Headlines

நாடு திரும்பும் மைத்திரியை வரவேற்க, விமான நிலையத்தில் ஏற்பாடு..!




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளார். நாடு திரும்பும் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகளை விமான நிலையத்தில் வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, இன்று நாடு திரும்புகிறார்.
ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று மாலை 4.00 மணிக்கு நாடு திரும்பவுள்ளனர்.
அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் கடந்த 23ம் திகதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
29ம் திகதி அமர்வுகள் ஆரம்பமாகியதுடன் 30ம் திகதி ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.
அமர்வுகளில் பங்கேற்று நாடு திரும்பும் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *