News
எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும்: விளாடிமிர் புதின்
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிரியாவில் ஐ.எஸ்.களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டி.பி வீரசூரிய நியமனம்!
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் டி.பி வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆணைக்குழுவின் மற்றும் சில பதவிகளுக்கு நீதியரசர் ரஞ்சித் சில்வா மற்றும் நெவில் குருகே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் சேவை ஆணைக்குழுவின் ஆணையாளராக டி.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.டபிள்யூ.ஏ.சலாம் , எம்.எஸ். செனவிரத்ன. தாரா விஜேதிலக்க , பிரதாப் இராமானுஜன், விஜயலக்ஷ்மி ஜெகராஜசிங்கம் , எம்.எல்.எம். மெண்டிஸ், ஆர்.ரனுக்கே மற்றும் சரத் ஜயதிலக்க ஆகிரோர் ஆணைக்குழுவின் மற்றைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை பொறியியல் பீட மாணவின் சடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்படவுள்ளது
விபத்தில் உயிரிழந்த மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவனின் சடலம் மட்டக்களப்பிற்கு எடுத்துவரப்படவுள்ளது. இன்று காலை தொடக்கம் பெரியகல்லாறு, முருகன் ஆலய வீதியில் உள்ள குறித்த மாணவனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 4.30மணியளவில் பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொரட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கல்வி பயிலும் ஹற்றனை பிறப்பிடமாகவும் பெரியகல்லாறை வசிப்பிடமாகவும் கொண்ட நீதிராஜா கரோஜனாத் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை…
இலங்கை வருகிறார் ஐ.நா உதவிச்செயலர்
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்காக அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரியுடன், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். இலங்கை அதிகாரிகள் மற்றும் பங்காளர்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு, ஐ.நா உதவிச் செயலரின் இந்தப் பயணம் வாய்ப்பை வழங்கும் என்றும், இலங்கைக்கு உதவும் வகையிலான, நிலையான அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான…
உள்ளூராட்சி தேர்தலிலும் தனது ஆதரவு ஐ.தே.மு.வுக்கு – அமைச்சர் ராஜித
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலிலும் தனது ஆதரவினை ஐக்கிய தேசிய முன்னணிக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள் பலரும் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு கட்சிகளும் போட்டியிட்டு இறுதியில் ஒரு தரப்பினராக செயற்படுவார்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்கள் தேசிய அரசாங்க கருத்திற்கு செல்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை, எனினும் போட்டியிட்டதன் பின்னர் தேசிய அரசாங்க முறைக்கமைய தான் செயற்பட நேரிடும் என சுகாதார அமைச்சர்…
சவூதியிடமிருந்து 30,000 அல்குர்ஆன் மற்றும் கிதாபுகள்(படங்கள்)
சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட சுமார் 30,000 அல்குர்ஆன் மற்றும் பெறுமதி வாய்ந்த கிதாபுகள் இலங்கையில் உள்ள மத்ரஸாக்கள், அநாதை நிலையங்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களுக்கு வினியோகிக்கும் நிகழ்வு 20/10/2015 ஜம்ய்யதுஸ் ஸபாப் நிறுவன கேட்போர் கூடத்தில் மொளலவி எம்.எஸ்.எம் தாஸிம் தலைமையில் இடம் பெற்றது. இதில் சவூதி அரேபிய பிரதி நிதி, சவூதிஅரசாங்கத்திடமிருந்து அல்குர்ஆன் பிரதிகளை பெற உதவிய புனித ஹரம் ஸரீபில் கடமையாற்றும் ஸாதிக் ஹாஜியார், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவர்,…
நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டம்: ஜனாதிபதி தலைமை
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதே இந்த சந்திப்பில் நோக்கமாகும். தங்கள் கட்சிக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர்…
இந்திய பஸ்கள் கொள்வனவில் பாரிய மோசடி
இந்தியாவிலிருந்து பஸ்கள் கொள்வனவு செய்ததில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இதில் முன்னாள் ஆட்சியில் அமைச்சரொருவரின் பங்களிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு லஞ்சம் பெற்றுக் கொண்டது தொடர்பிலும் தற்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச்சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்; வரி தொடர்பான தேசிய…
ரணிலின் பதிலில் அமைதியான தினேஷ்
அமெரிக்காவினதும் இலங்கை அரசாங்கத்தினதும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தினையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினரும் மஹிந்த அணி யின் பிரதானியுமான தினேஷ் குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தினுள் அமைதியாக சிரித்தவாறே அமர்ந்து கொண்டார். மேற்படி தீர்மானத்தை வாசித்துப் பார்க்கவில்லை என்று கூறும் எனது நெருங்கிய உறுப்பினர் (தினேஷ் குணவர்த்தன) அதனை வாசித்து அறியாது எவ்வாறு தாய்நாட்டைப் பாதுகாப்போம் எனும் பெயரில் நேற்று (நேற்று முன்தினம்) மாநாட்டை நடத்த முடிந்தது என்று கேட்டபோதே உறுப்பினர்…
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தீடீர் மழையை அடுத்தே எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நுவரெலியா, மாத்தளை, பதுளை, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, மொனராகலை, காலி, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பிரதேசத்தில் உள்ளவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி + பிரதமரிடம் செயற்திட்ட அறிக்கையை, சமர்ப்பிக்க ஜம்இய்யத்துல் உலமா தீர்மானம்
நேற்று (19.10.2015) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தஃவா மற்றும் தொண்டர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு ஜம்இய்யாவின் தலைவர் தலைமை தாங்கினார். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் நிறைவு பெறும் இத்தருணத்திலும் வாழ்க்கையையே வாழ்கின்றனர். இவர்களின் மீள் குடியேற்றத்தை பூரணப்படுத்தி நல்லதொரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்றை ஜம்இய்யா குறித்த அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. மன்னார், யாழ்ப்பாணம்,…
பர்தா அணியக் கூடாது என, சட்டம் கொண்டுவந்த அரசு மண் கவ்வியது
கனடா பொதுத் தேர்தலில்; கடந்த ஒரு தசாப்தமாக நீடி த்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்ப தோடு லிபரல் கட்சி வெற்றி யீட்டியுள்ளது. இதன்மூலம் கனடாவின் முன்னாள் பிரதமர் பியெர் ட்ருதாவின் மகனும் லிபரல் கட்சி தலைவருமான ஜஸ்டின் ட்ருதா அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பே ற்கவுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி 188 தேர்தல் மாவட்டங்களில் முன்னிலையில் இருந்தது. மொத் தமுள்ள 338 தேர்தல் மாவட் டங்களில் ஆட்சி அமைக்க…
