
லண்டனில் உள்ள பிரபல இஸ்லாமிய ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்தபோது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் இஸ்லாமிய பெண்ணை தாக்கி உள்ளது. இதனால் பள்ளி வளாகம் அருகே பரபரப்பு காணப்பட்டது. தெற்கு லண்டனில் அல்-கைர் என்ற இஸ்லாமிய ஆரம்ப பள்ளி உள்ளது.இங்கு பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இதில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்…
சூறாவளியால் இலங்கையின் வானிலையில் மாற்றம்!
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள சூறாவளியால் இலங்கையின் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.சூறாவளி நிலைகொண்டுள்ள திசையை நோக்கி காற்றலைகள் நகர்கின்றமையால் மழை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஷோபா என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி இலங்கைக்கு சுமார் 2000 கிலோமீற்றர் தொலைவில் அரபிக் கடலில் நிலைகொண்டுள்ளது. இந்த சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த சூறாவளிக்கு அஷோபா என இலங்கையினால் பெயர் சூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி கடற்கரை வீதியினால் ஆபத்தை எதிர்நோக்கும் மக்கள்!
ஜுனைட். எம். பஹ்த் முஸ்லிம்கள் அதிகம் செறிந்துவாழும் நகரங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரை ஓரத்தில் மக்களின் பிரதான பயன்பாட்டிலுள்ள வீதியின் அவல நிலையே இச்செய்தி. கடந்த அரசாங்கத்தினால் இந்நகரத்தில் பல அபிவிருத்திகள் மேற்கொண்ட போதிலும் மக்களின் பிரதான தேவையாக இருக்கும் இவ்வீதியை அரசாங்கமும் அரச அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தது காத்தான்குடி மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நகர மக்கள் மீன்பிடி தொழிலுக்கும்,பொழுதுபோக்குக்கும் மிகப்பிரதானமாக இக்கடற்கரை கானப்படுவதால் இவ் வீதி மிக முக்கியமானதாக காணப்படுகிறது. இவ் வீதியில்…
லயன் குடியிருப்பில் தீ விபத்து: உடமைகள் முற்றாக சேதம்!
க.கிஷாந்தன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கவரவில தோட்ட ஏ பிரிவு லயன் குடியிருப்பில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒரு வீட்டில் இரண்டு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. எனினும் இரண்டு அறைகளிலும் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டாவாறு வெளியே ஓடி வந்துள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில்…
மியான்மாருக்கு சவூதி அமைச்சரவை கடும் எச்சரிக்கை!
சவூதி நிருபர் நேற்று லுஹர் தொழுகைக்கு பிறகு சவூதி அரேபியாவின் அமைச்சரவை; மன்னர் சல்மானின் தலைமையில் ஜித்தாவில் அமைந்துள்ள சலாமா மாளிகையில் நடை பெற்றது. முஸ்லிம்களை படுகொலை செய்து வரும் மியன்மர் அரசுக்கு கடுமையான கண்டனங்களை இந்த அமைச்சரவை பதிவு செய்தது. முஸ்லிம் இன படுகொலையை மியான்மர் அரசு தடுத்து நிறுத்தி விட்டு பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண பணிகளில் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்த சவுதி அரேபியாவின் அமைச்சரவை; இதை மியான்மர்…
20வது தேர்தல் திருத்தம்: பிரச்சினை என்ன?
(தொகுப்பு அஸ்ரப் ஏ சமத்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் 20வது தேர்தல் திருத்தம் சம்பந்தமாக முஸ்லீம்கள் இழக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் பற்றிய அவரது கருத்துக்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் சிறுபான்மைகள் குறிப்பாக முஸ்லீம்கள் 95வீதத்திற்கு மேல் வாக்களித்து ஜனாதிபதியாகத் தெரிபு செய்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை செய்தவர்கள். என்பதற்கு நன்றிக் கடனாக அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கு மேல் குறைக்கின்ற ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்த முற்படக் கூடாது….
