News
ஓகஸ்ட் 5, 6ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு
ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்கலாம் என்று மேலதிக தேர்தகள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
சிங்களவன் அநாதையாகியுள்ளான்; கண்டுபிடித்த ஞானசாரர்
சிங்களவன் பிறந்த மண்ணில் அநாதையாகியுள்ளான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இப்போதேனும் நாம் அவர்களை எழுப்ப வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அதிகார மோகம் காரணமாக ஆட்சியாளர் அதற்கு இடமளித்துள்ளார். றிஷாத் பதியூதின் கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர் இந்த அரசாங்கத்திலும் அமைச்சர். காலத்தை விரயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மஹிந்தவின் வாக்குகளை உடைக்க நாம் வரவில்லை. நாம் யாருடைய வாக்குகளையும் சிதறடிக்க முயற்சிக்கவில்லை. அரசியல்வாதிகளினால் நாட்டுக்கு உரிய சேவை…
20 பேருக்கு போட்டியிட தடை: ஜனாதிபதி தீர்மானம்
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் 20 பேரின் வெட்புரிமையை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய் இரவு நடைபெற்ற விஷேட சந்திப்பில் இந்த முடிவுகள் எடுக்கபட்டதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக இவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி.க்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா,…
அ.இ.ம.கா.வின் இறுதித் தீர்மானம் நாளை
-எம்.எஸ்.எம். ஹனீபா எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பாக ஆராயும் அரசியல் அதியுயர் பீடம், அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நாளை வியாழக்கிழமை (09) கூடி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய…
உரிமையாளரை சுட்டுக்கொன்றுவிட்டு தங்கநகைக்கடையில் கொள்ளை
மினுவாங்கொடை – கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்டடத்தொகுதி யின் கீழ் மாடியில் அமைந்துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நகைக்கடையின் உரிமையாளரை சுட்டுக்கொன்று விட்டு பெருந்தொகையான நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் இதன் போது கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடையின் சேவையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார். கொள்ளையர்கள் நால்வர் இந்த கொள்ளைக்காக இரு…
நேற்று ஜனாதிபதி மைத்ரி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் விபரம்….!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் முகமாக இறுதி முடிவொன்றை எடுபதற்கான குகிய கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது .குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்ரியும் கலந்துகொண்டுள்ளதாக அரசியில் உயர்மட்ட செய்திகள் மடவளை நியுசுக்கு உறுதிபடுத்தின. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நியமனக் குழுவுடன் நேற்று மைத்திரிபால சிறிசேன விஜேராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார்.இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த, சிறிலங்கா சுதந்திரக்…
றிஷாத் பதியுதீனுக்கு எதிராக, சிங்கள ராவய தேர்தல்கள் ஆணையாளரிடன் முறைப்பாடு
தேர்தல் காலத்தில் புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்திற்கு சட்டவிரோதமான முறையில் நியமனங்கள் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பு தேர்தல்கள் ஆணையாளரிடன் இன்று முறைப்பாடு தெரிவித்துள்ளது. புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் சட்டவிரோதமான முறையில் 60 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார். குறித்த நியமனக் கடிதங்களில் கனியமணல் கூட்டுத்தாபனத்தின் தலைவரின் கையொப்பதற்கு பதிலாக பிறிதொருவரின் கையொப்பம் இடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது….
7 வயது வரை பன்றி தொழுவத்தில் வாழ்ந்த சீன சிறுவன் மீட்பு
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள புயாங் நகரத்தில் 7 வயது வரை பன்றி தொழுவத்தில் வாழ்ந்து வந்த சிறுவன் மீட்கப்பட்டான். அந்த சிறுவனின் பெயர் ஹோங்போ என்று தெரிய வந்துள்ளது. இந்த சிறுவனின் தந்தை பன்றி பண்ணை வைத்துள்ளார். தாய் மனநிலம் பாதித்தவர். இதனால் இந்த குடும்பம் தனித்து வாழ்ந்து வந்தது. தாய் மனநிலை பாதித்த பெண் என்பதால் பிறந்த குழந்தையை அவனது தந்தை பன்றி தொழுவத்தில் வைத்தே வளர்த்துள்ளார். இந்த செய்தி தினசரி பத்திரிகையில்…
பிறந்தநாள் கேக்கை அனுமதியின்றி சாப்பிட்ட சிறுவனை அடித்துக் கொன்ற கொடூரம்
மேரிலாந்தில் அனுமதியின்றி பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 9 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடமேற்கு வாஷிங்டனுக்கு அருகில் ஹாகர்ஸ்டவுன் என்ற பகுதியில் வசிக்கும், ஜாக் கிரேசியா என்ற சிறுவன், சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த பிறந்தநாள் கேக்கை திருட்டுத்தனமாக சாப்பிட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவனது தாயின் ஆண் நண்பர் ராபர்ட் வில்சன் (30), ஜாக்கை கைவிலங்கிட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதுபற்றி அச்சிறுவனின், தாயாரின் தம்பி கொடுத்த புகாரின் பேரில்,…
போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள்
இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார். புகைப்படங்களை போலியான முறையில் பயன்படுத்தி பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதாக அநேகமானவர்கள் முறைப்பாடு செய்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் பார்ப்பதற்கு ஏதுவாக புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றமையே இந்தப் பிரச்சினைக்கான காரணம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக…
உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைப்பு
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப் பத்திரங்கள் கிடைத்தவுடன் அவற்றை பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சார்த்திகளின் நலன் கருதி உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் புதிதாக மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடப் பிரிவு. மற்றும் பரீட்சை நிலைய…
சோபித தேரர் விரக்தி!
சமகால அரசியல் நிலவரங்களால் விரக்தியடைந்துள்ளமையால் அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விழிப்புணர்வு செய்தேன். நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பினை தொடங்கி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கு வரையில் நடத்தி வந்தேன். நான் எதிர்பார்த்த தேசிய அளவிலான முக்கிய செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமையினால் விரக்தியடைந்துள்ளேன்….
