News
நாமலுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணச் சலவை சட்டத்தின் கீழ் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். 12.5 கோடி ரூபாவை பயன்படுத்தி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தை கொள்வனவு செய்தமை சம்பந்தமாகவே இந்த…
குற்றங்கள் நிரூபிக்கப்படின் தண்டனை நிச்சயம்: ருவன் விஜயவர்த்தன
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். எனினும் குற்றமற்றவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர்களை தடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும், அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தட்டிக்கேட்கும் திராணி இருக்கவேண்டும் – அமைச்சர் றிஷாத்
கட்சிகளும் சின்னங்களும் அவற்றின் நிறங்களும் மார்க்கமென நம்மவர்களில் சிலர் கருதும் போக்கு இல்லாமல் போனால்தான் நமது சமூகம் விமோசனம் பெறும். கட்சிகள் விடும் தவறுகளை தட்டிக் கேட்கும் திராணியும் நமக்கு இருக்க வேண்டும் இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் அக்கரவெளியில் இடம்பெயர்ந்து வாழும் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி அகதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மக்களின் தேவைகளை நிறைவேற்றவே நாம் அரசியல் செய்கின்றோம். எமது கட்சியில்…
உடுவே தம்மாலோக்க தேரர் கைது!
உடுவே தம்மாலோக்க தேரர் இன்று(09) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப் பத்திரமின்றி யானைக்குட்டியொன்றினை தம்வசம் வைத்திருந்த குற்றத்துக்காக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் குடியிருப்போர் விவரங்களைக் கோரும் போலிசார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு போலிஸார் கோரியுள்ளனர். மட்டக்களப்பு நகரப் பிரதேசத்திலும் அண்மித்த பகுதிகளிலும் விபரங்களை திரட்டுவதற்கான சிறப்பு படிவங்கள் தற்போது போலிஸாரால் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வீடுகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் என வகைப்படுத்தப்பட்டு விபரங்கள் உறவு முறையுடன் அதற்கான படிவத்தில் போலிஸாரால் கோரப்பட்டுள்ளன. வீட்டு உதவியாளர்கள் உட்பட தற்காலிமாக குடியிருப்போர் பற்றிய விபரங்களில் நிரந்தர வதிவிடம் , உறவு முறை, தங்குவதற்கான காரணம் மற்றும்…
ஊடகங்கள் மோசமாக செயற்படுகின்றன – விக்டர் ஐவன்
இலங்கையின் ஊடகங்கள் குறித்து திருப்தி அடைய முடியாது என ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகங்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களை தூய்மைப்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். தாம் ராவய ஊடகத்தில் ஆசிரியராக கடமையாற்றிய போது உச்ச அளவில் ஊடக ஒழுக்க விதிகளை பின்பற்றி செய்தி…
சிசிலியாவின் விளக்கமறியல் நீடிப்பு
செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று (09) உத்தரவு பிறப்பித்தது. சேமிப்பாளர்களின் 430 மில்லியன் ரூபாவை மோசடி செய்தால் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
HIV வதந்திக்குள்ளான மாணவனுக்கு கிடைத்தது வெற்றி
குளியாபிடிய சிறுவனுக்கு பாடசாலை அனுமதி தொடர்பான ஒப்பந்தத்தில் கண்டி டிரினிடி கல்லூரி அதிபர் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். குளியாபிடிய பகுதியிலுள்ள சிறுவன் ஒருவனின் தந்தை சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு எயிட்ஸ் நோய் இருந்ததாகவும் அதனால், குறித்த சிறுவனுக்கும் எச்.ஐ.வி இருக்குமென வதந்தி பரவியது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கருதி குறித்த பாடசாலையிலுள்ள மற்றைய மாணவர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுத்தமையால், குறித்த சிறுவனுக்கு கல்வி கற்று…
அனில் பிரசன்னவுக்கு தங்கப் பதக்கம்
ரீ 42 பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 25.11 செக்கன்களில் நிறைவு செய்த அனில் பிரசன்ன ஜயலத் புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இப் போட்டியை 27.50 செக்கன்களில் நிறைவு செய்த புத்திக்க இந்த்ரபால வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதேவேளை, ரி 44 பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் அஜித் ஹெட்டிஆராச்சி (25.05 செக்) மூன்றாம் இடத்தைப் பெற்றபோதிலும் பதக்கம் வெல்லத் தவறினார்.
மகாவலி நிலையத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!
மகாவலி நிலையத்தின் புதிய பணிப்பாளராக அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் அவர் நேற்று (8) பெற்றுக் கொண்டார். பேராசிரியர் விஸ்வா வர்ணபாலவின் மறைவையடுத்து வெற்றிடமாயிருந்த இப்பதவிக்கு அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார். களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மென்செஷ்டர் மெட்ரோ பொலிட்டன் பல்கலைகழகங்களில் பட்டப்பின்படிப்பு பட்டதாரியான லேகம்கே, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் சிலோன் எசெட் மெனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் த பினான்ஸ்…
பாரத லக்ஸ்மன் கொலை : சந்தேகநபர்களுக்கு பலத்த பாதுகாப்பு
கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உட்பட நால்வரை, கொலன்னாவையில் வைத்துச் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர்கள் இருவருக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கொலையின் பிரதான சந்தேகநபரான தெமட்டகொடை சமிந்த என்பவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக சிறைச்சாலை வாகனத்தில்…
நிதி மோசடிப் பிரிவிற்கெதிரான மனு இன்று விசாரணை
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அரசியல் அமைப்பிற்கு விரோதமாகவும், சட்டத்திற்கு முரணான வகையிலும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பேராசிரியர் காலோ பொன்சேகா மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. புதிய அரசாங்கம் ஆட்சியேற்ற பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம்…
