News
போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து காணப்படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மாத்திரம் 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை மது போதையில் வாகனம் செலுத்திய 92 பேரை நீதி மன்றத்தில்…
மிதிபலகையில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை
புகையிரதத்தின் மிதிபலகையில் பயணம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார். டிசம்பர் 01 ஆம் திகதி முதல் இந்நடவடிக்கையை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாகவும் புகையிரதம் பயணிக்கும் வேளைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை 12 இலக்கங்களை கொண்டதாக மாற்றம்
1972ம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையானது 9 இலக்கங்களும் ஆங்கில எழுத்துக்களான V மற்றும் X காணப்பட்டது. தேசிய அடையாள அட்டை தொடர்பாக தற்பொழுது அதிக அவதானம் செலுத்தப்படுவதால் அதனை புதுப்பித்து 12 இலக்கங்களை உள்ளடக்கியதாக காணப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களின் போதும் சளைக்காதவர் சோபித தேரர்: மஹிந்த
நல்லாட்சியையும் சகவாழ்வையும் இலக்காக கொண்டு போராடி இன்னுயிர் நீத்த கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரருக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாதுலுவாவே சோபித தேரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். கடந்த காலங்களில் மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்த வீரரின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு என அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது குறிபபிட்டார்….
நாகதீபத்தின் பெயரை மாற்ற முடியாது! பைஸர் முஸ்தபா மறுப்பு
யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு உட்பட்ட நாகதீபம் என்ற தீவின் பெயரை மாற்றுவதற்கு முடியாது என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி வடமாகண சபை அமர்வின் போது பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஜாகிர் நாயக் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்ற ஜப்பானியர்கள்
கடந்த சனிக்கிழமை ஜப்பானில் இடம் பெற்ற இஸ்லாமிய விளக்கக் கூட்டம். ஜாகிர் நாயக் அவர்களால் பல தெளிவுகளை அடைந்த ஜப்பானியரில் பலர் அரங்கத்திலேயே இஸ்லாத்தை தழுவிக் கொண்டனர். ஐந்து லட்சம் தருகிறோம் என்று சொல்லவில்லை. வாளைக் காட்டி மிரட்டவில்லை. ஒரு மார்க்கம் வளர்வதற்கு மக்களை சிந்திக்க தூண்ட வேண்டும். சிந்திக்கும் மக்கள் தாங்களாகவே இந்த மார்க்கத்தில் நுழைவார்கள்.
குமார் குணரட்னம் கைது தொடர்பில் பிரதமருக்குக் கடிதம்
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழுத் தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அக்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறும் கோராப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக்கவின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில், உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே கடந்த காலங்களில்…
க.பொ.த. (சா/த) பரீட்சை 664,537 பேர் விண்ணப்பம்
எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சைக்கு ஆறு இலட்சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இவர்களுள் நான்கு இலட்சத்து 3 ஆயிரத்து 442 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும் இரண்டு இலட்சத்து 60 ஆயிரத்து 895 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். இம்முறை 4,670 பரீட்சை மத்திய நிலையங்களை அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு கடந்த வருடம்…
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி
உள்ளூரில் உற்பத்திசெய்யக்கூடிய உண வுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மான தொகை செலவாகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படவேண்டும். இதன் பொரு ட்டு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இவ் விடங்கள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக் குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும்…
ஜப்பானின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்
நல்லெண்ண அடிப்படையில் இரண்டு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன. ஜேஎஸ் மகிநமி மற்றும் ஜேஎஸ் சுசுநமி ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. நேற்று வந்த இந்த கப்பல்களை சில நாட்களில் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையும் ஜப்பானும் கடல்எல்லை தொடர்பில் இணக்கத்துடன் செயற்படும் நோக்கிலேயே இந்த கப்பல் விஜயம் இடம்பெறுகிறது. ஏற்கனவே 2011இல் ஜப்பானின் 8 கப்பல்கள் இலங்கைக்கு வந்தன. 2012இல் 12 கப்பல்கள் வந்தன.-2013இல் 11 கப்பல்களும் 2014 இல் 8…
மஹிந்த ராஜபக்ச நிதியத் தலைவர் மீதும் விசாரணை!
மஹிந்த ராஜபக்ச அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் 100 மில்லியன் ரூபா ஊழல் தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. ஹோமாகம தியகம மைதான அமைப்பு பணிகளின் போது இந்த நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைதான அமைப்பின் போது தனியார் ஒப்பந்தக்காரர்களும் அரசாங்கம் ஒப்பந்தக்காரர்களுடனும் இணைந்து மோசடி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மைதான அமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவும் அண்மையில்…
மாதுலுவாவே சோபித தேரரின் கடைசி ஆசை?
காலம் சென்ற மாதுலுவாவே சோபித தேரரின் கடைசி விருப்பம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நான் மரணித்த பின்னர் பெறுமதிமிக்க சவப்பெட்டி, வீதி ஊர்வலம், கொடிகள், பெறுமதிமிக்க சுடலை போன்றன இருக்கக் கூடாது. உயிரிழந்து 24 மணித்தியாலத்திற்குள் என்னை தகனம் செய்ய வேண்டும் என காலம் சென்ற சோபித தேரர் சிங்கள ஊடகமொன்றுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நேர்காணல் வழங்கியிருந்தார். 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் திகதி பிரசுரமான வார இறுதிப் பத்திரிகையில் இந்த…
