News
நாட்டை மீளவும் கட்டியெழுப்ப போரிட தயாராம் : மஹிந்த ஆவேசம்
குறுகியகால புதிய ஆட்சியால் நாடு 25 வருடங்கள் பின்நோக்கிச் சென்றுள்ளது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதற்காக அரசியல் ரீதியாக போராடவும் போரிடவும் தயாராகவே இருக்கிறார் எனவும் சூளுரைத்துள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு எதுவும் இல்லை என்றும், ஒரே நாடு, ஒரே அணி என்பதுதான் தனது கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டார். ‘எதிர்காலத்துக்கு உத்தரவாதம்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞபானம் நேற்றுக்…
இலங்கை முழுவதும் இலவச இண்டர்நெட் ..!
நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது
எட்வர்ட் ஸ்னோடெனை மன்னிக்க முடியாது: வெள்ளை மாளிகை
அமெரிக்க புலனாய்வு அமைப்பு, பொது மக்கள் மற்றும் நட்பு நாடுகளின் போன்கள், இணைய தளங்களை உளவு பார்த்ததை உலகுக்கு அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனை மன்னிக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டார். இதனால் அந்நாட்டிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. உளவு குற்றச்சாட்டுக்கு ஆளாகி தேடப்படும் குற்றவாளியானார். அமெரிக்காவிடமிருந்து தப்பிக்க வேண்டி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். கடந்த 2013…
உலகின் சிறந்த பொலிஸ் அதிகாரியாக, இலங்கை பெண் தெரிவு
சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and Scholarship விருது இம்முறை கிடைத்திருப்பது இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி விமதி பெரியப்பெரு என்பவருக்காகும். இவ்விருதினை இதுவரையில் இலங்கை பெண் பொலிஸாரினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை, இதுவே முதல் தடவையாகும். குறித்த விருது ஒகஸ்ட் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. உலகின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பெண் அதகாரிகளின் செயற்திறன், செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.கவை ஆதரிக்க விரும்பும் முஸ்லிம்கள் முதலில் அ.இ.ம.கா.வை ஆதரிக்கட்டும்
– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் – மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் மாவட்டங்களிலும் ஐ.தே.கவோடு இணைந்து போட்டியிடும் மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் முதலில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து தமது நன்றிக் கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும்’ என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸதீன் கூறியுள்ளார். மதினாபுரம், சேகுமலைச் சோலையில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பில் சேகு இஸத்தீன் மேலும் கூறியதாவது: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் முஸ்லிம்…
தேர்தல்கள் சட்ட மீறல்கள் தொடர்பில் 197 பேர் கைது
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் மற்றும் சுற்றிவளைப்புக்களில் 197 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 57 வாகனங் களும் கைப்பற்றப்பட்டு வழக்குப் பொருட்களாக பதியப்பட்டுள்ளன. பொலிஸார் மேற்கொண்ட 89 சுற்றிவளைப்புக்கள் ஊடாக நாடளாவிய ரீதியில் 170 பேரும் கிடைக்கப் பெற்ற 64 முறைப்பாடுகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர்…
ஜனாதிபதி பங்கேற்கவில்லை
‘எதிர்காலத்துக்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று வெளியிடப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையிலான குழுவினரே இதனை கையளித்துள்ளனர். இந்த வெளியீட்டு வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள்!
தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள், எதிர்வரும் புதிய நாடாளுமன்றின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள் என திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களுக்கு அமைய இம்முறை தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த காலங்களில் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாத மற்றும் நாடாளுமன்றத் தேர்தலி;ல் போட்டியிடாதவர்கள் தேசியப்…
வீதி விபத்தில் வயோதிபப் பெண் பலி
– அப்துல்லாஹ் – புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா வீதியில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளருமான அப்துல் நாஸர் ஆசிரியரின் தாயான சின்னத்தம்பி மரியங்கண்டு (வயது 70) என்பவரே விபத்தில் சிக்கி மரணித்தவராகும். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த…
வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று புதன்கிழமை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இம்முறை தேர்தலுக்காக, ஒருகோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 491 வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார். தபால் ஊழியர்கள், ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை வீடுகள் தோறும் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார். வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட தினங்களாக…
மன்னார் கல்லாறு, ஏ.ஆர். ஜனூசியா இன்று வபாத்தானார்
– கரீம் ஏ. மிஸ்காத் – சென்றவாரம் மன்னார் கல்லாறு விபத்தில் காயமடைந்த ஏ.ஆர். ஜனூசியா.(27) இன்று காலமானார். இவர் பாயிஸ் ஆசிரியரின் மனைவியும், அப்னான் (வயது- 2 1/2), இன்பாஸ் (9- மாதம்) ஆகியோரின் தாயுமாவார். ஜனாஸா , இன்று மன்னார் வைத்தியசாலையில் இருந்து கொண்டு வரப்பட்டு, இன்று உளுக்காப்பள்ளம், கரம்பை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இதேவேளை, மர்ஹும் ஜனூசியாவின் தாயும், பாயிஸ் ஆசிரியரும் யாழ்ப்பாணம் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாயிஸ் ஆசிரியரின் சம்ளப்பணத்தின்…
இலங்கையில் வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை
லண்டனை மையமாகக்கொண்ட வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை தமது அவசர கையடக்க தொலைபேசி பணபரிமாற்றல் சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இஇசெட் காஷ் என்ற இந்தசேவை தற்போது டயலொக், எடிசலாட் மற்றும் ஹட்ச் பாவனையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சேவையின் ஊடாக 14 மில்லியன் மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்று நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் குறைந்த கட்டணங்களில் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நேரடியாக பணத்தை அனுப்பமுடியும் என்று வேல்ட்ரெமிட் தெரிவித்துள்ளது.
