News
சவூதி பெண்களுக்கு முதன்முறையாக அனுமதி
சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஈடுப்பட்டுள்ளதுடன் வாக்களிக்கவுமுள்ளனர். எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவூதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் அங்கு ஒரே நேரத்தில் தேர்தல் மேடையை பகிர்ந்துக்கொள்ள முடியாது. பெண்கள் பொது இடங்களில் தமது முகத்தை காட்ட முடியாது என்பதும், ஆண் வேட்பாளர்கள் தமது…
இரத்தினபுரி மாவட்டத்துக்கு எயிட்ஸ் பரவும் அபாயம்
இரத்தினபுரி மாவட்ட தோட்டப்பகுதிகளில் எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்கள் எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வுகளைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகுமென இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி காஞ்சன உபசேன கூறினார். இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இதனைத் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையானவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக பணிப்பெண்களாக வியாபார நோக்கத்துக்கு மத்திய…
பதவி விலகிய போதிலும் தீர்வு கிடைக்கவில்லை!– திலக் மாரப்பன
பதவி விலகிய போதிலும் அவன்ட் கார்ட் பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சட்டவிரோதமானது எனக் கூறப்படும் ஆயுதங்களை கடற்படையினரிடம் ஒப்படைக்க முடியுமா என்ற சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அவன்ட் கார்ட் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறிய போதிலும் அதன் ஊடாக நான் பதவியிழந்தது மட்டுமே நடைபெற்றுள்ளது. அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட…
எனக்கு விசுவாசமானவர்களை ஆளும்கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சி!– மஹிந்த
எனக்கு விசுவாசமான தரப்பினர் மீது வழக்குகளைத் தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தி ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சியில் இருக்கும் எவரும் ஆளும்கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள். ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளும் தரப்பினர் ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளனர். அரசாங்கம் வெறுமனே அவர் இணைகின்றார். இவர் இணைகின்றார் என பிரசாரம் செய்கின்றது. இனி எதிர்க்கட்சியின் எவரும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. எனக்கு…
சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்!– ஜனாதிபதி
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு. எமது அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அஞ்சப் போவதில்லை. 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தெளிவானதும்…
ராவணா பலய எச்சரிக்கை!
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்தால், ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைப்போம் என ராவணா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் நேற்று தெரிவித்துள்ளார். சுமார் மூவாயிரம் பௌத்த பிக்குகள் ஜனாதிபதி செலயகத்தை சுற்றி வளைக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோன் தலைமயிலான பிரதிநிதிகளுடன் ராவனா பலய நேற்று (30) சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இந்த சந்திப்பின்போது, சத்தாதிஸ்ஸ தேரர் குறித்த எச்சரிக்கையை…
வவுனியா- ஹொரவப்பொத்தானை வீதியில் கோர விபத்து: இளைஞன் மரணம்
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் திங்கள் கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளான். வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கிப் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் பயணித்த இளைஞன் 2ஆம் கட்டை, அம்பலாங்கொட பகுதியில் பயணித்தபோது மாடு ஒன்றுடன் மோதி எதிரே வந்த ஆட்டோவுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த எச்.எம்.லஹிரு பண்டார (வயது 22) என்ற இளைஞன் மரணமடைந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் எதிர்காலம் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும்! திஸ்ஸ அத்தநாயக்க
அரசியல் எதிர்கலம் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் பொருத்தமான தருணத்தில் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மக்களை பிழையாக வழி நடத்துகின்றன. இரண்டு கட்சிகளினதும் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலிருந்தே இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் செயற்படத்…
சியாமின் தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை?
பிரபல வர்த்தகர் மொஹமட் சியாமின் தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். சியாம் படுகொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பின் பின்னர் சியாமின் தந்தை ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நீதிமன்றின் தீர்ப்பினை அவமரியாதை செய்யும் வகையில் சியாமின் தந்தை கருத்து வெளியிட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக…
நாளை முதல் வவுச்சர்கள் வழங்கப்படும்
தேசிய அரசாங்கத்தின் சீருடைத் துணிகளுக்கு பதிலாக வழங்கப்படவுள்ள பண வவுச்சர்கள் நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கு சீருடைத் துணிகளுக்கு பதிலாக வழங்கப்படவுள்ள பண வவுச்சர்கள் நாளை…
டெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி
டெங்கு காய்ச்சலால் இந்த வருடத்தில் மாத்திரம் 44 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகபடியாக (8248) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 24,976 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்தார். கடந்த காலத்தில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு…
காணாமல் போன மகிந்தவின் மோதிரம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிந்திருந்த மோதிரம் ஒன்று நேற்று (28) காணாமல் போனது. கொழும்பின் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கல்யாண வைபவம் ஒன்றில் வைத்து இந்த மோதிரம் காணாமல் போனது. இந்தநிலையில் கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு தெரியாத வகையில் முழுமையாக தேடுதல்கள் நடத்தப்பட்டன. மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் அனைத்து இடங்களிலும் தேடிபார்த்த பின்னர் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதன்போதே விடயம் அனைவருக்கும் தெரியவந்தது. எனினும் குறித்த மோதிரம் சில விநாடிகளில் ஹோட்டல் பணியாளரால் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்த இடம்ஒன்றில்…
