News
நட்ட ஈடு கோரும் சீன நிறுவனம்
கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தாமதமாவதால், அதற்கான நட்டஈட்டுத் தொகைச் செலுத்துமாறு, இவ்வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மேற்படி துறைமுக நகரத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இத்திட்டம் தொடர்பில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால், குறித்த சீன…
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாரம் மேற்கொள்ளவுள்ள சீன விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். அதுமட்டுமன்றி பல்வேறு உடன்படிக்கைகளும் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன. முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு சிறுநீரக நடமாடும் சேவை, விளையாட்டு கூட்டுறவு சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், தெற்கு அதிவேக பாதைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தி கம்பஹா அத்தனகல்ல, மினுவங்கொடப் பகுதிகளுக்கான நீர்வழங்கல் கடன் உடன்படிக்கை போன்றன கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் புதன்கிழமை…
இந்திய நிறுவனத்தின் வீடமைப்பு உடன்படிக்கை ரத்து?
இலங்கையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த இந்திய ஹைதராபாத் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவுள்ளது. ஐவிஆர்சிஎல் என்ற இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையே ரத்துச்செய்யப்படவுள்ளது. இந்த நிறுவனத்தினால் கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட மேம்பாலம் அண்மையில் உடைந்து வீழ்ந்து 24 பேர் அதில் பலியாகினர். இதனையடுத்து இலங்கையின் நகர அபிவிருத்தி சபை குறித்து நிறுவனத்துடனான உடன்படிக்கையை ரத்துச்செய்யவுள்ளது. குறித்த நிறுவனத்தினால் இலங்கையில் நாலாயிரம் வீடுகள் கட்டப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாபோல நடைபாதையை நான் உடைக்கவில்லை – ஜோன் அமரதுங்க
வத்தளை, மாபோல உடற்பயிற்சி நடைபாதையை தாம் உடைக்கவில்லை என கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த பாதையை உடைத்தவர்களை நானும் தேடி வருகின்றேன். பாதையை உடைத்தவர்கள் பிடிபட்டால் அவர்களைக் கொண்டே பாதையை மீளவு அமைத்துக் கொடுப்பேன். பாதையை உடைக்குமாறு நான் கூறவில்லை. உண்மையில் அந்தப் பகுதியில் பாதையொன்றை அமைக்க நான் திட்டமிட்டிருந்தேன். எனினும், நடைபாதையை…
பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தற்போதைக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்த நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் இலங்கை விஜயத்தின் பின்னர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைக்கு பான் கீ மூன்…
தென்பகுதி மீனவர்களுக்குத் தடை
முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் புதிய தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவிலுள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். அப்போது வன்னி மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு கடற்பரப்பில் தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் முல்லைத்தீவைச்…
போதைப் பொருள் வலையமைப்பின் உள் நாட்டு முகவர்களைத் தேடி வேட்டை
இலங்கையின் தென் கடல் பிராந்தியத்தில் ஈரான் கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் ஒன்றிணைந்த நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்ட 110 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ ஹெரோயின் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போதைப் பொருள் கடத்தலானது இலங்கை – பாகிஸ்தான் போதைப் பொருள் வலையமைப்பொன்றினுடையது என தற்போதைய விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் இந்த சட்ட விரோத வர்த்தகத்தின் இலங்கை முகவர்களைத் தேடி தற்சமயம் இரகசிய விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
வற் வரி மறு அறிவித்தல் வரை நிறுத்திவைப்பு.!
ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 15 சதவீதமாக அதிகரிக்கப்படவிருந்த பெறுமதி சேர் வரி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வரி அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ள விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மறு அறிவித்தல் வரை முன்னர் இருந்தது போன்று 11 சதவீதமான பெறுமதி சேர் வரியே நடைமுறையில் இருக்கும் என்றும், யாரும் 15 சதவீதமாக வரியை அறிவிடக் கூடாது…
பிரதமர் சீனாவுக்கு விஜயம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 6 ஆம் திகதி புறப்பட்டுச் செல்கின்றார். சீனப் பிரதமர் லீ கேக்கியாங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் பிரதமர் 9 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார். இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தல் வர்த்தக முதலீடுகள் உட்பட பல விடயங்கள் தொடர்பான பேச்சுவார்ததைகளில் பிரதமர் கலந்து கொள்வார்.
குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
முன்னிலை சோசலிசக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதோடு அரசியல் பழிவாங்கள் அடிபடையில் திட்டமிட்டே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதா முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. எவ்வாறாயின் அரசாங்கமானது குமார் குணரட்னத்தின் குடியுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுருத்தியுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியினரினால் இன்றைய தினம் கொழும்பில்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் ஏற்பாட்டாளர் புபுது ஜெயகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தாய்- சேய் மரணவீதம் குறைந்துள்ளது : உலக சுகாதார அமைப்பு
இலங்கையில் தாய்சேய் மரணவீதம் ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மசகு எண்ணெயின் விலை 25 வீதமாக குறைக்க புதிய உத்தி
நாட்டில் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்குவதற்காக கனிய வள எண்ணெய் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக கனிய வள எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக மசகு எண்ணெயின் விலை 25 வீதமாக குறைவடையும் என்று அமைச்சர்.
