News
தெமட்டக்கொடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியோருக்கும் காயம்?
தெமட்டக்கொடை, சமந்தா திரையரங்கு அருகே தெமட்டக்கொட சமிந்த உள்ளிட்ட பாரதலக் ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை சந்தேக நபர்களை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது, துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர்கள் தரப்பிலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. சிறைச் சாலை பஸ் வண்டியில் பயணித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடத்திய பதில் தாக்குதலில், தாக்குதல் நடத்த மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச்…
வலது காலுக்கு பதில் இடது காலில் சத்திரசிகிச்சை
வலது கால் முழங்காலுக்கு சிகிச்சை பெற பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது பாடசாலை மாணவியின் இடது காலுக்கு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக மாணவியின் தந்தை பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பிலிமதலாவை விஜயதுங்க மாவத்தையில் வசிக்கும் ஒன்பதாம் ஆண்டில் கல்விபயிலும் குறித்த மாணவிக்கு சிறு வயது முதல் வலது முழங்காலில் சிறு கட்டி ஒன்று காணப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெற்றுகொள்வதற்காக கடந்த 20ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் 16ஆம் வாட்டில் தனது மகள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள தந்தை,…
பஸ் விபத்து: மாணவன் காயம்
– க.கிஷாந்தன் – ஹட்டன் நகரத்திலிருந்து இன்று (3) காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது, டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் வேளையில் ஹட்டனில் இருந்து டயகம நோக்கி பயணித்த தனியார் பஸ் மாணவனின் மீது…
வழக்கை சமாதானமாய் தீர்க்க ஞானசார தேரர் நீதிமன்றில் கோரிக்கை
ஜாதிக பல சேனா அமைப்பு 2014ம் ஆண்டு கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புகுந்த bbs அமைப்பினர் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படுத்திய சம்பவம் மற்றும் புனித அல்குர்ஆனை அவமதித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கில் ஆஜரான பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் இந்த வழக்கை சமாதானமாக முடித்துக்கொள்வோம் என நீதிமன்றில் கேட்டுள்ளார். மேலும், குறித்த இந்த வழக்கு…
இலங்கையில் செய்தி இணையதளங்களை பதிவு செய்யக் கோருவது ஏன்?
இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும், தராதரங்களுக்கும் உட்பட்ட வகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்துகொள்ளாத இணையதளங்கள் உரிய திகதிக்குள் பதிவு செய்யப்பட…
ஆட்டோ சாரதிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
முச்சக்கரவண்டிகளுக்கு பாதுகாப்பு ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்தல், தலைக்கவசங்களுக்கென புதிய தரம் அறிமுகப்படுத்தல் உட்பட வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் புதிய பரிந்துரைகள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால், போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துக்களுக்கமைய வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பின்பற்றப்படும் 50 கிலோ மீட்டர் வேக…
எம்பிலிபிட்டிய இளைஞன் கொலை வழக்கு இன்று இடம் பெற்றது
எம்பிலிபிட்டிய இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சத்தியக்கடதாசி வாக்குமூலம் அல்லது நெருங்கிய உறவினரின் சாட்சியின் மூலமாக முன்வைக்குமாறு எம்பிலிபிட்டிய நீதவான் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (3) எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது சத்தியக்கடதாசி வாக்குமூலம் முன்வைக்கப்படும் வரை இந்த வழக்கை பிற்போடுவதாக நீதிபதி பிரசன்ன பெர்ணான்டோ உத்தரவிட்டார்.
லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்படவில்லை!– ஜனாதிபதி செயலாளர்
பாரிய நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அயகோன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்… ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்த லெசில் டி சில்வாவை பணி நீக்கவோ அல்லது விலக்கவோ இல்லை. இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் ஓராண்டாக காணப்பட்டது. ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு…
தீய சக்திகளுக்கு ஒருபோதும் இடமளியோம் – அமைச்சர் றிஷாத்
– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சமாதானத் சூழலில் மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என கைத்தொழில் வணிக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு – ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புடைவை உற்பத்தி சம்பந்தமான பயிற்சியளித்தல் ,வடிவமைத்தல் மற்றும் சாயமிடல்; சேவைகள் நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து…
மட்டக்களப்பு வீரன் இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவு!
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சகலதுறை ஆட்டக்காரர் ஆன இவர் பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை…
31க்கு முதல் செய்தி வலைதளங்களை பதிவு செய்யவும்
இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து செய்தி வலைத்தளங்களையும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்ளுமாறு, குறித்த அமைச்சு இன்று புதன்கிழமை (02) அறிவித்துள்ளது. இவ்வாறு அமைச்சின் கீழ் பதிவு செய்துக்கொள்வதன் மூலம், அனைத்து செய்தி வலைத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கிகாரத்தை பெற்று செற்பட முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது
முதன்மை சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை பொருள் விற்பனை தொடர்பாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மறுத்த குற்றசாட்டிலேயே இவர், கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவல்களை வழங்க முடியாது என டியாகோ சோடன் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அதேவேளை இக்கைது…
