News
இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் – கடந்த 12 வருடங்களாக காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு வகையான சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இவ் இரத்ததான முகாம் எதிர்வரும் 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை காத்தான்குடி-06 பிரதான வீதியில் அமைந்துள்ள…
முஸ்லிம் ஒருவரின் படுகொலை மிகவும் துரதிஷ்டவசமானது -மோடி
– சாகுல் ஹமீட் – இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளார். அதில், தாத்ரி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. இதனை அரசு எதிர்க்கிறது. பா.ஜ.,வும் சரி, அரசும் சரி, நானும் சரி இந்த போலி மதவாதத்தை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சிகள் இதனை வேண்டுமென்றே பிரச்னையாக்க முயற்சிக்கின்றன. பாக்., பாடகர் குலாம் அலி விவகாரம் சர்ச்சை ஆக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி உட்கொண்டதாக…
நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கள் இலத்திரனியல் முறையில்
நாடாளுமன்றில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்களை இலத்திரனியல் முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்கெடுக்களை இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான நிலையியற் கட்டளையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றின் ஒலி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. தற்போது நாடாளுமன்றில் காணப்படும் ஒலி கட்டமைப்பு 15 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சட்டப்…
பிரணாப் முகர்ஜி பங்கேற்ற விழாவில் பாலஸ்தீன மாணவர்கள் போராட்டம்
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தனது ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு நாள் பயணமாக பாலஸ்தீன நாட்டுக்கு சென்றார். அங்கு அபுதிஸ் நகரில் அமைந்துள்ள அல் குத்ஸ் பல்கலைக்கழகத்தில், அந்த நாட்டின் பிரதமர் ரமி ஹமதல்லா தலைமையில் நேற்று நடந்த விழாவில் அவருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன் அவர் ‘அமைதி வீரர்‘ என்று கவுரவிக்கப்பட்டார். இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, “மத்திய கிழக்கு பிராந்தியத்தில், அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பதுதான்…
பிரியா விடைகொடுக்கும் பயணத்தின்போது!
– அபூ உமர் அன்வாறி, BA மதனி – கால மாற்றங்கள் ஒரு முஸ்லிமின் வாழ்வில் அதிகம் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒருவர் குளிருக்கும், வெப்பத்துக்கும் தகுதியான ஆடைகள், உணவுகளை தெரிவு செய்வது போல், தனது வாழ்வின் முடிவுக்கான ஆயத்தங்களை எப்போதும் சரிவர செய்து கொள்ள வேண்டும். மரணத்துக்கான காரணிகள் வேறுபடலாம், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது அல்லாஹவின் நியதி. ஆகவே இவ்வாறு செய்யும் போது, அவன் வெற்றியடைகின்றான். காலத்தின் மாற்றத்தை அவன் முன்…
மறந்து போனது முன்னைய பகை!
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தங்கள் முன்னைய பகையை மறந்து கூடிக்குலாவியுள்ளனர். கடந்த ஆண்டின் ஜுலை மாதம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அப்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல்மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் விவாதம் சூடுபிடித்த நிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் கடுமையான தனிப்பட்ட…
ஆசியா பசுபிக் முஸ்லிம் தலைவர்களின், மாநாட்டில் றிஸ்வி முப்தி (படங்கள்)
ஆசியா பசுபிக் முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ள றிஸ்வி முப்தி வெளிநாட்டு பிரமுகர்களுடன் கலந்துரையாடுவதை படங்களில் காண்கிறீர்கள்.
பாரிய மோசடி : மஹிந்தவிடம் நாளை விசாரணை
பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை காலை 09.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.vk
கொண்டயாவின் அண்ணனே குற்றவாளி?
கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயந்தவின் மரபணு, சிறுமியின் மரபணுவுடன் ஒத்திசைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொட நீதிமன்றில் இன்று பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். சேயா சிறுமியின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுவுடன் இந்த கொண்டயாவின் சகோதரரது மரபணு ஒத்திசைவதாகக் குறிப்பிட்டுள்ளனர். சேயாவின் தந்தையின் மரபணுவும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் 22 மீனவர்கள் கைது (படங்கள்)
– எம்.ஏ. தாஜகான் – பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி கரைவலையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டின் பேரில் 22 மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கரையோரத்தில் அனுமதிப்பத்திரமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கரையோர மீன்பிடித்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கடற்றொழில் தினைக்களத்தின் அதிகாரிகள் இன்று(14)சுற்றிவளைப்பை மேற்கொண்டபொழுதே ஒரு தொகுதி மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டில்…
ஆசியா மற்றும் பசுபிக் உலக நாடுகளின் முஸ்லிம் தலைவர்களுக்கான மாநாடு
– இக்பால் அலி – துருக்கி நாட்டு பிரதமர் அலுவலகத்தின் கலாசார விவகார தலைமை அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் உலக நாடுகளின் முஸ்லிம் தலைவர்களுக்கான மாநாடு 13 ஆம் திகதி முதல் 16 வரை துருக்கி இஸ்தாம்பூல் நகரில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து விஜயம் செய்து முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் மற்றும் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹீம் ஆகியோர்கள் கலந்து…
24 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து கைதுசெய்தனர். தமிழக மீனவர்களின் 4 படகுகளையும் கைப்பற்றிய பொலிஸார், அவர்களை நேற்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
