News
அரசியல் கைதிகளுக்கு இன்று முதல் பிணை
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாட்டுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் இன்று முதல் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கும் செயற்பாடு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் இவ்விடயம் குறித்து தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் நேற்று பிரதமர் ரணில்…
இன்று விசேட கூட்டம்
எவன் கார்ட் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று புதன்கிழமையும் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. கலந்துரையாடலில் பாதுகாப்புத்துறையை சார்ந்த தரப்பினர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அமைச்சரவை அமைச்சர்கள் சிலரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இவ்வாறு இன்றைய தினம் கலந்துரையாடலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருந்தார்….
அனுர குமார கூறுகின்றார் என்பதற்காக பதவி விலக முடியாது
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கூறுகின்றார் என்பதற்காக நாங்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக முடியாது. நான் அமைச்சராக இருக்கவேண்டுமா இல்லையா என்பதனை ஜனாதிபதியும் பிரதமருமே தீர்மானிக்கவேண்டும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி கூறுவதைப் போன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை எமது அரசாங்கம் கைதுசெய்திருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால், சட்டத்துக்கு முரணாக நாங்கள் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எவன்ட் கார்ட்…
காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
– பி.எம்.எம்.ஏ.காதர் – கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டு,அம்பாறை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது காட்டு யானைகளின் தாக்கத்தினால் பலர் உயிர் இழந்துள்ளனர் இது விடயத்தில் அவசரமாக நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிழக்கு மாகாண மக்களை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் வனவளத்துறை அமைச்சர் யவிக்ரம பெரேராவிடம் எழுத்து மூலமான…
மியன்மார் தேர்தல்: தோற்றதும் பேய் வென்றதும் பேய்?
13 மில்லியன் முஸ்லிம்களின் வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் மியன்மாரில் இடம்பெற்ற தேர்தலில் ஆங்சாங் சூயி தலைமையிலான எதிர்க் கட்சி வெற்றியீட்டி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்தை பெறும் என ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளைக் கொண்டு எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சி ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. அமைதிக்காக நோபல் விருது வென்ற ஆங்சாங் சூயின் முஸ்லிம் சிறுபான்மை மீதான அடக்குமுறைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்காததுடன் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்பில் இதுவரை வாய்திறந்தது இல்லை. இவருக்கு நோபல் விருது…
முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக றிஷாத்: ஜனாதிபதி மைத்திரியுடன் நாளை சந்திப்பு
– ஏ.எச்.எம்.பூமுதீன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அ.இ.ம.கா தேசியத் தலைவர் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்குமிடையில் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை புதன் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. கடந்த புதன் கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிகவும் அசமந்தமான போக்கை அரசு கடைப்பிடித்து வருவதாக கண்டித்து…
வெலே சுதாவின் சகோதரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் சகோதரியை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவுடன் இரண்டாவது பனிப்போர் ஏற்படுவதை விரும்பவில்லை
ரஷ்யாவுடன் இரண்டாவது பனிப்போர் ஏற்படுவதை விரும்பவில்லை என அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி ஆஷ் கார்ட்டர் தெரிவித்துள்ளார். நேற்று கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய கார்ட்டர், உக்ரைனை ஆக்ரமித்தது, சிரியாவிற்கு படைகளை அனுப்பியது என ரஷ்யா உலகை நாசமாக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் “ரஷ்யாவுடன் பனிப்போரையோ அல்லது நேரடி போரையோ அமெரிக்கா விரும்பவில்லை. நாங்கள் ரஷ்யாவை எதிரியாக மாற்ற விரும்பவில்லை. அதேசமயம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும்…
திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு
தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
ராஜினாமா செய்த காரணங்களை கூறுகிறார் திலக் மாரப்பன
ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள் பரிமாறப்படுவதாக அவர் தெரிவித்தார். கடற்படையினர் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தினர், குறித்த ஆயுதக் கப்பலில் இருந்து இவ்வாறு ஆயுதங்களை கொண்டு…
மைத்திரியிடம் ஆலேசனை கேட்ட தாய்லாந்து பிரதமர்
ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்….
இஸ்லாத்தை அவமதித்த ஞானசாரக்கு எதிராக வழக்கு
பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு குற்றவியல் பிரிவினால் இன்றைய தினம் (09) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாம் மற்றும் புனித பரிசுத்த அல்குர்ஆன் குறித்து அவதூறாக பேசியதாக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014, ஏப்ரல் 12 ஆம் திகதி கொழும் 02, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த அவதூறான அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
