News
மக்களுக்கு நன்மை பயக்கும் வரவு செலவுத்திட்டம்: சுவாமிநாதன்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மக்களுக்கு நெருக்கமான சிறந்த வரவு செலவுத்திட்டமொன்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்…
சென்னைக்கான எயார் லைன்ஸ் விமான சேவை ரத்து
சென்னையில் தொடரும் கடும் மழை காணரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதி, ரயில் போக்குவரத்து மற்றும் விமானம் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை பெய்துள்ளதால்,விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கான இலங்கையின் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கியிருப்பதாலும், பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாத நிலை இருப்பதாலுமே சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு…
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பு டொரிங்டன் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது
பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணல் ஏற்றிச் சென்ற லொறி சாரதி ஒருவரிடம் 1500 ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை மீது, விளாடிமீர் புட்டினுக்கு ஆர்வம்
இலங்கையுடன் உறவுகளை விருத்தி செய்துக்கொள்ள ரஷ்யா ஆர்வம் கொண்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவை புதுப்பித்துக் கொள்வதில் அண்மைக்காலமாக ரஷ்யா தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் மீன்பிடி மற்றும் விவசாயத்துறையிலும் ரஷ்யா ஒத்துழைப்பை வழங்க விரும்புவதாக புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் சமன் வீரசிங்கவின் நியமனக்கடிதத்தை பெற்றுக்கொள்ளும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து தூதுவர் சமன்…
உயர்நீதிமன்றம் செல்லும் SLTJ
தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. இலங்கை வருவதை தடைசெய்தமைக்கு எதிராக சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் இன்னும் சில தினங்களில் உயர் நீதிமன்றம் செல்லவுள்ளது. தவ்ஹீத் ஜமாத் செயலாளர் ராசிக், துணைச் செயலாளர் மௌலவி ரஸ்மின் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தினர் சிங்கள, முஸ்லிம் சட்டத்தரணிகளின் உதவியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவுகுடியகல்வு பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டவுள்ளது. தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடுசெய்த நிகழ்வில் பீ.ஜே. வருவதற்கு இலங்கை முஸ்லிம் விவகார திணைக்களம் அனுமதியளித்திருந்தது. அத்துடன், உத்தியோகபூர்வமற்ற முறையில்…
இன்று தேசிய அரசில் இணையும் அந்த ஆறுபேர்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் (தற்போது தேசிய அரசில் அங்கம் வகிக்காதவார்கள்) தேசிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை இணைந்துகொள்ளவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த அறுவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த அறுவரும், இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. TM
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரினால் கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் கடந்த ஒன்பது நாட்கள் காலை 9.30 முதல் மாலை 6.30 வரையில் நடைபெற்று வருகின்றது. வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த…
கோத்தா கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும்!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என பெவிதி ஹன்ட என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்ய ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் தேவைக்கு அமைய ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினர் கோத்தபாய…
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதவரளிக்கப்படாது!– ஜே.வி.பி
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. கூட்டு எதிர்ககட்சியினால் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிதி அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்படுவதில் அர்த்தமில்லை. அசராங்கத்தின் தற்போதைய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஜே.வி.பி ஆராய்ந்து வருகின்றது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது மிகவும்…
தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம்! அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு
தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்பாடல் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த சட்ட மூலம் தொடர்பில் சிரேஸ்ட சட்ட வல்லுனரும்…
கட்டாரில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் வபாத்
கட்டாரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் என்பவர் உயிரிழந்துள்ளார். “Cuter pillar ” இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அது தவறி கடலுக்குள் வீழ்ந்ததில் சம்மாந்துறையை சேர்ந்த ஆரிப் எனும் இளைஞரும் மற்றுமொரு இந்திய நபரும் பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளனர். இவர்களது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு நல்லமல்கள் ஏற்கப்பட்டு சொர்க்கவாசிகளாக இவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!
