News
புதிய பிரதமர் பதவியேற்பு ;சுவாரஷ்யமான சந்திப்புக்கள்
– ஜனாதிபதி ஊடகப்பிரிவு – இலங்கை சனநாயகக் குடியரசின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) காலை பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ஜனதிபதியின் செயலாளர் பி.பீ.அபேக்கோன் அவர்கள் அவர்கள் உட்பட பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
தலைவர் முடிவு நியாயமானது! அ.இ.ம.கா வேட்பாளர்கள் கூட்டறிக்கை
– ஏ.எச்.எம்.பூமுதீன் – .இ.ம.கா வுக்கு கஷ்டப்பட்டு வாக்கு திரட்டிய நாங்கள் இருக்கும் போது வீட்டிற்குள் சொகுசாக இருந்த கட்சியின் செயலாளர் நாயகத்தை எம்பியாக்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறு நடந்த முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அ.இ.ம.கா சார்பில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் ஒருமித்;த நிலையில் கருத்து வெளியிட்டுள்ளனர். 10 வேட்பாளர்களும் ஒருமித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அ.இ.ம.கா வுக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் நியமனத்தை கட்சியின்…
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக சத்தியப் பிரமாணம்
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெறும் விசேட நிகழ்வில் சுபவேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். உலக அரசியல் வரலாற்றில் நான்காவது முறை…
அ.இ.ம.கா வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி பாராட்டுகின்றார் றிஷாத் பதியுதீன்
நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஆறு மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் எமது கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்;ட வேட்பாளர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் எமக்கு ஆதரவளித்து வாக்களித்த அத்தனை வாக்காளப் பெருமக்களுக்கும் எனது சார்பிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தேர்தலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் எதுவித இன,மத,மொழி,பிரதேச…
மஹிந்த சிறைக்கு செல்ல நேரிடும் -அசாத் சாலி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு மூன்று நாடாளுமன்ற அமர்வுகளின் பின்னர் சிறைக்கு செல்ல நேரிடும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அத்துடன் தான் எதிர்க்கட்சிப் பதவியை ஏற்கப்போவதில்லை’ என அவர் கூறமுடியாது என்றும், ஏனென்றால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாது என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் வரையில் அவருக்கு எதுவித பதவிகளும்…
சந்திரிக்கா அதிரடி
தேசிய அரசாங்க கொள்கைகளுக்கு இணங்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். தேசிய அரசாஙகம்…
அ.இ.ம.கா வின் எழுச்சியும் தேசிய தலைவர் மீள் பிரகடனமும்
– ஏ.எச்.எம்.பூமுதீன் – பொதுத் தேர்தல் முடிவு ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு எழுச்சியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன் ரிசாத் பதியுதீனை நாட்டின் தேசியத் தலைவராகவும் இந்த முடிவு மீளவும் பிரகடனப் படுத்தியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 07 மாவட்டங்களில் களமிறங்கியிருந்தது. வன்னி, புத்தளம் ,அநுராதபுரம், குருநாகல் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஐதேகவின் யானைச் சின்னத்திலும் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் சொந்தச் சின்னமான மயிலிலும்…
வெற்றிக்கு பிற்பாடு எனது ஆதரவாளர்கள் அமைதிகாக்க வேண்டும் – அமீர் அலி
நாம் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையானது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயமக இருக்கின்ற அதே நேரத்தில் தேர்தல் காலங்களில் இடம்பெற்ற வாய்த்தை பிரயோகங்கள், விடயங்கள், தனிபட்ட விடயங்களை மனதில் வைத்துக்கொண்டு எதிரணி ஆதரவாளர்களின் மனங்கள் புன்படும் வகையில் நடந்து கொள்ளவோ அல்லது அவர்களுக்கு எதிரான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவதனையோ முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும், அவ்வாறு எவராவது செயற்படும் பட்சத்தில் அதற்கு தான் பொறுப்பில்லை என்பதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தற்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு…
எனக்கு ஆதரவு வழங்கிய மக்களை ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் -இஸ்மாயில்
திகாமடுல்ல மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட தனக்கும், தனது கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நேற்றுமுன்தினம்(19) தனது அலுவலகத்தில ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தின் சம்மாந்துறைத் தொகுதியின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளராக களமிறங்கிய…
றிஷாத் பதியுதீனை தேசியத் தலைவராக முஸ்லிம் சமூகம் அங்கீகரித்தது
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பயங்கரவாத புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட ஒருவர், இன்று இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவை பெற்றத் தேசியத் தலைவராக பரிணமித்துள்ளார். ஆம், இலங்கை சமூகம் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் றிசாத் பதியுதீனை தனது தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது. றிசாத் பதியுதீன் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என்பதற்கு அக்கட்சிக்கு நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் அக்கட்சிக்கு கிடைத்துள்ள பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பவற்றைக் கொண்டு இது தெட்டத்தெளிவாகியுள்ளது. நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தனியாகவும்…
இனவாதம் சொல்லி அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் : அமீர் அலி
இனவாதம் சொல்லி அரசியல் செய்பவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தழிழ், முஸ்லீம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தேர்தல் முடிவின் பின்னர் செவ்வாய்க்கிழமை…
ரணிலை வாழ்த்தினார் நரேந்திர மோடி
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வெற்றி இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதையிட்டு இலங்கை மக்களுக்கும் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
