News
மஹிந்தவிற்கு வழங்கபட்ட பட்டங்கள் பறிக்கப்படுமா..?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள டாக்டர் பட்டங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதக் கொள்கை பீடத்தின் முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டங்களை வழங்கியிருந்தது. 2009ம் ஆண்டு மே…
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பாம்பு
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இருந்து விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நூலகத்துக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் பொது மின்தூக்கிக்கும் இடையிலுள்ள பூஞ்சாடி ஒன்றுக்குள் இருந்து இது கண்டுபிடிக்கப்பட்டது. அதிரடிப்படையினர் வழமையாக மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கையின் போது இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்துக்குள் பாம்புகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு தடவையில் மூன்றாம் மாடியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்து பாம்பு ஒன்று மீட்கப்பட்டது.
வர்த்தகர் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27ம் திகதி
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி அறிவிக்கப்படும் என இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முஹமட் சியாமை படுகொலை செய்தல், கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது…
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தீவிரம்
இந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனை ஆதரவாளர்கள், அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்வலரின் முகத்தில் கறுப்பு மையைப் பூசியுள்ளனர். வலது சாரி ஹிந்து ஆதரவு கட்சியான சிவசேனைக் கட்சியினர் இந்த புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்யுமாறு,ஏற்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னியைக் கோரி இந்த செயலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து , சிவசேனைக்…
புதிய ஆய்வில் இறங்கியுள்ள இளம் விஞ்ஞானி அஹ்மத்
கடிகாரத்தை சுயமாக தயாரித்து பள்ளிக்கு எடுத்து வந்த முஸ்லிம் சிறுவனை, வெடி குண்டை கொண்டு வந்திருப்பதாக கருதி அந்த சிறுவனின் கையில் விலங்கு மாட்டியது ஒரு அமெரிக்க கல்விகூடம். பிறகு அந்த தவறு சரி செய்ய பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே அந்த சிறுவனை அழைத்து உபசரித்து உற்சாகபடுத்தினார். அந்த சிறுவன் அஹ்மது, தற்போது அவனது குடும்பத்தோடு சவூதி மன்னர் சல்மானின் விருந்தாளியாக மக்காவிற்கு உம்ரா செய்ய வந்துள்ளான். சிறுவன் அஹ்மது சவூதி அரேபியாவில் ரியாத் நாளேடுக்கு…
முஸ்லிம் என்றால்..!
முஸ்லிம் நாணயமானவனாக இருப்பான், நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான், அவனுக்கு இறைவன் தடுத்தவற்றை ஒருபோதும் எடுக்க மாட்டான், அவன் கஷ்டத்தில் இருந்தாலும் நஷ்டத்தில் இருந்தாலும் அமானிதங்களை பேணகுடியவனாக இருப்பான், அடுத்தவன் பொருளுக்கு ஆசை படாதவனாக இருப்பான். சிரிய முஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்று குடியேறி வருகின்றனர், அகதிகளாக செல்பவன் குபேரனாக இருக்க வாய்பில்லை, சிரிய அகதிகளில் பலர் அன்றாட உணவு தேவைகளுக்கே சிறமபடுகின்றனர். இந்த சிறமம் நிறைந்த சூழலிலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாத, தனக்கு தேவைகள் இருந்தாலும்…
அலுக்கோசு பதவிக்கான நேர்முகத்தேர்வு நாளை
வெற்றிடமாக காணப்பட்ட சிறைச்சாலை அலுகோசு பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை, நாளை செவ்வாய்க்கிழமை(13) நடைபெறும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக பிள்ளையான குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டார். அதற்கமைய நேற்று மாலை 05 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகிய நிலையில் முதற்கட்ட வாக்குமூலம் பெற்றுகொண்டதன் பின்னர் அவர்…
சேயா செதெவ்மி கொலை – 10 பேரிடம் வாக்குமூலம்
சேயா சதெவ்மி என்ற சிறுமியின் கொலை தொடர்பில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்ட கொட்டதெனியாவை பகுதியைச் சேர்ந்த சிலர் இன்று திவுலுபிட்டிய காவற்துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதாகி விடுவிக்கப்பட்ட 17 வயதான மாணவர் மற்றும் குடும்பஸ்த்தர் ஆகிய இரண்டு பேரும், காவற்துறையினருக்கு எதிராக முறைபாட்டை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 10 பேர் வரையில் வாக்குமூலம் வழங்கியதாக காவற்துறை…
கொரியாவில் மீன்பிடித் தொழில் புரிய விருப்பமா?
15வது கொரிய மொழி பரீட்சையின் மீன்பிடி பிரிவில் வேலை வாய்ப்பு தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 21ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்காலை, காலி, மாத்தறை, சீதுவ மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள பயிற்சி மத்திய நிலையங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இதேவேளை 18 வயது முதல் 39 வயது வரையானவர்கள் மற்றும் மீன்பிடித்துறையில்…
கடந்த காலத்தில் உலகின் புற்றுநோயாளி என சர்வதேசம் இலங்கையை அடையாளப்படுத்தியது – சஜித்
அரசாங்கம் எந்த காரணத்தை அடிப்படையாக கொண்டும் நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பை காட்டிக்கொடுக்காது என்பதுடன் கலப்பு நீதிமன்றம் ஒன்று நாட்டிற்குள் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம உடுவில பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மக்கள் ஆணை வழங்கினர். அந்த மக்கள் ஆணையின் மூலம் நாங்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளோம். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு எதிராக செயற்பட்ட…
சுத்தமான குடிநீரை கோரி ஆர்ப்பாட்டம், பொலிஸார் தடியடி பிரயோகம்
திஸ்ஸ – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் பல்லேமல சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். பந்தகிரிய பிரதேசவாசிகளே ஆர்ப்பாட்ட த்தை மேற்கொண்டுள்ளனர். சுத்தமான குடிநீரை கோரி இவர்கள் ஆர்ப்பாட்ட த்தை முன்னெடுத்துள்ளனர்.
