News
பனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்
பனாமாவில் பண மோசடியுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவற்றுக்குரிய திணைக்களங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வொசிங்டனில் வைத்து தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அமெரிக்கா சென்ற நிதியமைச்சர் அங்கு சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போது, பனாமா மோசடிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் குறித்த விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். வரி சலுகையை பெற்றுக் கொள்வதில்…
முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு
– அஸ்லம் எஸ்.மௌலானா – இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின்போது அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) தலைவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளனர். இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மற்றும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி…
கிளிநொச்சிக்கு புதிய நீதவான் நியமனம்
– சுப்பிரமணியம் பாஸ்கரன் – கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற புதிய நீதவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நீதவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன், இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கல்விகற்று அண்மையில் நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவருட கால வீதி விபத்துக்களில் அதிகரிப்பு!
கடந்த வருடத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இப் புதுவருட காலத்தில் ஏற்பட்டுள்ள வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய வைத்தியசாலையில் தேசிய ஒருங்கிணைப்பாளர் (பயிற்சி) புஸ்பா ரம்ஜானி டி சொய்சா நேற்று(17) தெரிவித்தார். கடந்த 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த வருடத்துத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 8% சதவீத வீழ்ச்சியைக் காட்டிலும், ஏற்பட்டுள்ள வீதி விபத்துக்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீத அதிகரிப்பை…
ஜப்பான் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஜனாதிபதி அனுதாபம்!
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானிய பேரரசர் ஆக்கிஹிட்டோவிற்கு (Emperor Akihito) அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானிய மக்கள் நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் பேரிடர்களை கடந்து முன்னேற வேண்டும் எனவும், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அரசு என்ற ரீதியில் தாமும் இலங்கை மக்களும் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிலநடுக்கத்தினால் ஜப்பானிலுள்ள இலங்கை…
விசேட போக்குவரத்துச் சேவை!
தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக விசேட பஸ் சேவை மற்றும் புகையிரத சேவைகள் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, நுவரெலியா, ஹட்டன், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவ் விசேட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விசேட சேவைக்காக 2000 மேலதிகமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பொது மக்களின் போக்குவரத்து வசதி கருதி தற்காலிகமாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பஸ்,…
நான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு.!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இன்று (18) அதிகாலை நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள மூன்று பல சரக்கு விற்பணை நிலையங்களும், ஒரு மென்பானம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த வர்த்தக நிலையங்களுக்கு போடப்பட்டிருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இந்த கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளார்கள் காத்தான்குடி பொலிஸ்…
சிறுநீரிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மின்சக்தி
சிறுநீரிலிருந்து பெறப்பட்டமின்சக்தியை கொண்ட எரிபொருள் கலமொன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விருத்தி செய்துள்ளனர். மேற்படி சிறுநீரால் செயற்படும் மைக்ரோபியல் எரிபொருள் கலமொன்று ஒரு டொலர் அளவான குறைந்த விலையைக் கொண்டதாகும். எடுத்துச்செல்லக்கூடிய, மீளப் புதுப்பிக்கக்கூடிய இந்தக் கலம் பின்தங்கிய பிராந்தியங்களுக்கு சுற்றுச்சூழல் நட்புறவுடைய சக்தி வளத்தைப் பெற்றுத் தருவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
கத்தாரில் ஸ்பொன்சர் முறை இனி இல்லை
கத்தாரில் அடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. ஸ்பொன்சர் முறையை இல்லாமல் செய்திருக்கிறார்கள். கட்டார் நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டினருக்கு நெஞ்சில் பால் வார்த்த சட்டம் அமுலாகி உள்ளது. அதாவது ஒரு தொழிலாளியின் ஒப்பந்த காலம் இரண்டு வருடம் என்று சொன்னால் அந்த இரண்டு வருட முடிவில் அந்த தொழிலாளி கட்டாரில் விரும்பிய இடத்தில் விரும்பிய நபரிடம் வேலை செய்யலாம் பிடிக்கா விட்டால் போயிட்டே இருக்கலாம். இச்சட்டம் பலருக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளது. அடிமைப்பட்டு வேலை செய்ய வேண்டிய…
ஹிருணிகா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இனந்தெரியாத நபர் ஒருவரை கடத்தியமை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகாவின் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கின் முன்னேற்றமான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கிற்காக சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த…
அரபுக் கல்லூரி மாணவரை காணவில்லை!
– அல்ஹாபிழ் M.R.M ரிஷாத் – B 34/6, kotegoda, hemmathagama என்ற முகவரியை வசிப்படமாகக் கொண்டவரும் தேசிய அடையாள அட்டை இலக்கம்: 960953967 V மெல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனாஹ் அரபுக் கல்லூரியில் ஷரீஆப்பிரிவில் ஐந்தாம் தரத்தில் கற்கும் மேற்படி மாணவரை கடந்த ஐந்து நாட்களாகக் காணவில்லை. மெலிந்த உடற் தோற்றமும்,பொது நிறமுமுடையவர்.இலகுவான தாடியும் வைத்தருப்பவர்,அதிகமாக வெண்ணிற அறப் தோப் அணிந்திருப்பார். இவரைக் கண்டவர்கள், அல்லது விசாரித்தறிந்தவர்கள் அவரைக் காணாது கவலையால் துயருறும் தந்தை,மற்றும் சகேதரர்களுடைய தொலைபேசி இலக்கங்களுடன்…
ஜனாதிபதியின் 7G பயணம் நாட்டிற்கு வரப்பிரசாதமே – மஹிந்த சமரசிங்க
ஜனாதிபதியின் 7G பயணமானது நாட்டிற்கு பெறும் வரப்பிரசாதமென அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் குறித்த மாநாட்டிற்கு ஜனாதிபதிக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் நாடு, கடந்து வந்த பாதை மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் இதன்போது அங்கு கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும்,பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை இதன்போது எதிர்பார்க்கலாம் என இவர் சுட்டிக்காட்டினார்….
