News
மக்கள் மத்தியில் குழப்பம்
நாடளாவிய ரீதியில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையினால் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை சில மணிநேரங்களில் மின் வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு நிராகரித்தது. இதனால் நேற்று மாலை நாட்டு மக்களிடையே குழப்பகரமான நிலை ஏற்பட்டது. மின்வெட்டு அமுலாகுமா அமுலுக்கு வராதா என்ற கேள்விகளுடன் மக்கள் குழப்பத்துடன் காணப்பட்டனர். நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின்துண்டிப்பு முன்னெடுக்கப்படும் என நேற்று மாலை இலங்கை மின்சார சபையினால் விஷேட மின் வெட்டு பட்டியல்…
மின்சாரக்கதிரை என்ற சொல் இன்று அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளது
மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஒரு அரசாங்கம் என்ற வகையில் இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உலகின் சகல நாடுகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த அங்கீகாரத்தின் மூலம் பல வருடங்களாக இந்த நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பேசிவந்த மின்சாரக்கதிரை என்ற சொல் அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் (28) நாரம்மலை மயுரபாத மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம…
கட்டணத்தைக் குறைத்தால் இலவச மின்சாரம்
மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ‘மின்சாரப் பரிசு’ வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ‘கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்’ என்று கூறினார். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
சிகிரியாவுக்கு கூகுள் பலூன்
சிகிரியாவில் நாளை 31ஆம் திகதியன்று, 5 ஆயிரம் இளைஞர்களின் பங்குபற்றலுடன் கூகுள் பலூன் ஒன்று காட்சிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்தமுறை உடைந்து விழுந்ததாகக் கூறப்படும் கூகுள் பலூன், உண்மையில் உடைந்து விழுந்ததா அல்லது தரையிறக்கப்பட்டதா என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும், இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விளக்கமளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பழிவாங்கலாலேயே ஜனாதிபதியானேன்
‘அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமையின் பயனாகவே, இறுதியில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். ‘இதேவேளை, அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று (29) இடம்பெற்ற அரச நிர்வாகச் சேவையின் 33ஆவது வருட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள்…
பயணிகள் விமானத்தை கடத்தியவர் யார்? (முழு விபரம்)
எகிப்தில் இருந்து சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விமானத்தை கடத்திய நபர் எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா என்பது தெரிய வந்துள்ளது. எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று (29) கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள்இ 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான…
ஜெனீவா செல்லும் கூட்டு எதிர்க்கட்சி
– லியோ நிரோஷ தர்ஷன் – நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்யவே கூட்டு எதிர்க்கட்சி ஜெனீவா செல்லவுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் உதயகம்பில ஆகியோர் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜெனீவா பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிணறு வெட்டும் போது வெளிவந்த மர்மப்பொருட்கள்!
யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் கிணறு வெட்டும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்களை வெளியே எடுத்துள்ளதாகவும், மேலும் ஒரு மர்மப்பொருள் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது எனவும் மேலும் ஒரு மர்மப்பொருள் இன்னமும் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பகுதிக்குச் சென்ற யாழ் பொலிஸார் அதனை பார்வையிட்டதுடன், விசேட அதிரடிப்படையினரிடம் குறித்த…
தண்டனையை நெருங்கும் ஞானசார
ஞானசார தேரரை செப்ரம்பர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை விடுத்தள்ளது. மாலபே பிரதேசத்தில் கிருஸ்தவ தேவாலயமொன்றை தாக்கி சேதப்படுத்திய வழக்கு தொடர்பிலேயே இவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் உட்பட இன்னும் சில பிக்குகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கே ஞானசார தேரவுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ் வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொதுபலசேனா பிக்குகள் நிரபராதிகள் என…
கடத்தப்பட்ட எகிப்து விமானம் சைப்பிரஸில் தரையிறங்கியது
எகிப்தின் அலெக்ஸான்டிரியாவிலிருந்து புறப்பட்டு கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டு, சைப்ரஸின் லர்னாகா விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி விமானத்தில் 80க்கு மேற்பட்டோர் உள்ளதாகவும், அதில் ஒருவர் ஆயுதங்களுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா மீது பிடல் காஸ்ட்ரோ பாய்ச்சல்
தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க…
பம்பலபிட்டி மின்மாற்றியில் தீ : தொடரும் மர்மம்
பம்பலபிட்டி லோரிஸ் வீதியிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியில் இன்று (29) காலை திடீரென தீப்பிடித்துள்ளது. தீயிற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை.
