Headlines

24 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்




இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர்  தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து கைதுசெய்தனர்.

தமிழக மீனவர்களின் 4 படகுகளையும் கைப்பற்றிய பொலிஸார்,  அவர்களை நேற்று மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *