News
மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு
– முனவ்வர் காதர் – மலேசிய வர்த்தக தூதுக்குழுவுடனான சந்திப்பு நேற்று (03) பகல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது. இதில் வடக்கில் சுமார் 20000 க்கு மேற்பட்ட தொழில்வாய்ப்பையும் ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளதால் வடக்கில் தொழில்பேட்டைகளை அமைக்க எனது அமைச்சினால் உங்களுக்கு பூரண ஆதரவை வழங்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஐனாதிபதி மற்றும் பிரதமரின் இலக்கு நாடுபூராகவும் சுமார் 44000 க்கு மேற்பட்ட தொழில்பேட்டைகளை அமைக்கவுள்ளனர். ஆகவே, முதலீட்டாளர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்குமாறு அமைச்சர் வருகை…
களுபோவில பேக்கரியில் தீ விபத்து
– எம்.எஸ்.எம்.சாஹிர் – களுபோவில, ஆசிரி வீதியில் அமைந்துள்ள பிரபல்யமான வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றில் நேற்று மாலை 6.30 மணியளவில் (02.12.2015) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வேளையில் பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் இருந்தவர்கள் விரைந்து செயற்பட்டதினால், பெரிதாகப் பரவ இருந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் வந்த தீயணைப்புப் படையினர் முற்றாகத் தீயை அணைத்தனர். தீ ஏற்பட்ட வேளையில் வெதுப்பகத்தில் யாரும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வெதுப்பகம் தீப்பற்றி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் தீ ஏற்பட்டதுக்கான காரணம்…
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அழைப்பாணை
உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் டி ஆப்ரூ அடுத்த வருடம் ஜனவரி 12ம் திகதி நீதிமன்றத்திற்கு முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணொருவரை தாக்கியது தொடர்பில் நீதியரசருக்கு எதிராக கல்கிஸ்ஸ காவற்துறைக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
1988, 1989 சம்பவங்களை விவாதிக்க தயார்
1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கத் தயார் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்று(02) யோசனை தெரிவித்தார். 1988, 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, அதே காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து விவாதிக்க தயார் என்றால், தாமும் விவாதம் மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டார்….
கிடங்கிற்குள் இறங்கியவர்கள் மர்மமாய் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் பூட்டப்பட்டிருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று புதன்கிழமை (02) மாலை குறித்த கிடங்கினுள் இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் சேர்ந்த எஸ்.மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையைச் சேர்ந்த என்.கிருஸ்ணமூர்த்தி (வயது 61) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பள்ளத்தில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்ததையடுத்து, அதைத் திருத்துவதற்காக ஒருவர் கிடங்கினுள் இறங்கியுள்ளார். இறங்கியவர் எவ்வித சத்தமும் இல்லாமல் இருப்பதை அவதானித்த…
புத்தகாயாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை
புத்தகாயாவிற்கு யாத்திரை சென்று அங்கு சிக்கியுள்ள 108 இலங்கையர்களை நாளை சென்னைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அசல வீரகோன் தெரிவித்தார். மேலும் அவர்கள் எதிர்வரும் 6ம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு
சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்யும் கனமழையால் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் கூறியுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (அசோசெம்) அறிக்கையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இந்த சூழ்நிலை வர்த்தகம், தொழிற்சாலைகள் மற்றும் பல வணிக நடவடிக்கைகளுக்கு அச்சத்தையும், ஸ்திரமற்றதன்மையையும் உருவாக்கியுள்ளது. சாதாரண குடிமகனும் சொத்துகள் சேதமடைவதன் மூலம் இழப்பை…
கோத்தபாயவிடம் இன்று விசாரணை
அவன்ட் கார்ட் மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ இன்று (வியாழக்கிழமை) பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆயுத கொடுக்கல் வாங்கல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை குற்றவாளிகளாக நிரூபிக்க முடியுமென அண்மையில் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடமும் சாட்சியங்கள்…
வாகன அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக விரைவில் மாற்று திட்டம்
அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான வரிவிலக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திர சலுகைக்குப் பதிலாக மாற்று திட்டமொன்றை விரைவில் முன்வைக்க இருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 2017 முதல் சகல அரச நிறுவனங்களும் தமது உண்மையான பெறுமதியை வரவு செலவுத் திட்டத்தினூடாக வெளிப்படுத்த வேண்டும். உந்துருளி,முச்சக்கரவண்டி என்பவற்றிற்கு புகைப் பரிசோதனை கட்டணம் அறவிடப்படமாட்டாது. வெளிநாட்டவருக்கு காணி விற்கப்போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. கடந்த ஆட்சியிலே துறைமுக நகரில் 216…
கடந்த கால திருடர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்
கடந்த கால திருடர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். இப்போது கைவசம் 35 “பைல்கள்” உள்ளது. இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். டுபாய் வங்கியில் 650 மில்லியன் டொலர்கள் யாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பலரின் வங்கிக் கணக்கு தகவல்கள் வெளியில்வரும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 9 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே…
மஹிந்த குடும்பத்தின் மோசடிகளை விடமாட்டோம்
அரசாங்கத்தினால் கண்டறியப்பட்டுள்ள 725 பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த 725 மோசடிகளுடன் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தாரும் உறவினர்களும் மறைமுகமாகத் தொடர்புபட்டிருக்கின்ற அதேவேளை இவற்றில் 25 மோசடிகளில் மஹிந்த குடும்பத்தாரின் நேரடித் தொடர்புகள் இருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெல்சன் மண்டேலாவாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை லீகுவான் கி வாகவும் இன்று வர்ணித்துக் கொண்டிருக்கின்ற சர்வதேசம் மைத்திரிபாலவின் ஜனநாயக ஆட்சியையும்…
மஹிந்த எங்கே? ஏன் வரவில்லை : சபையில் சிரிப்பொலி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எங்கே? ஏன் அவர் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகே நேற்று பாராளுமன்றத்தில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்வியெழுப்பினார். நளின் பண்டார எம்.பி. இவ்வாறு கேள்வியெழுப்பியதையடுத்து ஆளும்கட்சியினர் ஊ சத்தம் எழுப்பி மேசையில் தட்டினர். இதேவேளை மஹிந்த ஆதரவு அணியினரும் கூச்சலிட்டனர். அத்துடன் பலத்த சிரிப்பொலியும் எழுந்திருந்தது. வரவு–செலவுத்…
