News
எம்பிலிபிடிய சம்பவம் : ஏ.எஸ்.பி விளக்கமறியலில்
எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ் நீதிமன்றில் ஆஜர்
யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ்.நீதிமன்றில் ஆஜராகி உள்ளார். லலித், குகன் ஆகிய இருவரும் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி யாழ்.புத்தூர் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் லலித், குகன் ஆகியோர் உயிருடன் உள்ளனர் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்ம்புக்வெல்ல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். இதனையடுத்து லலித், குகன் ஆகியோரின் உறவினர்களால்…
சுதந்திரதின நிகழ்வில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்கிறது
இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை (4) காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார்களென கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்
யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் அமைவான விசாரணை நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு வேண்டியதில்லை. இதற்கு ஒரு போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பங்களிப்பு வழங்காது. இவ்விடயம் தொடர்பில் எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இவ்வார இறுதியில் ஜக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கான விஜயத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தின் கீழ்…
பஷில் ராஜபக்ஷ ஆஜர்
முன்னால் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு முன் வாக்குமூலம் வழங்க ஆஜர்.
உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுங்கள்- மஹிந்தவுக்கு அறிவுரை
தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உங்களது மகன், யோசித்த ராஜபக்ச குற்றவாளியா? குற்றமற்றவரா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். எனினும் மகன் கைது செய்யப்பட்டமைக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை தம்மீது சுமத்த வேண்டாம் என்று துலாஞ்சலி…
இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்
சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காலி வீதியில், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான பகுதி மற்றும் சைத்திய வீதியிலும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் காலி முகத்திடல் சுற்றுவட்டம்…
சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு மாற்றம்
அண்மையில் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் இரண்டு பௌத்த பிக்குகளும் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்கும்புரே ஆரியசாந்த ஆகிய தேரர்களே கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில்…
ட்ரம்பை வென்றார் டெட் குருஸ்
அமெரிக்க ஜனாதிபதிக்கான வேட்பாளர் தெரிவின் முதற்கட்ட தெரிவில் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து டெட் குருஸ் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் அயோவா பகுதியில் நேற்று முன்தினம் வேட்பாளர் தெரிவின் முதற்கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் குருஸ் 27.7 சதவீத வாக்குகளையும், டிரம்ப் 24.3 சதவீத வாக்குகளையும் பெற்றனர். அவர்களுக்கு அடுத்த நிலையில், மார்கோ ருபியோ 23.1 சதவீத வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதனால் டெட் குரூஸை குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதில் எவ்வித சிக்கலும்…
பெப்.6இல் வருகிறார் ஹுஸைன்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், எதிர்வரும் சனிக்கிழமை (06) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவனின் சடலம் மீட்பு: சிறுவன் கைது
திருகோணமலை சம்பூர் பகுதியில் பாழடைந்த கிணற்றொன்றிலிருந்து 6 வயதான சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 15 வயதான சிறுவனை சந்தேகத்தின் பேரில் இன்று (02) பகல்; கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிட்டிய விவகாரம்: ஏ.எஸ்.பி கைது
எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு ஆறு நாட்களுக்கு பின்னரே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
