News
தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனு – சுசில்
தேசியப் பட்டியல் குறித்து நீதிமன்றில் மனுத் தொடரப்பட உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இவ்வாறு மனுத் தாக்கல் செய்ய உள்ளன. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலுக்குஇ பங்கு கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தனது வருத்தத்தை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை ஒன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு…
ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன -ராஜித
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளும் புதிய அரசாங்கத்தின் கீழ் துரிதமாக விசாரணை செய்யப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதால், பலர் எண்ணியுள்ள போதிலும் எந்த காரணம் கொண்டும் விசாரணைகளை இடையில் நிறுத்த போவதில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. விசாரணைகளை நடத்த போதுமான காலம் இருக்கிறது. குற்றச்சாட்டு…
மைத்திரி – மஹிந்த – சந்திரிக்கா ஒரே மேடையில்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டுவிழா வரலாற்றில் முதல் தடவை பொலன்றுவையில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ளதாக வட மத்திய முதலமைச்சர் பெஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் ஆண்டு விழா கொண்டாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி…
UPFA இன்னும் சில நாட்களுக்குள் கலைக்கப்படலாம்?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்னும் சில நாட்களுக்குள் கலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று மாலை முக்கிய கூட்டமொன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் அல்லது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இச்செய்தி அச்சிக்கு போகும் வரையிலும் வெளியாகவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாகவோ அல்லது வேறு வகையிலையோ…
ஜனாதிபதியால் மூன்று பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கபட்டது
சற்றுமுன் ஜனாதிபதியால் மூன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சு பதவிகள் வழங்கபட்டு ஜனாதிபதி முன் நியமனங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்தது. அதன்படி, மங்கள சமரவீர அவர்களுக்கு வெளி விவகார அமைச்சும், விஜேதாச ராஜபக்ச அவர்களுக்கு நிதி அமைச்சும், DM சுவாமிநாதன் அவர்களுக்கு மீள்குடியேற்ற மற்றும் புனருத்தாரண அமைச்சும் வழங்கபட்டுள்ளது.
தோல்விக்கு மஹிந்தவே பொறுப்பு – டிலான்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்விக்கு மஹிந்த ராஜபக் ஷவும், முன்னணியின் கட்சித் தலைவர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுமே பொறுப்பேற்க வேண்டுமென குற்றம் சாட்டியுள்ள சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா, “பட்டர்” கேக்கைத் தயாரித்த ஐ.ம.சு.மு. ஜனாதிபதியிடமிருந்து “ஐசிங்”கை பெற்றுக் கொள்ளவில்லை. எனவே தோல்விக்கு ஜனாதிபதி பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா மேலும் தெரிவித் திருப்பதாவது. மஹிந்த…
இச்சிறுமியின் சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பரீட் நகர் மஸ்ஜிதுல் மனாருல் ஹ{தா பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த என்.எம்.மர்சூக் என்பவருடைய மகள் பாத்திமா இல்மா (வயது 10) என்ற சிறுமிக்கு மூலையில் கட்டி ஒன்று ஏற்பட்டுள்ளதால் (Brain Lesion of Uncercain Patholog) என்ற ஆபத்தான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமிக்கு வைத்திய சத்திரசிகிட்சை செய்வதற்கு ரூபா.600,000 தேவை என இச்சிறுமியினை பரிசோதனை செய்த சத்திர சிகிச்சை நிபுனர் டாக்டர். சமன் புஸ்பகுமார (MBBS)COL.MRCS.(ENG)என்பவர் தெரிவித்துள்ளதால்…
புதிய சூழ்ச்சியில் மஹிந்த: எச்சரிக்கும் புலனாய்வுப் பிரிவு
பௌத்த விகாரைகளை மையமாகக் கொண்ட நவபாசிச அமைப்பொன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவான எஸ்ஐஎஸ் பிரிவினர் இது தொடர்பான புலனாய்வு அறிக்கையொன்றையும் தயாரித்துள்ளனர். அதன் ஒரு பிரதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்கில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நவபாசிச அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது….
YLS ஹமீட் நீக்கம்; றிஷாத் பதியுதீன் அதிரடி
– ஏ.எச்.எம்.பூமுதீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சியின் உயர்பீடம் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று காலை கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேற்படி அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்தார். அதே நேரம் அ.இ.ம.காவுக்கு கிடக்கப்பெற்ற தேசியப்பட்டியலுக்கு புத்தளத்தைச்…
புதிய அரசாங்கத்தில் மொத்தம் 30 அமைச்சர்கள் மட்டுமே
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை விட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதாயின் அதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். D c
UPFA யின் தேசியப்பட்டியலில் இருந்து நிராகரிக்கபட்டவர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த ஜே.ஸ்ரீரங்கா, பிரபாகணேசன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டியு. குணசேகர, திஸ்ஸவிதாரன மற்றும் திஸ்ஸ அத்தநாயக உள்ளிட்ட 11 பேர் முன்னணியின் தேசியப் பட்டியலிருந்து நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேசியப் பட்டியல் ஊடாக 12 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னணி அதற்கான உறுப்பினர்களை நியமித்து உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. தேர்தல்களுக்கு முன்பதாக முன்னணியினால் பெயரிடப்பட்டிருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸ விதாரண, டியு.குணசேகர, திஸ்ஸ அத்தநாயக்க,…
சம்மந்தன் அதிரடி!
நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எம்.சரவனபவன், மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை…
