News
மது வைத்திருந்த பிரித்தானியருக்கு, சவூதி அரேபியாவில் 350 கசையடி தண்டனை
சவூதி அரேபியாவில் வசிக்கும் பிரித்தானியர் ஒருவர் வீட்டில் தயாரித்த மதுவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 360க்கும் அதிகமான சவுக்கடிகளை எதிர்கொள்கிறார். கார்ல் அண்ட்ரே என்ற இந்த 74 வயதான பிரிட்டிஷ்காரரின் காரில் ஆறு ஒயின் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலான காலமாக சிறையில் இருந்து வருகிறார். சவூதி அரேபியாவில் மது பாவனைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆண்ட்ரேயின் வயது மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக அவருக்கு இந்த கசையடி தண்டனை நிறைவேற்றப்படாது…
நான் ஏன் இஸ்லாத்தில் இணைந்தேன்…? ஆஸ்திரேலிய சகோதரியின் விளக்கம்…!!
நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரியின் பெயர் சாறா ஆஸ்ரேவியாவை சார்ந்தவர். தீவிர கிருத்துவ குடும்பத்தில பிறந்து அண்மையில் இஸ்லாத்தில் இணைந்தவர். இஸ்லாத்தில் இணைந்தது பற்றி அவரே கூறுவதை கேளுங்கள்… Australian journalist Sarah Price explains why she made the life-changing decision to embrace Islam. Yahoo Newsroom – Australian journalist Sarah Price explains why she made the life-changing decision to embrace Islam. BY SARAH PRICE…
வடமாகாண சபையில், முஸ்லிம்கள் குறித்து பிரேணை – றிப்கான் பதியுதீன்
வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகும் நிலையில், அதுகுறித்து வடமாகாண சபையில் கவனயீர்ப்பு பிரேணையை கொண்டுவர இருப்பதாக வடமாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கூறினார், இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வடமாகாண முஸ்லிம்கள் பலவழிகளிலும் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள். வடமாகாண முஸ்லிம்களுக்கு பின்னர் இடம்பெயர்ந்த பல தொகுதியினர் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் வாழத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கபட்டவில்லை. மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு தமிழ் கூட்டமைப்பைச் சேந்த சிலர் தொடர்ந்தும் தடையேற்படுத்துகின்றனர். அரச அதிகாரிகள் முஸ்லிம்கள்…
அந்தரத்தில் பிறந்த ஆயிஷா… – மனதை உருக்கும் உண்மைக் கதை!
அந்த விமானம் உயரே, இன்னும் உயரே சென்றது. இருபக்கமும் சாய்ந்து, நேராகி சமநிலையில் பறந்தது. திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். அனைவரும் திரும்பிப் பார்க்க, மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண் விமானத்தில் உருண்டு, புரண்டு அழுதார். அனைவரும் பதற, அடுத்து உள்ள விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கதைபோல இருந்தாலும், இது 18 வருடத்துக்கு முன்பு குவைத்தில்…
சச்சின் தெண்டுல்கர் இலங்கை வருகை
உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வைபவம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய அனுசரணையில் நேற்று ஆரம்பமானது. இந்த வைபவத்தில் சச்சின் தெண்டுல்கருடன், இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார். யுனிசெப் அமைப்பின் சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவராக சச்சின்…
இந்த ஆண்டின் இறுதிக்குள் மருந்துகள் விலை குறையும்
இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்து வகைகளின் விலைகள் 50 சதவீதத்தால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய மருத்து வகைகள் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் அதிகளவிலான மருந்துகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய சட்டத்துக்கு அமைய மருந்துகளை விலை கொடுத்து வாங்குவோரைப் பாதுகாப்பது தொடர்பாக அதிகாரசபை ஒன்று நிறுவப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சில மருந்துவகைகளில் 200 தொடக்கம் 300…
தென்னாபிரிக்கா பயணமாகிறது அரச உயர் குழு
இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், அமைக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவே அரசின் உயர் மட்டக்குழு அங்கு செல்லவுள்ளது. இலங்கையில் உருவாக்கப்படவுள்ள இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில், மதத் தலைவர் களைக் கொண்ட ஒரு…
சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக, யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு
நாட்டில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண முஸ்லிம்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தடுக்கபட்ட வேண்டும், துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராககூடாது போன்ற கோரிக்கைகளை முனவைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே இதற்கான திர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டெடுப்பது குறித்து, அஸ்வர் விடுத்துள்ள அறிக்கை
பலஸ்தீன மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்பதற்கு எமது பாராளுமன்றத்தில் அவசர கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்று கொண்டுவர வேண்டும். அத்துடன் அனைத்து பள்ளிவாசல்களிலும் துஆப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள உலமா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கு எதிராக அஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 60 வருடங்களுக்கும் மேலாக மேற்குலக வல்லரசுகளின் ஆதரவுடன் பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொள்ளும் காட்டு தர்பார் தற்போது…
கடிதங்களை விநியோகிக்காத மதுரங்குளி தபால்காரர் கைது
மக்களுக்கு விநியோகிப்பதற்குரிய ஒரு தொகை கடிதங்களை உரியவர்களுக்கு விநியோகிக்காது பௌத்த விகாரை ஒன்றின் அலுமாரியில் மறைத்திருந்த தபால்காரர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளி தபால் நிலையத்தில் பணியாற்றும் மதுரங்குளி மஹகும்புக்கடவல பிரதேசத்சைத் சேர்ந்த தபால்காரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். நேற்று திங்கட்கிழமை குறித்த சந்தேக நபராக தபால்காரர் மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஒரு தொகை கடிதங்களை எடுத்துக் கொண்டு வெளியேறிய பின்னர் அவற்றை பௌத்த விகாரை ஒன்றின் புத்தக அலுமாரியில் மறைத்து…
பெண் ஒருவரை தாக்கி கட்டிவைத்து விட்டு நகைகள் கொள்ளை
ஏறாவூரில் இளம் குடும்பப் பெண் ஒருவரை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் சேர்ந்த இப் பெண்ணின் கணவனான கே.எம்.எம்.லாபிர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார். இவரின் மனைவியான முகம்மது இஸ்மாயில் சித்தி பரினா (38 வயது) என்பவரே தாக்குதலுக்கு இலக்கானவராவர். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் வீட்டில் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஒன்றில்…
ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் இவர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
