News
யோஷிதவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் எனும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ உட்பட ஐந்து பேர் இன்று காலை கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை தொடர்ந்தும் மார்ச் மாதம் 24ஆம் திகதி…
மகாநாயக்க தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பு – அமைச்சர் றிஷாத்
கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரரான ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகுமென்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரரின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலு கூறப்பட்டுள்ளதாவது; மறைந்த தேரர் இனங்களுக்குகிடையில் நல்லுறவை உருவாக்குவதில் பெரிதும் பாடுபட்டவர். பல்வேறு பட்ட கொள்கைகளையுடைய அரசியல்வாதிகள் இவரிடம் சென்று ஆசி பெறும்போது இன ஐக்கியத்தின் அவசியத்தை அவர்களிடம் அடிக்கடி வலியுறுத்துவதோடு நாட்டில் சமாதானம் நிலைக்க அனைவரும் பாடுபடவேண்டுமெனவும் அவர்களிடம் சுட்டிக்காட்டுவார். அதிகாரத்திலுள்ளவர்கள் தவறிழைக்கும் போதும்…
வடகொரியாவுக்கு ஆதரவு இல்லை – சீனா திட்டவட்டம்
வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதில்லையென சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி நேற்று முன்தினம் (8) தெரிவித்துள்ளதாவது, நாட்டு வளர்ச்சியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த வடகொரியா விரும்பினால் அவர்களுக்கு உதவியளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இருந்தும், கொரிய தீபகற்பம் அணு ஆயுத ஆபத்தில்லாத பகுதியாக விளங்க வேண்டும் என்பதற்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எனவே, வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களுக்கோ, அந்த ஆயுதங்களை…
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நவீன ரக சி.ரி. ஸ்கேனரை பெற்றுக் கொள்வதற்கு உதவி கோரல்
– அஷ்ரப் ஏ சமத், சத்தார் எம் ஜாவித் – மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நவீன ரக பெற் சி.ரி ஸ்கேனர் ஒன்றை வழங்கவதற்கு இன, மத பேதமின்றி ஒன்றிணைந்து உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சுமார் 1,100 பேர் தங்கி சிகிச்சை பெறுவதாகவும், அதனைவிட நாளாந்தம் சுமார் 1,500 பேர் வரை சிகிச்சைகளை பெற்றுச் செல்வதற்காக வருகை தருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால்…
சுமித்தின் சடலம் தோண்டுவது பிற்போடப்பட்டுள்ளது
பிரேத பரிசோதனைக்காக இன்று (10) தோண்டப்படுவதாக அறிவித்த எம்பிலிப்பிட்டிய சுமித் பிரசன்னவின் சடலம் தோண்டும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில் குறித்த சடலத்தை தோண்டுமாறு எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சடலத்தை பரிசோதனை செய்யும் சட்டமருத்துவர் தன்னால் இன்று வரமுடியாது என்று அறிவித்தமையினால் இந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகியன கூட்டணி அமைப்பு
சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள் இவ்வாறு கூட்டணி அமைத்துள்ளன. பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய மூன்று அமைப்புக்களும் நேற்று இந்த கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்தர்களின் உரிமைக்காக விரிவான அடிப்படையில் குரல் கொடுப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து செயற்பட…
உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகருக்கு இரண்டு விருதுகள்!
உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. 1995ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றங்களை தடுத்தல், இன சகோதரத்துவத்தை ஏற்படுத்தல், சமூக அபிவிருத்தி, மனிதநேய செயற்பாடுகள், சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தல், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரித்தல், தன்னார்வ சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற…
குற்றச்செயல்களைத் தடுக்க வடக்கில் பாதுகாப்பு தீவிரம்!
வடக்கில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைகள், மதுபோதை பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் முதலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை, மாலை, இரவு பொலிஸ் ரோந்து சேவைகள், உடனடி வீதித் தடைகள், உடனடி சுற்றிவளைப்புகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான டக்ளஸ்…
எனது மகன் அரசியலில் ஈடுபட மாட்டார் – சந்திரிக்கா
தனது புதல்வரான விமுக்தி குமாரதுங்க எந்த காலத்திலும் இலங்கையில் அரசியலில் ஈடுபட மாட்டார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி, கட்சியின் தலைமையகத்தில் நேற்று (08) இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் யாரிடமும் பதவிகளை கேட்க மாட்டேன். எனது மகன் இங்கு அரசியலில் ஈடுபட வரமாட்டார். குடும்ப ஆட்சி நாட்டில் தொடர்ந்தும்…
கொழும்பில் புதிய படகு சேவை
உல்லாசப்பிரயாணிகள் கொழும்பின் அழகை கண்டுகளிக்க படகு சேவையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்தார். அண்மையில் பத்தரமுல்ல, தியத்த உயன கடற்படை படகு போக்குவரத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் வெள்ளவத்தை வரையிலான படகு போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்திற்கு உதவி வழங்கவுள்ள நெதர்லாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் திருமதி ஜோன்ஏன் டுர்னேவோட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த கேளிக்கை விடுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த…
இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கு குவைத் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இலங்கைப் பெண் ஒருவர் மற்றும் மூன்று இந்தியர்களுக்கு, எதிராக நேற்று (8) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குவைட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டனர். இதன்போது குற்றவாளிகள் வசம் இருந்து 8 கோடி இலங்கை ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக…
பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை
நாட்டில் குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள போதிலும், பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இல்லை என பொலிஸார் உறுதியளித்துள்ளனர். தலைநகரம் மற்றும் தென் பகுதிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, இந்த குற்றச்செயல்கள் தனிப்பட்ட பகைமை காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். கடந்த சில வாரங்களில் இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மார்ச் 5ம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு முன்…
