News
புதிய அரசாங்கத்தை, வாழ்த்தும் கோத்தபாய
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துகொள்வதாகவும், புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோத்தபாய தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை போன்றே தோல்வியையும் ஏற்று கொள்ளும் அவர், நாட்டை நேசிக்கின்ற தலைவராக பலர் மனங்களில் இருக்கின்றார். அத்துடன் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, நாட்டினுள்…
செப்டெம்பர் முதலாம் திகதி, கன்னி அமர்வு
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கஇன்று அல்லது நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக உதவிக் கரும பீடமொன்று எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் திறக்கப்படும் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டு
இலங்கைத் தேர்தல் தொடர்பில் அமெரிக்கா வரவேற்பை வெளியிட்டுள்ளது.ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கமும் பொதுமக்களும் காட்டிய சிரத்தை வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர், வேட்பாளர்கள், சிவில் சமூகத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். 2 இலங்கையில் இடம்பெற்ற மிகவும் அமைதியான அனைவரும் பங்களிப்பு செய்த தேர்தலிற்காக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள ஐக்கிய…
தேர்தலில் தோற்றாலும் புதிய பதவி கிடைத்து விட்டது
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சு.க.வின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க இந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
கண்டி தேர்தல் வரலாற்றில் லக்ஸ்மன் கிரியல்ல புதிய சாதனை….!
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி குழுத்தலைவர் லக்ஸ்மன் கிரயல்ல பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் கண்டி தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் தனியொருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகளாக முன்னாள் சிரேஷ்ட அரசியல் தலைவர் காமினி திசாநாயக்க அதிகப்படியாக ஒருலட்சத்து தொண்ணுற்று எட்டாயிரம் வாக்குகளை பெற்றிருந்தார் . அதற்கு அடுத்தபடியாக மாகாண சபையில் எஸ் பி திசாநாயக்க ஒரு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். இந்த விருப்பு வாக்கு சாதனைகளை முறியடித்து…
இலங்கையில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்ற பிரதமா் ரணில் விக்கிரமசிங்க
அஸ்ரப் ஏ சமத் கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி தெரிவான 11 பேரில் 9 பேரின் விருப்பு வாக்கு தற்பொழுது வெளியானது. கொழும்பு ரோயல் கல்லுாாியில் தற்பொழுதும் விருப்பு வாக்கு என்னப்பட்டு வரும் நிலையில்…. (1) ரணில் விக்கிரமசிங்க 499,866 (2) சுஜிவ சேரசிங்க – 114,849 (3) ஹா்சா டி சில்வா – 114,147 (4) ரவி கருநாயாக்க – 111,398 (5)சம்பிக்க ரணவக்க 100,444 (6) எஸ். மரிக்காா் 95,526 (7) முஜிபு ரஹ்மான்…
இம்முறை தோல்வியை தழுவிய முன்னாள் பிரபலங்கள் மற்றும் எம்.பிக்கள்
– றிஸ்வான் சேகு முகைதீன் – (கொழும்பு, கம்பஹா விருப்பு வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்) யாழ் மாவட்டத்தின் சுரேஷ் பிரேமசந்திரன் முருகேசு சந்திரகுமார் சில்வெஸ்டர் அலன்ரின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பீ. அரியநேந்திரன் பொன். செல்வராசா மட்டக்களப்பு மாவட்டத்தின் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அம்பாறை, திகாமடுல்ல மாவட்டத்தின் ஏ.எல்.எம். அதாவுல்லா களுத்துறை மாவட்டத்தின் மஹிந்த சமரசிங்க மாத்தறை மாவட்டத்தின் லக்ஷ்மன் யாபா அபேவர்தன திருகோணமலை மாவட்டத்தின் எம்.எஸ். தௌபீக் மன்னார் மாவட்டத்தின் ஹுனைஸ் பாறுக் புத்தளம் மாவட்டத்தின்…
கொழும்பு விருப்பு வாக்கு முழு விபரம்..
– அஸ்ரப் ஏ சமத் – கொழும்பு ஜ.தே.கட்சி மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிபு செய்யப்பட்டோா் விபரங்கள் வரலாறு காணாத விருப்பு வாக்கு ரணிலுக்கு மஹிந்தவை விட முன்ணிலையில். இம்முறை முதன் முதலாக 2 முஸ்லீம்களும் தெரிவு. கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி தெரிவான 11 இலங்கையில் ஆகக் கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்ற பிரதமர். (1) ரணில் விக்கிரமசிங்க 500.566 (2) சுஜிவ சேரசிங்க – 114,849 (3) ஹா்சா டி சில்வா –…
தேர்தல் முடிவு தொடர்பில் நீதிமன்றம் செல்ல ஆலோசனை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக நீதிமன்றம் செல்ல ஆலோசித்து வருவதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடும்போது, அம்பாரை மாவட்டத்தில் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 மொத்த வாக்குகள் இருக்கின்றன. அதேநேரம் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து மாவட்ட வாக்களிப்பு வீதங்கள் அறிவிக்கப்பட்டபொழுது அம்பாரை மாவட்டத்தில் சுமார் 65 வீதம் வாக்களிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது வெளிவந்திருக்கின்ற தேர்தல் முடிவுகளின்படி…
மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் விடுத்துள்ள ஊடக அறிக்கை
முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான மாற்றுத் தலைமைத்துவத்தை பலப்படுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசை அமோகமாக ஆதரித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐ.தே.க.தேசியப் பட்டியல் வேட்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காக ஸ்தாபிக்கப்பட்டு- பெரும் தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
UPFA கலைப்பு? ; சு.கட்சிக்கு பிரதிப் பிரதமர் பதவி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கலைக்கப்படவுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கிடையில் கைச்சாத்தான ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவானது. சுமார் 11 ஆண்டுகளாக இக்கூட்டணி அதிகாரத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் அநீதியான தலையீடுகளைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டணியை கலைத்துவிட அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் எதிர்வரும் 24ம் திகதி…
உளறித் திரியும் ஞானசார!
சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய தரப்பினர் தங்களது நலனை உறுதி செய்து கொண்டுள்ளனர். சிங்களவர்களின் அதிகார மோகத்தினால் எமது இளைய தலைமுறையின் எதிர்காலம் பாரிய கேள்விக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை அடைந்துள்ளது. நாட்டை நேசிக்கும் நாட்டை பாதுகாக்க விரும்பும் தரப்பினரை ஒன்றிணைத்துக்கொள்ள முடிந்துள்ளது….
