News
இரவு வேலையில் ஈடுபடுபவர்களுக்கு புற்றுநோய்!
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று இரவு நேர வேலையில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்காக இரவு வேலை பார்க்கும் 100 பேரை தேர்ந்தெடுத்து, 24 மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சீறுநீரை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹோமோன்கள் ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயல்பு…
7000 கார்களுக்குச் சொந்தக்காரர்..!
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார். எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல்தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது. ஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய். அவரது…
அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கவில்லை: சீன நிறுவனம்
எந்தவொரு அரசியல்வாதிக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நிதியுதவி வழங்கவில்லை என்று சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த நிறுவனம், சர்வதேச மதிப்புப்பெற்ற தமது நிறுவனத்தை உள்ளுர் ஊடகம் ஒன்று பிழையாக கருதி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் எமது நிறுவனம் தொடர்பில் தவறான எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அத்துடன் முதலீட்டு நாடுகளுக்கு பிழையான சமிஞ்சையை காட்டக்கூடாது. இலங்கையின் அபிவிருத்தி…
பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்?: பகீர் தகவல்!
பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. கனடாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் இளைஞர்களிடையே ஆய்வு நடத்தியது. அப்போது 25 சதவிகித மாணவர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தியது தெரியவந்தது. தங்களின் தீராத…
நாட்டை கட்டியெழுப்ப பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் – ரணில்
ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற நல்லாட்சிக்கான புரட்சியை வெற்றி கரமாக முன்னெடுக்க ஆகஸ்ட் 17ஆம் திகதி மக்கள் எமக்கு பெரும்பான்மையை வழங்கி நாட் டில் ஐ.தே.முன்னணியின் ஸ்திரமான ஆட்சிக்கு வித்திட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விடுத் தார். அரச மாளிகை அமைப்பது எனது நோக்கமல்ல. உங்கள் வீடுகளை அரசமாளிகை யாக மாற்றுவதே எனது நோக்கமாகும் என் றும் பிரதமர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஐ.தே.மு.வின் கொள்கை பிரகடனத்தை வெளியிட்டு வைத்து…
அரசு எமக்கு கிடைத்ததே தவிர அரசாங்கம் கிடைக்கவில்லை : ராஜித
ஜனவரி 8ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த சந்தர்ப்பத்தில் எமக்கு அரசு கிடைத்தபோதும், அதனை இராச்சியம் செய்யும் அரசாங்கம் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ‘பசில் ராஜபக்ச கைது…
“நாட்டின் தேசிய பாதுகாப்பில், விழிப்புடன் செயற்படும் இராணுவம்”
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விழிப்புடன் செயற்பட்டுவருவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலோரப் பகுதிக்கு அருகாமையில் உச்சிப்புளி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் 75 சயனைட் குப்பிகள், 7 கைத்தொலைபேசிகள், 300 கிராம் சயனைட் பவுடர் உட்பட மேலும் பல பொருட்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேரை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்தனர். இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராணுவ ஊடகப்பேச்சாளர்…
பஞ்சமா பாவங்களை செய்துள்ளார் மஹிந்த : அசாத் சாலி
பௌத்த மதத்தில் செய்யக்கூடாதென கூறப்பட்டுள்ள ஐந்து மகா பாவங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ளதாக மத்திய மகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொலை, கொள்ளை, களவு, காமம், தெய்வ நிந்தனை என அனைத்து பாவங்களையும் இவர் செய்துள்ளதாக குறிப்பிட்ட அசாத் சாலி, மக்கள் இதனை நன்கு அறிவர் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், ஒரு ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த தற்போது நாடாளுமன்ற தேர்தலில்…
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாத்தை விமர்சிப்போருக்கும்,தவறான புரிதல்கள் கொண்டோருக்குமான பதிவு இது! [ ஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமையும் நமக்கு இருக்கிறது. வேதவரிகளும் தூதர் மொழிகளும் மட்டுமே நமது வாழ்க்கைகான அளவுகோல். என்பதை (எடுத்து சொல்ல) என்றும் மறவாதீர்கள்.] இஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான்….
லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மிக முக்கிய தகவல்கள் பல இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. லசந்த படுகொலை செய்யப்படும்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரிடமிருந்தே இந்தத் தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இந்த நபரிடமிருந்து பெறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் அடிப்படையில் இரகசியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள இந்த நபர்…
றிஷாத் நாளை அம்பாறை விஜயம் அ.இ.ம.கா வில் இணைய பலர் முஸ்தீபு
– ஏ.எச்.எம் பூமுதீன் – பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார். நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில்…
ஆசியாவின் ஆச்சரியத்திற்கான பயணம் ஆகஸ்ட் 18 இல் உதயமாகும் : மனோ கணேசன்
பிரிவினைவாதம், இனவாதம், மதவாதம் என்பவற்றை வீழ்த்தி உண்மையான ஆசியாவின் ஆச்சரியத்திற்கான பயணம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், ஆச்சரியத்தை நோக்கிய அந்த பயணத்தில் தாமும் இணைந்து கொண்டமை பெருமைக்குரிய விடயம் என்றும்…
