News
சு.க.வின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் 24 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
தலைகீழாக நின்று ஆர்பாட்டம்
உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களினால் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத் தண்டனை
குடிவரவு சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே குமார் குணரட்ணத்திற்கு கேகாலை நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்களின் கைது தொடரும்
இலங்கை மீனவர்கள் பிரச்சணைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரையில் இந்திய மீனவர்களின் கைது தொடரும் என தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர , எதிர்வரும் மே மாதத்தில் இந்தியா சென்று மீனவர்கள் பிரச்சணை தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய நிதியுதவியின் கீழ் முல்லைத்தீவு மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் மற்றும் படகுகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான…
சுதந்திர கட்சி இழந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவை மீளப்பெற முயற்சி
கடந்த தேர்தல் காலங்களில் இடம்பெற்ற செயற்பாடுகளினால் சுதந்திர கட்சிக்கு இருந்த 20 வீதமான சிறுபான்மை மக்களின் ஆதரவையும் இழக்க நேரிட்டது.ஆனால் தற்போது வடக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி சுதந்திர கட்சியின் தலைவராகவுள்ளார். எனவே புதிய தலமைத்துவத்தின் கீழ் புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு சுதந்திர கட்சி இழந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். கொழும்பிலுள்ள வடக்கு முதல்வர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே…
ஜீ.எல். பீரிசை விசாரிக்க வேண்டும்;கயந்த கருணாதிலக்க
வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்தவை என தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிசை விசாரிக்க வேண்டும் என அரசாங்கம் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கையை முன்வைத்தது.
மஹிந்த ஆதரவு அணியின் ஜெனிவா பயணம்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் தினேஷ் குணவர்த்தன எம்.பி. தலைமையிலான மஹிந்த ஆதரவு அணியினருக்கு இதுவரையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை. எனவே தற்போது அவர்கள் ஜெனிவா அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்வதால் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு எந்த விதத்திலும் முட்டுக்கட்டையிட முடியாதென நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கான அந்தஸ்து வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக ஜெனிவா சென்றுள்ளமை குறித்து வினவியபோதே அவர்…
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கழுகை கொலை : மேலும்ஆறு பேருக்கு விளக்கமறியல்
காலி ஹபராதுவ – பம்பகல பாலத்துக்கு அருகில் கழுகு ஒன்றை உயிருடன் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்கள் 6 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் காலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகநபர்கள் வந்சாவல மற்றும் கந்துருதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முன்னதாக, இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே…
எண்ணெய் கலப்படம் செய்தவருக்கு அபராதம்
தேங்காய் எண்ணையுடன் “பாம்” எண்ணையைக் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட எண்ணெய் வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி 5 ஆயிரம் ரூபாவினை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளார். பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பிக்க ராஜபக்ச முன்னிலையில் நேற்று மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை மாநகரில் எம். சத்தியசீலன் என்ற எண்ணை வியாபாரிக்கே, மேற்படி தண்டனை வழங்கப்பட்டதாகும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே, குறிப்பிட்ட நபருக்கெதிராக, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில்…
14 நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஷ் குணவர்தன எம்.பி, இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக் குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் அவ்வாறு அறிவிக்காத பட்சத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது தேர்தல் திகதி தொடர்பில் கேள்வி எழுப்புவோம். கடந்த ஜனவரி எட்டாம் திகதி…
கரும்புத் தொழிலாளி சடலமாக மீட்பு
கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடச் சென்ற தொழிலாளி , சேனை வாடியொன்றிலிருந்து, சடலமாக புத்தல பொலிஸாரினால் நேற்று மீட்கப்பட்டுள்ளார். பசறைப் பகுதியின் கமேவலை தோட்டத்திலிருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபடச்சென்ற எஸ்.சண்முகம் என்ற 46 வயது நிரம்பிய தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது சடலம், வைத்திய பரிசோதனைக்காக, புத்தல அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இம் மரணம் இயற்கை மரணமா? அல்லது கொலையா? என்பது குறித்து, தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
